தியேட்டருக்குப் போய் பாருங்கள்.....
சமீபத்தில் "கஹானி "என்ற திரைப்படம் பார்க்கச்சென்றிருந்தேன். நான்,என் மனைவி,அவருடை ய சகோதரி ஆகிய மூவரும் .டிக்கெட் ஒன்று 180 ரூ. இரவு சிற்றுண்டி அருந்திவிட்டு வந்தோம். கார் பெற்றொல் சிலவையும் கணக்குப்பார்த்தால் கிட்டத்தட்ட 900ரூ செலவாகியிருக்கும்.
சென்றவாரம் நண்பர் அழைத்திருந்தார் விருந்து முடிந்ததும் "ஹோம் தியேட்டரில் " படம் பார்க்க தொடங்கினோம். சமீபத்தில் தமிழ்நாட்டில் வெளியாகி ஒரு வாரம் தான் ஆகியிருக்கும்படம். ரசித்துபார்த்தேன். எனக்குப் பிடித்து இருந்தது. அதன் இயக்குனருக்கு கை பெசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்தினேன்.இசை , படப்பிடிப்பு, கலை என்று புகழ்ந்தேன் முடிக்கும்போது இயக்குனர் " திருட்டு விடியோவா". என்று கெட்டார்.
"Cine Max-H.D; s.t.productions என்று போட்டிருந்தது" என்றேன் .
எனது நண்பர் ஒருவர் விமானப்படையில் இருந்தார். நேர்மையானவர். மற்றவர்களும்நேர்மையாக இருக்க வேண்டும் என்று வற்புருத்துபவர்.திரைப்படங்களை விடியோவில் பார்க்கக் கூடாது என்று விரதம் எடுத்தவர். அது தவறு என்று கருதுபவர்.இப்போது நாகபுரியில் இல்லை .கோவையில் இருக்கிறார். அவர் அப்படி இருக்க உரிமையுண்டு.நாம் நிம்மதியாகத் தூங்குகிறொம் என்றால் அவரைப் போன்றவர்கள் தூங்காமல் எல்லையைக் காக்கிறார்கள் என்பதால் தான் .
தொலைக்காட்சியில் திரைப்பட விமரிசனங்களப் பார்ப்பேன். ஒவ்வொரு தயரிப்பாளர்களும்,நடிகர்களும்,இயக்குனர்களும் தியேட்டருக்குச்சென்று பாருங்கள் என்று தவறாமல் வேண்டுகோள் விடுப்பார்கள்.நியாயமும் கூட!
திருச்சி,மதுரை,நெல்லை கோவை போன்ற நகரங்களிலும் டிக்கட் கொடுத்து போக முடியாத அளவுக்கு . ஏறிவிட்டது. ஒருநாளைக்கு 500 ரூ சம்பாதிக்கும் கொத்தனாருக்கும் அதே விலைதான். விடியோ மலிவாக கிடைக்கிறது. 10 ரூ க்கு தகடு .வீட்டிலேயே பார்த்துவிடலாம். ஆனால் தயாரிப்பாளர் என்ன ஆவார்?
திரைப்படத்துறையின் Economics விசித்திரமானது. மற்றதுறையில் நூறு ரூ க்கு ரசீது கோடுத்தால் நூரு ரூ தருவார்கள். இங்கு ஒருகோடிக்கு ரசீது கொடுத்தால் இரண்டு கோடி தருவார்கள்.சரிபாதி கருப்பு.
பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஷாருக்கான் ஒருபடத்திற்கு 16 கோடி வாங்குவதாகச்சொன்னார்கள். விலைவாசி அவருக்கும் எறத்தானே செய்யும்.தமிழ் நாட்டு நடிகர்களுக்கு,6 கோடி,7 கோடி 10 கொடி ,ஏன் 25 கொடி கொடுப்பதாகக் கேள்விப்படுகிறோம். திரைப்படத்துறையில் நுழைந்து கற்பழியாமல் வந்தவன் என்று முறையில் எனக்கு நேரடி அனுபவம் உண்டு .நடிகர்கள், இயக்குனர்கள் ஆகியோர் வேறு. குட்டி நடிக நடிகைகள் படும் பாடு வேறு.
