Thursday, April 10, 2014

ஜெஷோதா என்ற அபலையின் கண்ணீரை 

வாக்குகளாக்கும் கொடூரம் .......!!!


அந்தச் சிறுமிக்கு பதினைந்து வயதில் திருமணமாயிற்று ! அவள் கணவன் பதினான்கு நாட்கள் அவளோடு வாழ்ந்தான் ! பதினைந்தாம் நாள் அவளைவிட்டு பிரிந்தான் ! திரும்பிக்கூட பார்க்கவில்லை ! நாற்பத்தி ஆறு வருடங்கள் ஓடிவிட்டன ! இப்போது அவனுக்கு அவள் நினவு தட்டியுள்ளது ! அவள்தான் என் மனைவி என்று சொந்தம் கொண்டாட ஆரம்பித்துள்ளான் !

அந்தச் சிறுமியின் பெயர் ஜெஷோதா ! அவள் கணவனின் பெயர்  
 "ந். ந். நரேந்திர மோடி "!

பாவம் ! அந்த அபலைப் பெண் தந்தை வீட்டிற்கு சென்றாள் ! படித்தாள் !  பள்ளி ஆசிரியையாக பணியாற்றினாள் ! ஒய்வு பெற்று மாதம் 14000ரூ பென்ஷனில் வாழ்கிறாள் ! 

அவள் கணவன் மோடி! மக்கள் சேவைக்கு செல்வதாக கூறி ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தில் சேர்ந்தான் ! குஜராத் மாநில முதலமைசராக ஆனான் ! உலகத்திற்கு தான் ஒருபிரம்மசாரி என்று கூறிக்கொண்டான் !

உலக  பத்திரிகைகள் இந்தியாவில் நடக்கும் தேர்தல் மோடி-ராகுல் என்ற இரண்டு பிரம்மசாரிகளுக்கு இடையே நடக்கும் தேர்தல் என்று வர்ணிக்கின்றன !

ஒரு சின்னஞ்சிறு பெண்ணீன் வாழ்க்கையை கெடுத்தவன் என்று உங்களுக்கு கோபம் வரலாம் !

ஆனால் அதையும்வாக்குகளாக மாற்றும் தந்திரம் மோடிக்கும் அவர் ஆதரவாளர்களுக்கும் உண்டு !

இந்தி ,மராத்தி ,குஜராத்தி பத்திரிகைகள் இதை எப்படி எழுதுகின்றன தெரியுமா?

என்ன இருந்தாலும் ஜெஷோதா "இந்து" பெண் ! 

அவள் கணவன் முதலமைச்சராக வேண்டும் என்று காலில் செருப்பணியாமல் விரதம் இருந்தாள் !

"எனக்கு இனி என்ன வேண்டும் ! அவர் என்னை  மனைவி என்று அங்கீகரித்தால் போதும்" என்று ஜெஷோத தன்னிடம்கூறியதாக அவருடைய சிநேகிதிகுறிப்பிட்டாராம் ! கார்ப்ரேட் பத்திரிகைகள் எழுதுகின்றான !

"ஜெஷோதா இப்போதெல்லம் "அரிசி" சோறு சாப்பிடுவதில்லையாம்! தினம் ஒருவேளை  தான் சாப்பிடுகிறாராம் ! தன கணவன் பிரதமராக வேண்டும் என்பது தான் அவருடைய விரதத்திற்கு காரணமாம் " 

"உற்ற தோழிகளுடன் தீர்த்தயாத்திரை போயிருக்கிறார் கணவனுக்காக!"
  பத்திரிகைகள் எழுதுகின்றன! 

பா.ஜ.க என்பது ஒரு அரசியல் கட்சி அல்ல !

ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க எதை வேண்டுமானாலும் செய்யும் கொடுர புத்தி கொண்டவர்களின் கூடாரம் !!!





























































 










































1 comments:

”தளிர் சுரேஷ்” said...

மோடியின் மனைவி குறித்து அறிந்ததும் மோடி மீது இருந்த மதிப்பு ஒரு படி குறைந்து போனது. மனைவியை கைவிட்டவர் நாளை நாட்டையா காப்பாற்ற போகிறார்?