Saturday, August 23, 2014

யு .ஆர். அனந்த  முர்த்தி அவர்கள்

 இலக்கியாவாதி  மட்டுமல்ல .......!!!

   

கன்னட இலக்கியத்தின் நவீன  போக்கினை "நவ்வா " இயக்கம் என்று அழைக்கிறார்கள் ! உடுப்பி ராஜகோபாலாச்சார்ய அன்ந்தமூர்த்தி அந்த இயக்கத்தின் முகமும் முகவரியும் ஆவார் !

 அவர் எழுதிய முதல்நாவலான "சம்ஸ்காரா " கன்னட இலக்கிய உலகை புரட்டிப் போட்டது ! அதன் திரைப்பட வடிவம் கன்னட திரைப்பட உலகை சர்வதேச அளவிற்கு  கொண்டு சென்றது ! 

 அடிப்படையில் பழமை வாதத்தையும் ,பத்தாம் பசலித்தனத்தையும் வெறுப்பவர் யு.ஆர் அ ! 2004ம்  பா .ஜ .க. எதிர்த்து போட்டியிட்டவர் அவர் ! இந்துக்கள் மதவெறி பிடித்தவர்கள் ஆனால்   இந்தியாவை காப்பாற்ற  முடியாது என்று  நம்புபவர் அவர் !

அவசர நிலைக் காலத்தில் கடுமையாக எதிர்த்தவர் ! இந்திராவை   ஜனதா கட்சி எதிர்த்தபோது ஆதரித்தார் !  வசதி உள்ளவரகளின் கூட்டு தான் ஜனதா கட்சி என்று உணர்ந்து மனம் சஞசலப்பட்டார் !

பின்னாளில் தேவ கவுடா பதவிக்காக பா ஜ.கவுடன் கூடிய போது அவரைக் கடுமையாக  விமரிசித்தார் !     

ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடன்  நட்பு வைத்திருந்தார் !   அவசரநிலையின்   போது பெர்ணாண்டஸ் தலை மறவாயிருந்தார் !  தயாரிப்பாளர் சீதாராம ரெட்டியின்  உதவியோடு அவரைச் சந்திதார் !

"காரில் செல்லும் போது என் கண்களை கட்டிகொண்டேன் !  போலிஸ் என்னைச் சித்திரவதை  செய்தால்  மறைவிடத்தை சொல்லாமல் இருக்க  ஏற்பாடு! ஒரு சர்ச்- ஒரு அறையிலோருகட்டில் ! அதில்மாறுவேடத்தில் ஜார்ஜ் இருந்தார் ! வெகு நேரம் இலக்கியம் அரசியல் என்று  பேசினோம் ! அவசர நிலை மக்களை நிலைகுலைத்துள்ளது! அரண்டு போய் உள்ளனர் ! அவர்கள் மீள  வேண்டும் ! நடிகை சினேகலதா ரெட்டி விதான் சொவ்தாவில் யாரும்பயன்படுத்தாத சிதிலமான கழிப்பறையில் இரவு 12 மணிக்கு வெடிக்கும்  குண்டினை வைக்கப்  போகிறார் ! இதன் மூலம் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படாது ! ஆனால் இந்த சம்பவம் மக்கள்   பயத்தை போக்கும் ! நீங்கள் உதவவேண்டும்   என்று  என்னைக்கேட்டுக்   கொண்டார் ! "             

தன்னுடைய நினைவலையில் யு ஆர் .அ எழுதியுள்ளார் !

அவர் எழுதி வெளியான "சம்ஸ்காரா "படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சினேகலதா ரெட்டி ! சிதாராமி ரெட்டியின் !மனைவியுமாவார்  ! ஆனால் போலீசவரைப்பிடித்துவிட்டது ! பெர்ணண்டஸ் பற்றிய  தகவலைகூற சித்திரவதை செய்தது ! வதை தாங்காமல் சினேகலதா சிறையிலேயே இறந்தார் ! பெர்னாண்டஸ் பற்றி எதையும் கூறவில்லை !இது அவசர நிலைக்கலத்தில் நடந்தது !

அதே பெர்ணானடஸ் பா.ஜ.க தலைமையிலான ஆட்சியில்அமைசரான பொது அவர கடுமையாக துரோகி என்று விமரிசித்து அறிக்கை விட்டார்!

"பதவியும்,பவிசும் அந்த புரட்சியாளனை சிதைத்துவிட்டது ! இன்று பேசமுடியாமல், கை கால் அசைக்க முடியாமல் இருக்கிறார் "என்று குறிப்பிட்டார் ! 

சினேகலதா ரெட்டி நடிகை மட்டுமல்ல !

அனந்த மூர்த்தி எழுத்தாளர் மட்டுமல்ல ! 

சமூக செயல்பாட்டாளர்கள் !

எம் அஞ்சலிகள் !!

        


        

 

          

 

1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

சமூக செயல்பாட்டாளர்களுக்கு எனது அஞ்சலியும்