நடிக்க வந்து வலசரவாக்கத்திலும் கோயம்பேட்டிலும் காய்கறி விற்று ஜீவிக்கும் பேரிளம் பெண்களைகேட்டால் பாடுகள் தெரியும்.பகலில் வெள்ளையடித்துவிட்டு இரவில்
ஸ்டூடியோவில் உழைக்கும் தொழிலாளியைக் கேட்டால் தெரியும் . இவர்களுக்கு ஊதியம் கொடுக்க மறுப்பவர்கள் தான் இந்ததயாரிப்பாளர்கள். தயாரிப்புச்செலவை குறைக்க வேண்டும் என்று ஓலமிடுவார்கள்.தயாரிப்பாளர்களுக்கு பணம் எப்படிவருகிறது?. காவேரிக்கரையில் பொன்விளையும் நிலத்தைவிற்று போடும் தயாரிப்பாளர்கள் இப்போது இல்லை ஆடிட்டர்களையும்,வருமான வரி கணக்கர்களையும் நம்பி இருக்கும் தயாரிப்பாளர்கள் தான் உண்டு.இருந்தும்
" தியேட்டருக்குப் போய் பாருங்கள் " என்று ஜபம் செய்வார்கள்.!
10 comments:
அன்பு காஸ்யபன்
எங்கோ ஆரம்பித்து எங்கோ முடித்து விட்டீர்கள்.
திரைப் படம் மட்டும் அல்ல, சமூகம் எதையும் பொது நோக்கிலிருந்து நோக்காது. தனக்கு, தனது,
தன்னுடைய நலன் சார்ந்து பார்க்கத் தான் நாம் பழக்கப் படுத்தப்பட்டிருக்கிறோம்.
குழந்தைகளுக்கும் அதே நீதி தான்..
உனக்கென்ன வந்தது உன் பாட்டைப் பாரு..இது தான் பள்ளி மாணவருக்கு அவனது தாயின் போதனை.
நீ வந்து சேர வேண்டியது தானடா, உன் தலையிலா கம்பெனி ஓடுது, இது அப்பா!
தண்ணீர் தண்ணீர் படத்தில்
சரிதா மரித்து நியாயம் கேட்க அந்த அரசுத் துறை துணை அதிகாரி நேரே அதே அறச் சீற்றத்துடன் வந்து
தனது உயர் அதிகாரியுடன் பேசுவான், சார் அத்திப்பட்டிக்குத் தண்ணி கிடைக்கலயாமே சார் என்று..
அவர் சொல்வார், இங்க பாரு, அந்த ஊருக்குத் தண்ணி வந்தாலும்
சரி, இல்லன்னாலும் சரி, உன்னோட பே ஸ்கேல் குறையாது,
வேலையைப் பாப்பியா என்று...
திரைத் துறை எல்லா அக்கிரமங்கள், அராஜகங்கள் பண்ணிக் கொண்டே
பூஜை, விரதம், சென்டிமென்ட், நியூமராலாஜி, அஸ்டிராலஜி எல்லாம் பாத்து அப்புறம் அயோக்கியத் தனத்தையே தொடரும் ஒரு இடம்.
அங்கே எல்லாம் நியாயம்.
இல்லை என்றால், திரை கலைஞர்கள் எல்லாம் சேர்ந்து லஞ்சம், கறுப்புப் பணம்,ஊழல் இவற்றை எதிர்த்து போராட்டம் நடந்தால் அதிலும் சேருவார்களா.
உங்கள் விஷயத்திற்கு வருவோம்,
கைக்காசு போட்டு தியேட்டர் செல்வதற்கு வழி இல்லாதவன் தவறா, திருட்டு சி டி போடுபவன் தவறா
எல்லாக் கட்டணத்தையும் மேலே உயர்த்தியிருப்போர் தவறா..
அநீதியான சட்டங்கள், கொள்கைகள், வழிமுறைகள் இவற்றை எதிர்த்துப் போராடத் தயாரில்லாத மக்கள்
பிரிட்ஜ் ஏறாமல் தண்டவாளத்தின் குறுக்கே தான் கடப்பார்கள்.
அரை டிக்கெட் வாங்கும் வயதைக் குழந்தைக்குத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பார்கள்.
கியூவில் தனக்குத் தெரிந்தவர் தட்டுப்பட்டால் ஒரு விதி முறையும், இல்லாவிட்டால் நேர்மையும்
கடைப் ப்டியப்பார்கள்
போராட்ட குணம் என்பது தியாகத்தை முன் நிபந்தனை ஆக்குகிறது
எல்லோருக்கும் என்று போராடுவது தனக்கும் என்பதன் விரிந்த வடிவம்
என்பது தெரியாத வண்ணம் முடக்கப் பட்டிருக்கும் மக்கள் தனிநபராக விஷயத்தைப் பார்ப்பார்கள்
ஆனாலும் அவர்களது அதிருப்தி கோபம் போன்றவற்றை நூதனமாக
வெளிப்படுத்துவார்கள்..அதுவும் தியேட்டரில் போடப்படும் நாளுக்குக் காத்திருப்போம்.
