"அவா " பாடப்போறா ,
"இவா "ளுக்காக ....!!!
சென்ற வரம் முழுவதும் சென்னையில் இருந்தேன் ! கடுமையான குளிர் பகுதியிலிருந்து வந்தவனுக்கு சென்னையின் மிதமான குளிரும் ,அவ்வப்போது பெய்த மழையும் ரம்மியமாக இருந்தது !
நகரத்து "பிளக்ஸ் " போர்டுகளில் நித்யஸ்ரீ அவர்களும்,சௌம்யா அவர்களும் கர்நாடக இசையை வளர்த்துக் கொண்டிருந்தார்கள் !
ம்யுசிக அகாடமி,நாரதகான சபா என்று பட்டியலிட்டு .ரவா தோசை,அடை அவியல், பூரி கிழங்கு, என்று எந்தெந்த காண்டீனில் எது நன்றாக இருந்தது என்று பத்திரிகைகள் எழுத ஆரம்பித்து விட்டன !
ஒய்வு பெற்ற ஐ.பி.எஸ் ஆபீசர் நட்ராஜிளிருந்து மாயவரத்தான் வரை விமரிசிக்கப் போகிறார்கள் !
சில நாட்களுக்கு முன்பாக டி .எம்.கிருஷ்ணா எழுதிய கட்டுரை நினைவு தட்டியது!
"இசைக்கு சாதி உண்டா ? நாதஸ்வரத்தை குறிப்பிட்ட சாதியினரே பாடுகிறார்கள் ? கர்நாடக இசை "அந்த " சாதிக்கு மட்டுமே உள்ளதா ?"
கிருஷ்ணா தன கட்டுரையில் எழுப்பியுள்ள கேள்விகள் இவை !
இன்று காலை கோவை வக்கீல் தோழர் ஞான பாரதியை நலம் விசாரித்தபோது அவர் சொன்னது மனதுக்கு இதமாக இருந்தது !
இசையில் ஆரோகணம்,அவாரொகணம் என்பது முறை ! இதனை மீறி ஆரோகணம் மட்டுமே கொண்ட இசையை நிகழ்த்திக் காட்டியவர் இளைய ராஜா ! பிஸ்மில்லாகான் "சாஸ்த்ரீய "சங்கிதத்தில் போற்றப்படுபவர் !" என்று அவர் விளைக்கினார் !
--------------------------------------------------------------------------------------------------------------------
4 comments:
எங்கள் மாயவரம் பகுதியில் தலைஞாயிறு, சீர்காழி போன்ற ஊர்களில் பறையர்கள் மிகுதியான அளவில் நாதஸ்வரம் இசைக்கிறார்கள். 7 பேர் 8 பேர் கொண்ட பெரிய குழுவாக இணைந்து நாதஸ்வரக் கச்சேரி செய்கின்றனர். அதுவும் ஆண்களும் பெண்களும் இணைந்து இசைக் கச்சேரி நடத்துகின்றனர். அனைவரும் இசைப் பள்ளியில் இசை பயின்றவர்கள்.
செவ்விசை மக்களை சென்றடைய வேண்டும் -இசைக்கு சாதி,மத மாச்சரியங்கள் கிடையாதுதான்
வேண்டாம் இசைக்குள் சாதி
இசைக்குள் ஜாதி மதங்கள் இணைந்து வரக்கூடாது... அது காட்டாறாய் எல்லாப் பக்கமும் பரவ வேண்டும்... செவ்விசை மக்களைச் சென்றடையட்டும் ஐயா...
Post a Comment