skip to main |
skip to sidebar
சம பந்தி போஜனமும் ,
சாதிமறுப்பு திருமணமும் ,
சாதியை ஒழிக்குமா ....?
"சம்பந்தி போஜனமும்,சாதி மறுப்பு திருமணமும் சாதியை ஒழிக்காது " என்று அண்ணல் அம்பேத்கர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள் !
தீண்டாமையை ஒழிக்க ராஜா ராம்மோகன் ராயும் காந்தியும் பாடுபட்டார்கள் ! ஆனால் இருவரும் அதற்கு அடிபடை சாதி என்பதையும் ,அதன் சல்லி வேரை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தத் தவறிவிட்டார்கள் !
பாரதி போற்றிய தலைவர்களுள் ராம்மோகனும் ஒருவர் ! அவர்பற்றிய கட்டுரை ஒன்றில் " எப்பேர்பட்ட சீர்திருத்தவாதி நீ ! சாகும்போது கூட உன் மார்பில் புரளும் "முப்புரி நூலை " எடுக்க மறந்து விட்டாயே " என்று கதறு கிறான் !
தாழ்த்தப்பட்டவன் அவன் ! வசதி உள்ளவன் ! தீர்த்த யாத்திரை செல்கிறான் 1 வந்ததும் வழக்கப்படி தன சாதியினருக்கு விருந்து வைக்கிறான் ! விருந்தில் "நெய் " விட ஏற்பாடு செய்கிறான் !
புனித நூல் படி தாழ்த்தப்பட்டவர்கள் "நெய்" உண்ணக்கூடாது ! நெய் பரிமாறுவதால் மேல்சாதி இந்துக்களை அவமானப்படுத்திவிட்டான் ! அவர்கள் ஆத்திரம் கொண்டு பரிமாற வைத்திருந்த பதார்த்தங்களை தூக்கி வீசுகிறார்கள் ! உண்ண வந்தவர்களை அடித்து விரட்டு கிறார்கள் ! அண்ணல் அம்பேத்கர் இதனைகுறிப்பிடுகிறார் ! உயிருக்குப் பயந்து அவர்கள் ஓடிவிடுகிறார்கள் !
1936 ம் ஆண்டு ராஜஸ்தானில் நடந்தது ! இன்றும் கார்ப்ரெட் காலத்தில் நடக்கத்தானே செய்கிறது !
கர்மவினை , ஆன்மீகம்,சாத்வீகம்,புலால் மறுப்பு என்றாலும் இவற்றிர்க்குபின்னால் ஒளிந்திருக்கும் சாதீயம் புலப்படத்தானே செய்கிறது!
மனிதர்களிடையே ,தன்மையில்,திறமையில்,செயல்பாட்டில் வேற்றுமை இருக்கிறது என்பது உண்மைதான் ! அனைவரும் இந்தவிஷயத்தில் சமம் இல்லைதான் ! அதற்காக சமமானவர்கள் இல்லை என்பதாக நடத்தப்பட வேண்டுமா என்று கேட்கிறார் அம்பேத்கர் !
அரசியல் மேடையில் பல கொடுமைகள் நடக்கின்றன ! அதனை விட சமுக தளத்தில் நடக்கும் கொடுமைகள்படு பயங்கரமானவை ! அரசியல் கொடுமையை எதிர்ப்பவனை விட சமூக கொடுமையை எதிர்ப்பவன் தீரமிக்கவன் என்கிறார் அண்ணல் !
இந்துக்களுக்கு சாதி மாற முடியாது ! ஒரு சாதியில் செரவேண்டும் என்றால் அதில் நீ பிறந்திருக்க வேண்டும் கிறிஸ்துவனோ ,இஸ்லாமியனோ இந்து வாக முடியாது ! அப்படி வந்தால் அவனை எந்த சாதியில் புகுத்துவாய் ! அந்த சாதி ஏற்றுக்கொள்ளவேண்டுமே ! அதனால் தான் மதமாற்றம் அனுமதிக்கப் படுவதில்லை ! இந்துத்வா காரர்கள் மதமாற்றத்தினை இதனால் தான் எதிர்க்கிறார்கள்!
பிள்ளை மகன் ஒருவன் தாழ்த்தப்பட்ட பெண் ஒருவரை காதலித்து மணந்தான் ! ஆண்டுகள் ஓடின ! அவன் மகளுக்கு திருமண வயது வந்தது ! தாய் தன சகோதரன் மகனை தேர்ந்தெடுத்தாள் ! தந்தை தன சகோதரி மகனை தேர்ந்தெடுத்தான் ! இது சாதீயம் என்பது ஒருமனநிலை என்பதை காட்டவில்லையா ?
சமபந்திபொஜனமும்,சாதிமறுப்பு திருமணமும் மட்டும் சாதியை ஒழிக்காது !
சாதியை ஒழிக்க என்னதான் செய்ய வேண்டும் ?
சாதியை கட்டிக்காக்கும் சாத்திரங்கள் புனிதமானவை என்ற எண்ணத்தை நொறுக்க வேண்டும் என்கிறார் அம்பேத்கர் !!!
கட்டுரையில் பாரதி கூர்ய்கிறான் !
2 comments:
சாதியை கட்டிக்காக்கும் சாத்திரங்கள் புனிதமானவை என்ற எண்ணத்தை நொறுக்க வேண்டும்
பாவேந்தன் சொன்னது போல் ஊரில் தெருவில் காதலென்றால் ஆதரிப்போம் வீட்டில் காதலென்றால் வெறுப்போம். இது தான் நிதர்சனம்.
ஆனாலும் காலம் மாறிவருகிறது.
சென்றவாரம், என் அக்காவின் (பெரியப்பா மகள் ) மகள் காதல் திருமணம் செய்தாள். எங்கள் சமூகத்தில் வரதட்சணை அதிகம். இந்த திருமணத்தை ஆதரிப்பதால் வரதட்சணை பிரச்சினை குறையும் என்ற நோக்கில் நாங்கள் இன்றைய தலைமுறையினர் அனைவரும் திருமணத்திற்கு ஆதரவளித்தோம்.
Post a Comment