ஏனெனில் இதெல்லாம் திருட்டு சி டி யில் வராது.
எஸ் வி வேணுகோபாலன்
சிடியில் படம் பார்ப்பது தவறில்லை, ஒரிஜினல் சிடியை தயாரிப்பாள்ர்களே விற்றால் என்ன வந்தது. மலையாள் சினிமா வளைகுடா நாடுகளில் படம் ரிலீசான ஒரு வாரத்திற்குள் அதன் ஒரிஜினல் சிடி வந்துவிடுகிறது. காரணம் என்ன? எல்லாம் குறைந்த பட்ஜெட் கட்டுபடியாகிறது. தமிழ்நாட்டில் உள்ளதுபோல் திருட்டு சிடி பிரச்ச்னை அங்கே இல்லை.
வீடியோவில் படம் பார்க்கலாம் என்று நான் மாறியதற்கு. ரிலையன்ஸ் போன்ற பெரு நிறுவனங்கள் திரையரங்குகளை விலைக்கு வாங்கி செய்த அட்டகாசங்கள்தான் காரணம். திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள் என்று வேண்டுகோள் விடுப்பவர்கள் கட்டணக் கொள்ளைக்கு எதிராகக் குரல் கொடுப்பதில்லை என்பதுதான் மனமாற்றத்திற்குக் காரணம். ஆனால். திரையரங்குக்குப் போய் படம் பார்ப்பதில் உள்ள மகிழ்ச்சி என்பதே தனிதான்.
= விமானப்படை நண்பர்
வீடியோவில் படம் பார்க்கலாம் என்று நான் மாறியதற்கு. ரிலையன்ஸ் போன்ற பெரு நிறுவனங்கள் திரையரங்குகளை விலைக்கு வாங்கி செய்த அட்டகாசங்கள்தான் காரணம். திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள் என்று வேண்டுகோள் விடுப்பவர்கள் கட்டணக் கொள்ளைக்கு எதிராகக் குரல் கொடுப்பதில்லை என்பதுதான் மனமாற்றத்திற்குக் காரணம். ஆனால். திரையரங்குக்குப் போய் படம் பார்ப்பதில் உள்ள மகிழ்ச்சி என்பதே தனிதான்.
= விமானப்படை நண்பர்
1) அயோக்கியர்களின் முதல் புகலிடம் சினிமாத்துறைதான்.கறுப்புப்பணத்தின் முதல் பிறப்பிடமும் அதுவே. சமூகத்தின் அனைத்து சாக்கடைகளையும் நியாயப்படுத்தும் அல்லது புதிய சாக்கடைகளை அறிமுகப்படுத்தும் திரைப்படங்களை இவர்கள் எடுத்து தள்ளுவார்கள்; சின்னப்புள்ளத்தனமான ‘உபதேசங்களை’ அள்ளி வாரி விடுவார்கள்;இப்படியான ஆகப்பெரும் ’சமூகசேவை’ செய்யும் படங்களில் நடிக்கும் நடிகை நடிகர்களுக்கு பல கோடிகளை கொடுப்பார்கள், அத்தனையும் கருப்பில். இவர்கள்தான் 32 ரூபாய் சம்பாதிக்கும் அன்றாடம் காய்ச்சி இந்தியனுக்கு ‘வருமான வரியை முறயா கட்டி தேசத்த காப்பாத்துங்க’ன்னு வருமானவரித்துறை விளம்பரத்துல் உபதேசம் செய்வாங்க. இவரு ரொம்ப யோக்கியரு என்று நாம் நினைக்கின்ற எந்த முன்னணி நடிகரும் தன் உண்மையான ஊதியத்தை இதுவரை பகிரங்கமாக சொன்னதாக சரித்திரம் இல்லை!
