Monday, December 22, 2014

நெப்போலியன் - மயோபதி - பா.ஜ.க ...!!!
துரைசாமி-சரஸ்வதி தமபதியரின் மகன் நெப்போலியன் !  திருச்சி கல்லூரி ஒன்றில் வரலாற்றுத்துறையில் பட்டம் பெற்றவர் ! திரைப்பட நடிகர் ! அவருடைய உறவினர் அரசியலில் பெற்ற செல்வாக்கினால் எம்.எல்.எ ஆனவர் !  பின்னர் பெரம்பலூர் எம்.பி ஆனார் ! மத்திய அமைச்சரும் ஆனார் !

அளவான குடும்பம்.மனைவி இரண்டு மகன்கள் ! 

இந்த மனிதரின் வாழ்க்கையில் சூறாவளியாக தாக்குதல் நடந்தது ! 8வயது மித்த மகனுக்கு தீர்க்க முடியாத வியாதி வந்தது ! ஆம் ! தசை சிதைவு நோய் !

குழந்தை வளர அவளர எலும்பு வளரும் ! ஆனால் அதே அளவுக்கு எலும்புக்கு பக்க பலமாக இருக்கும் தாசை  வளராது ! பையன் அடிக்கடி கிழே விழந்தான் ! கைகால் அசைவு கொஞ்சம் கொஞ்சமாக குறந்தது !

அதிர்ந்து போன நெப்போலியனும் அவர் துணைவியாரும் மருத்துவர்களை தேடி  அலைந்தார்கள் ! இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்ற நிலை தெரிந்தது !

நாட்டு வைத்தியத்திற்கு திரும்பினார் !

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் டாக்டர் ராமசாமி என்பவர் மயோபதி என்ற சிகிச்சை முறைமூலம் இதனை சீர் செய்கிறார் என்று அறிந்து அங்கு என்று தங்கினார் !

இங்கு மருந்து  கொடுப்பதில்லை ! மாறாக கடுமையான பயிற்சிகளின் மூலம் குழைந்தகளுக்கு மறு வாழ்வு அளிக்கிறார்கள் ! குறிப்பாக நீச்சல் பயிற்சி சிறப்பு அம்சம் !

நெப்போலியனின் மகன் கொஞ்சம் தெளிவு பெற்றான் ! மேலும் சிகிச்சை பெற வெளி நாடு போகவேண்டும்! குறிப்பாக அமேரிக்கா !

மகனையும் மனைவியையும் அனுப்பி சிகிசை நடக்கிறது ! இதற்கான மருந்து கண்டுபிடிக்கும்  தொடர்பில் !இருக்கிறார்  ! தன மகனை பரிசோதனையில் ஈடுபடுத்த அனுமதிக்கிறார் ! லட்சக்கணக்கான குழந்தகளின் நிலையையும்,தாய் தந்தையாரின் மனக்கஷ்டத்தையும் புரிந்து கொண்ட நெப்போலியன் இந்தியாவிலும் அத்தகைய சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் !

இன்றுவீரவனல்லுரி;ல் பிரும்மாண்ட மான ஆராய்ச்சி மையம் எழுந்துள்ளது ! டாக்டர் ராமசாமி தலைமையில் ! தன வாழ்நாள் சம்மபாத்தியம் முழுமையையும் கொட்டி நெப்போலியன் அதனை  எழுப்பி வருகிறார் !

நாகபுரியில் எனது டாக்டர் நண்பர் ஒருவரின் 12 வயது மகன் ! இதே நோயால் பாதிக்கப்பட்டவன் அங்கு சென்று சிகிச்சைபெற்று வந்தான் !

வீரவநல்லூர் சென்று அந்த மருத்துவ மனையையும் பார்த்தேன் ! சேரன் மாதேவி ​ அம்பை ரோட்டில் தினசரி  நோயாளிகள்   வந்து சிகிச்சை பெருகின்றானர் ! உள் நோயாளிகளுக்கு ஊருக்கு உள்ளெ பிரும்மாண்டமான வளாகம் உள்ளது ! நான் சென்றிருந்த போது குறந்தது நூறு குழைந்தகளாவது சிகிச்சையில் இருந்தார்கள் ! "கட்டுச்சிகிச்சை " என்றமுறையில் சிகிச்சை நடக்கிறது !பயிற்சிக்காக மிகப்பெரிய நீச்சல் குளம் அமைத்திருக்கிறார்கள் !!

பீஹார்.ம.பி.ராஜஸ்தான்,மராட்டியம்,என்று வடநாட்டு மக்கள் தான் அதிகம் ! அவர்கள் தங்குவதற்கும்,நோயாளிக்குழந்தைகள்  தங்குவதற்கும்சிறப்பு  ஏற்பாடுகள் உள்ளன ! 

சிகிச்சை,மருந்து இலவசம் !

இந்த மருத்துவமனையை எனக்கு அடையாளம் காட்டிய தோழர் கவிஞர் கிருஷி அவர்களுக்கு  ஆயிரம் ஆயிரம் நன்றிகள் ! கிருஷி த.மு எ க .சாவின் மாநிலக்குழு உறுப்பினரும் ஆவார் !

-------------------------------------------------------------------------------------------------------------------------

நெப்போலியன் பா..ஜ.க.வில் சேர்ந்தது சரியல்ல ! நல்ல மனிதர் ! மோசமான கட்சிக்கு போவானேன் ! 

தசை சிதைவு நோயாளிகளுக்கு அவர் ஆற்றும் பணியை மனதில் கொண்டு அவரை முகநூல் நண்பர்கள்  விமரிசிக்கலாமே !!!

1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நெப்போலியனின் பணி போற்றுதலுக்கு உரியது