தேச பக்தர் வ.உ.சி. யின் பேரனும் "தீக்கதிர்" பத்திரிகையும்...........
நான் முதன் முதலாக "தீக்கதிர்" அலுவலகத்திற்குள் நூழையும் போது மதுரைமீனாட்சி அம்மன் கோவில் வடபகுதியிலிருந்த 1ம் நீர் சந்தில் இருந்தது . அங்குதான் தீக்கதிரில் துணையாசிரியர்களாக பணியாற்றிய மூன்று பேரைச்சந்தித்தேன் .த.மு.எ.சவை உருவாக்கிய வர்களில் ஒருவரான தோழர் வரதன் அதில் ஒருவர்.வரதன் அல்லிநகரத்தை சேர்ந்தவர்.விவசாயி.நாட்டுப்புரப்பாடல்கள் பற்றி ஆராய்ந்தவர்.கவிஞர். ஓவியர்.
கட்சி நிகழ்சிகள்பற்றி அல்லி நகரத்தில் தட்டிபோர்டுவைப்பது.சுவர் விளம்பரங்கள் செய்வது அவருடைய முக்கிய பணியாக இருந்தது. அவரோடு சுவர்களில் எழுதவந்தவர் தான் பால் பாண்டி. பால் பாண்டிதான் பின்னாளில் பாரதிராஜாவாக புகழ்பெற்றார்.
இரண்டாமவர் திண்டிவனத்தச்சார்ந்த வசதியான குடும்பப் பின்னணி கொண்ட இளைஞர்.இன்று கோயம்புத்தூரில் பிரபல கிரிமினல் வக்கீலாகத் திகழும் ஞான பாரதி.
மூன்றாமவர் "ஆ.ச."என்று நாங்கள் அன்போடு அழைத்துவந்த ஆவன்னா.சண்முக சுந்தரம் .சுதந்திரம் என்பிறப்புரிமை என்று கூறியதற்காக ராஜத்துரோக குற்றம் சாட்டப்பட்டு தீவாந்திர சிட்சை பெற்று கோவை சிறையில் செக்கிழுத்த தேசபக்தர் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் பேரன்.
என்னிடம் அமெரிக்காவிலிருந்து வரும்" டைம்" பத்திரிகையிலிருந்து ஒரு சிறு பத்தியைக்கொடுத்து தமிழில் எழுதச்சொன்னார்கள். எழுதினேன்."அட! நல்ல எழுதரீங்களே" என்றார். ஆ.ச .என்னுடைய எழுத்து நானே திரும்பிப டிக்கமுடியாத வடிவழகை கொண்டது. "இவ்வளவு பொடியா எழுதாதீங்க. அச்சுகோக்கிரவங்க படிகணும்லா. எழுத்துக்களை சேத்து சேத்து எழுதவேண்டாம்.தனித்தனியா கலக்கம் கலக்கமா எழுதுங்க "என்றார்.ஆ.ச.
இந்த மூன்று ஆசிரியர்களுக்கும் மாதம் 30 ரூ சம்பளம்.காபிக்காக தினம் 4அணா படிக்காசு. தினம் மாலை 4மணிக்கு அதை வாங்கிகொண்டு அருகில் உள்ள கையெந்துபவனில் வடையும் காப்பியும் சாப்பிடலாம்.வரதன் காப்பி சாப்பிட மாட்டார். அதற்கு இரண்டு இட்லி சாப்பிடுவார்.விவசாயி அல்லவா!
கிட்டத்தட்ட இரண்டுமாதங்களுக்குப்பிறகுதான் ஆ.சா.பற்றி தெரிந்து கொண்டேன். ஆகா! எப்பேற்பட்ட குடும்பம்.எவ்வளவு அண்மை!இப்போது நினத்தாலும் புல்லரிக்கிறது.!
எந்த உதவியும் இல்லாமல் குடும்பம்.படித்த ஆ.சவிற்கு காமராஜர் உதவினார். "பிளாக் டெவலப்மேண்ட் ஆபீசர் பதவியளித்தார்.புதுக்கோட்டை அருகில் வேலை..வி.பி சிந்தனும் காமராஜரும் வெல்லுர் சிறையில் ஒன்றாயிருந்தவர்கள்.இருவருக்கும் ஆங்கிலம் தெரியாது. அவர்களிருவருக்கும் ஆங்கிலம் கற்க ஆசை .சிறையில் பி.ஆர் மூலம் ஆங்கிலம் கற்றார்கள்.ஆ.ச.வுக்கு விபிசி மூலம் இடதுசாரிகளொடு பழக்கம் ஏற்பட்டது. "ஒரு கட்டத்தில் அரசுபணியில் இருக்கமுடியாது என்ற நில எற்பட்டது..முழுநேர ஊழியராக முடிவு செய்தேன்.வி.பி.சி தான் தீக்கதிரில் போய் வேலை செய் என்று அனுப்பிவைத்தார்".என்றார் ஆ.ச.
ஆ.சவிற்கு ஒருமகளூம் மகனும் உண்டூ .மனைவி அரசுமருத்துவ மனையில் பணியாற்றினார். அவருடைய மகளுக்கு சிறு வயதிலேயே உடல் நலம் பாதிக்கப்பட்டதால் 78ம் ஆண்டு வாக்கில் சென்னை சென்றுவிட்டார். சட்டம்படித்தவராதலால் தோழர் செந்தில்நதனோடு ஒரே அறையில் தொழில் செய்தார். 2004 ம் ஆண்டு மறைந்தார்.
7 comments:
இலங்கையின் போர் விதிமீறல் பற்றி இடுகை இடுங்களேன் அய்யா ?
சிவகுமரன் அவர்களே! போர் விதிமீறல்களா? மனித உரிமை மீறல் களா? பாலசந்திரன் என்ற அந்தச்சிறுவனை சுட்டுக் கொன்றதையா? ஏன் இப்பொது கிளப்புகிறார்கள்? அமெரிக்கா எதை ஆதரிக்கிறது? ஐ.நா அறிக்கையையா? ஐரொப்பிய கமிஷன் அறிக்கையையா? அல்லது இலங்கை அரசின் அறிக்கையையா? மூள்ளி வாய்க்கால் கோடூரத்திற்கு முன்பே 50000 முஸ்லீம்களை வடக்கிலிருந்து அகதிகளாக விரட்டியதையா?எதை நண்பரே?எதை எழுத வேண்டும்?---காஸ்யபன்
மிகவும் சுவாரசியமான நினைவு.
'கையேந்தி பவன்' என்றால் என்ன?
அப்பாதுரை அவர்களே! ரோட்டொரத்தில் இட்லி,வடை,காபி விற்கும் சாமான்யர்களின் கடைகள்.அங்கு நாற்காலிகள்,டேபிள்கள் இருக்காது. இலையில் போட்டு கையில் கொடுப்பார்கள்.ரோட்டில் நின்று கொண்டே சாப்பிடவேண்டும் . மலிவாக இருக்கும்.---காஸ்யபன்.
நல்ல பெயர்! :)
//அமெரிக்கா எதை ஆதரிக்கிறது?// சரியான கேள்வி.இலங்கை அரசு நியமித்த கமிஷனின் அறிக்கையை அமல் செய்ய இவ்வளவு ஆர்பாட்டமா?
Post a Comment