2) 15 பைசா மட்டுமே கொடுத்து நான் மதுரை இம்பீரியல் தியேட்டரில் படம் பார்த்திருக்கேன், 25 பைசா மட்டுமே கொடுத்து ஆனையூர் வெங்கடாசலபதியில் படம் பார்த்திருக்கேன்.முருக்கு, கடல் மிட்டாய், டீ, காப்பி இப்படி எது சாப்பிட்டாலும் மொத்த செலவும் ஒரு ரூபாய தாண்டாது.வீட்டில் இருந்து தின்பண்டம் எடுத்துசெல்ல தடயும் இருந்ததில்லை. இப்போது? டிக்கெட் 200 ரூபாய், காப்பி 40 ரூபாய், பாப்கார்ன் 40 ரூபாய், தின்பண்டங்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை. ஒத்த ரூபாய் ரேசன் அரிசி வாங்க வீதியில் வேகாத வெயிலில் வரிசையில் நிற்கும் எந்த தமிழ்க்குடும்பம் இத்தனை செலவு செய்து பார்த்தே தீர வேண்டிய அளவுக்கு அப்படி என்னதான் இவர்கள் படத்தை எடுத்து புரட்சி செய்துவிட்டார்கள்? தோழர், ஆகச்சிறந்த படம் என்று நாம் சொல்கின்ற எந்தப்படமும் இந்த உலகத்தில் எடுக்கப்படாது இருந்திருந்தாலும் இந்த உலகம் இயங்கிக் கொண்டேதான் இருக்கும். அவ்வாறிருக்க குப்பைகளை மட்டுமே எடுத்துத்தள்ளும் தமிழ் கருப்புப்பண தயாரிப்பு முதலைகள் ‘அய்யோ! சிடியில் பாக்காதீங்க! என்று விடும் கண்ணீர் எதில் சேர்த்தி? திரைப்படம் என்பது வெகுஜனங்களின் பொழுதுபோக்கு சாதனம் என்ற நிலையில் இருந்து high class society யின் entertainment என்று மாற்றியது சாமானியன் அல்லன், இந்த கருப்புப்பண தயாரிப்பாளர்கள்+நடிகர்கள்+திரையரங்க உரிமையாளர்கள் கூட்டணிதான்.இவ்வாறு இருக்க என்னைப்பொருத்தவரை திரைப்பட சிடி என்றுதான் சொல்வேன், திருட்டு சிடி என்று சொல்வது நம்மை முட்டாள்களாக்கி கொண்டிருக்கும் இந்தக் கூட்டணிதான்.நான் 10 ரூபாய் சிடியின் ஆதரவாளன், இதை சொல்வதில் எனக்கு தயக்கமும் இல்லை. ...இக்பால்
நான் மனைவி , மகனுடன் வருடத்திற்கு ஒரு படம் பார்ப்பதே அபூர்வம். எந்திரன் பார்த்தோம். 700 ரூபாய் செலவானது. 2 வருடமாகி விட்டது. பையன் சி.டி யாவது வாங்கித் தாருங்கள் என்கிறான். கர்ணன், பாரதி சிடியும், கார்ட்டூன் சி.டியும் வாங்கிக் கொடுத்தேன். தியேட்டருக்கு செல்ல வசதியில்லை. சி.டியில் பார்க்க மனதில்லை. வரட்டுக் கௌரவம் பார்ப்பவன் என்கிறார்கள் . என்ன செய்ய. ?
வேணு அவர்களே நன்றி!
ஹரிஹரன் அவர்களே! கேரளத்துதோழர்கள் சிறுகக்கட்டி பெருகி வாழ நிற்பவர்கள்.!
இக்பால் அவர்களே! Getting fine It seems.இவ்வளவு கோபம் வேண்டாமே!
சிவகுமரன் அவர்களே! தீக்கதிர் பத்திரிகையில் திரைவிமரிசனம் எழுதிக்கொண்டிருந்தேன்.ஆசிரியர் கே.முத்தையா அவர்கள் பூனே திரைப்படக்கல்லூரி நடத்தும் Filam Appriciation course போய் வாரும் என்று அனுப்பினார் . (1980).பத்து நாளில் 250 படம் பார்த்தேன்.சதீஷ் பகதூர்,பி.கே.நாயர், சியாமளா வனரசே,நிமாய் கோஷ் என்ற ஜாம்பவான் களிடம் கற்றுக்கொண்டேன்.ஒரு புரிதல் கிடத்தது. அது மட்டுமல்ல. என் எழுத்தும் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் மாறியது. ஒரு திரைப்படத்தின் மூலமாக புரட்சியைக் கொண்டுவந்துவிட முடியும் என்பது மூடத்தனம். நன்றி ---காஸ்யபன்.
கனெஷ் அவர்களே! நன்றி ---காஸ்யபன்.
இதை விட இன்னும் சில மல்டிப்லெக்ஸ் தியேட்டர்களில் தண்ணீர் பாட்டில் கூட எடுத்து செல்ல அனுமதி இல்லை. இது ஒரு சங்கிலி கொள்ளைக்காரர்களின் வலை போல ஆகிவிட்டது.
Post a Comment