skip to main |
skip to sidebar
"நீயா ? நானா ? " வும்
டாக்டர்களும் ...........!
சென்ற ஞாயிறு (17-8-14 ) அன்று விஜய் தொலைக்காட்சியின் "நீயா ? நானா ? " நிகழ்ச்சியில் மரூத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி விவாதம் நடந்தது ! ஒருபக்கம் மருத்துவர்களும்மறுபக்கம் பொதுமக்களும் இருந்தனர் ! பொது மக்கள் பக்கத்தில் ஒரு சில டாக்டர்களும் பங்கு பெற்றனர் !
டாக்டர்கள் test என்றும் ,LAB என்றும் அநியாயத்திற்கு காசு புடுங்குகிறார்கள் ! தேவையற்ற டெஸ்ட் களை எடுக்க சொல்கிறார்கள் ! அவர்களுக்கும் இந்த LAB களுக்கும் தொடர்பு இருக்கிறது ! என்று குற்றச்சாட்டு எழுந்தது !
டாக்டர்கள் இதனை எதிர்த்தனர் ! தேவையான டெஸ்ட் களை தான் எடுக்கிறோம் ! என்றனர் !
எதிர் தரப்பில் இருந்த ஒரு டாக்டர் பெரிய மருத்துவமனைகளில் டாக்டர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் ! அவர்கள் முலம் லேப் களுக்கு மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட அளவு நோயாளிகள் அனுப்பப் படவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்க படுவதாக கூறினார் !
டாக்டர் கோபிநாத் என்பவர் Aiims நிறுவனத்தின் அறிக்கையை சுட்டி காட்டி தேவையற்ற ,கூடுதலான டேஸ்ட்களால் பயனில்லை என்று நிறுவினார் !
நடுவர்களாக புகழ்பெற்ற டாக்டர் ராஜ்குமார் ,டாக்டர் புகழேந்தி ஆகியொர் வந்திருந்தனர் !
டாக்டர் ராஜ்குமார் பல குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொண்டார் ! உங்களுடைய சொந்த மாற்றல், பதவி உயர்வு என்று ஒன்றுபட்டு போராடும் டாக்டர்கள் மக்களுக்காக ஏன் குரல்கொடுப்பதில்லை என்று கோபிநாத் "நீயா? நானா?" சார்பில் கேட்டுக் கொண்டார் !
விஷயம் இதோடு முடிந்தது என்று தான் எண்ணியிருந்தோம் !
திங்கள் அன்று முக நூலில் விஜய் தொலைக்காட்சிக்கு எதிராக குரல்கள் வெளி வந்தன ! இந்திய மருத்துவர் (IMA )சங்கத்தின் சார்பில் கண்டன அறிக்கையும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் அறிவிப்புகள் வந்துள்ளன !
மக்களின் ஆரோக்கியத்திற்கு பொறுப்பானவர்கள் டாக்டர்கள் ! Doctors health care ! இது இப்போது நிவாகத்தின் பொறுப்பகிவிட்டது !Management health care ஆகிவிட்டது என்று டாக்டர் கோபிநாத் கூறினார் !
"Education and Medicare are the noblest profession " என்பார்கள் !
மக்களை நேசிக்கும் டாக்டர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் !
அவர்கள் தலையிட்டு நிலைமையை சீர்செய்ய வேண்டும் !
2 comments:
for my grandkid who is just 10 and here for a vacation from USA, the child specialist suggested to take blood test, hormone test, Thyroid tests just for the complaint, that he did not go for motion for the last four days.
That was a total fee of Rs.3500/- and after taking the reports which showed no abornormality of any nature, I consulted my family physician who suggested that let us give five bananas ripe and warm water.
That is the difference between a doctor who has just completed his M.D and DNB at a cost of nearly 1 crore and a doctor who gets a fee of Rs.20 whatever be the ailment.
subbu thatha.
இன்று மருத்துவம் வணிகமயமாகிவிட்டது ஐயா.
நேர்மையான மருத்துவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், ஆனார் அவர்களைக் காண்பது அரிது ஐயா.
மருத்துவம் சார்ந்த எனது அனுபவத்தினை கீழ்க் கண்ட இணைப்பில் பகிர்ந்துள்ளேன்.
நேரமிருக்கும் பொழுது வருகை தாருங்கள் ஐயா
http://karanthaijayakumar.blogspot.com/2012_02_01_archive.html
Post a Comment