Thursday, April 17, 2014

ஆட்சிக்கு வராத போதே .......!!!


"செம்மலர் "பத்திரிகையில்   நான் எழுதிய கதை களை மொழிபெயர்ப்பாளர் முத்து மீனாட்சி அவர்கள் அவ்வப்போது இந்தியிலும்,சம்ஸ்கிருதத்திலும் மொழி பெயர்க்க அவை பத்திரிகைகளில்   வெளிவந்தன !

இந்தியில் அதன ஒரு தொகுப்பாக கொண்டுவர விரும்பினேன் ! பதிப்பகத்தை நாடினேன் ! கிட்டத்தட்ட பதினெட்டு கதைகளை தொகுப்பாக்கினேன் ! 

புத்தகம் வெளியிடும் முன்பாக மதிப்பிற்குறிய "சீத்தாரம் எச்சூரி " அவர்களிடம் முன்னுரை வாங்க ஆசைப்பட்டேன் ! தோழர் கே. வரதராஜன் அவர்கள் உற்சாகப்படுத்தி வாங்கித்தந்தார்கள் !

மிக்க  மகிழ்ச்சியோடு முன்னுரையும் அச்சாகியது !

பதிப்பக த்திலிருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்கள் ! 

தொகுப்பில் புராண மறுவாசிப்பு கதைகளும் இருந்தன ! குறிப்பாக திரௌபதி கர்ணன் மீது ஆசை கொண்டதும்  அதன அவள் யமதூதனிடம் ஒப்புக்கொள்வதும் அதனால் அவள் சொர்க்கத்திற்குள் அனுமதிக்கப்படாமல் பேயாக அலைவதும் கதையின் மையப்புள்ளீயாகும் !

பதிப்பகத்திற்கு வந்திருந்த எழுத்தாளர் ஒருவர் புத்தகத்தின் rough copy ஏய் படித்துவிட்டு பதிபகத்தாரிடம் " ஏன்யா ! இந்த ஊருல இந்த புத்தகத்தை வெளியிடுகிறாயே ! உன் அச்சகம், ஷோ ரூம் அத்தனையையும் அடிச்சு நொறுக்கி விடுவானுக " என்றுகூறியிருக்கிறார் !

பயந்து போன பதிப்பாளர் , "அந்த கதையை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக வேறுகதை தாருங்கள் ! சேர்த்து விடுகிறேன் "என்றார் !

பதிப்பாளரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்த விருப்பமில்லை !

அதேசமயம் என் மதிப்பிற்குறிய எச்சூரி அவர்கள்முன்னுரை எழுதிய பிறகு அதனை மாற்ற மனமில்லை !

இறுதியில் ஒரு ஏற்பாட்டிற்கு இருவரும்  உடன் பட்டோம் 

"இந்த தொகுப்பினால் வரும் எல்லாவித மான சர்ச்சைக்கும மூல எழுத்தாளரான காஸ்யபன் அவர்களே  பொறுப்பு " என்று எழுதிக் கொடுத்தேன் 

இது புத்தகத்தில் Disclaimer ஆக அச்சடிக்கப்பட்டு 2007ம் ஆண்டு வெளிவந்தது ! 
 
பாவம் ! இவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால், 
ஜோ ,பத்ரி,குருஸ் என்ன செய்யப்ப் போகிறார்களோ  !!!












1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

புத்தகம் வெளியிடக் கூடவா சிக்கல்.
என்ன உலகம் ஐயா இது