கெழுதகை நண்பர் முத்து நிலவன் அவர்களுக்கு......
" காவல் கொட்டம் " விருதுகள்,விழாக்கள்,விவாதங்கல் (3)என்று தீராதபக்கங்களில் வந்த இடுகைக்கு நீங்கள் எழுதியுள்ள பின்னூட்டத்தைப் படித்தேன்.
விருதுநகர் த .மு.எ.க .ச வில் மிகவும் அற்புதமாக இருந்த இரணடு பேரின் பேச்சு எனக்குப் பிடித்து இருந்தது.ஒருவர்,ஊடகங்கள் பற்றி பேசிய சசி குமாருடையது. மற்றொனறு சு.வெங்கடேசனுடையது. பெரியார் பற்றியும், ராமலிங்க அடிகளார் பற்றியும் அவருடைய கணிப்பு வரலாற்று ரீதியாக மிகவும் சரீ என்று கருதுகிறேன்.
ராஜா ராம் மொஹன் ராய் பிரும்ம சமாஜத்தில் செயல்பட ஆரம்பித்தார். அவருடைய பிரதம சீடர்களில் ஒருவர் சிவநாத சாஸ்திரி என்பவர். அவர் உழைக்கும் தொழிலாளி பற்றி வங்கமொழியில் முதல் முதல் "ஸ்ரமஜீவி" என்று கவிதை எழுதியவர்.இந்தியாவில் அப்பொதுதான் பல்வேரு மாகாணங்களில் சீர்திருத்த அமைப்புகள் தொன்றிவந்தன.இந்த அமைப்புகளை ஒன்று படுத்தி பிரிட்டிஷாருக்கு எதிரக அகில இந்திய அமைப்பை உருவாக்க சிவநாத சாஸ்திரி முயன்றார்.
சாதி மத பேதங்கள் பார்க்காமல் இந்தியா பிரிட்டிஷாரிடமிருந்து விடுபட ஒருஅமைப்பு வேண்டும் என்று கருதி செயல் பட்டார். "சாதி சமய சழக்கை விட்ட " ராமலிங்கரோடு தொடர்பு கொள்ள சென்னை வந்தார். ரங்கநாதம் முதலியார் என்பவர் இதற்கு உதவியாக இருந்தார்..இருவரும்சந்தித்தனர். பேச்சுவார்த்தை நடந்தாது. இறுதியில் ராமலிங்கர் " தான் சமூகத்திலிருந்து விடுபட்டு ஆன்ம விசாரணையில் இறங்கி விட்டதால் உங்களொடு சேர்ந்து செயல்பட முடியாது "என்று மறுத்துவிட்டார்.
நண்பரே! இது வரலாறு. சு.வெங்கடெசனின் பேச்சை இந்த அடிபடையில் நான் வரவேற்கிறேன்.
1 comments:
அன்பு நண்பர் காஸ்யபன் அவர்களுக்கு, உங்களின் இந்தக் கடிதத்தை இன்றுதான் எதார்த்தமாக பார்த்தேன்...!
எனக்கே அனுப்பியிருக்கலாமே? இவ்வளவு நாள் கழித்துப் பார்த்ததை மட்டும்தான் சொல்ல முடிகிறது... பதில் எழுத மனமில்லை தங்கள் நினைவாற்றலுக்கு வாழ்த்துகள்.
-நா.முத்துநிலவன்.
http://valarumkavithai.blogspot.in/
Post a Comment