skip to main |
skip to sidebar
"ஊடக ரௌடிகள் "
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள் ! அதுபற்றி செய்திகளை அறிய "சன் " தொலைகாட்சியை பார்த்தேன் !
பாவம் ! போக்குவரத்து சீர்குலைந்ததால்மக்கள் படும்பாட்டை கல்லும்கரையும்வண்ணம் காட்டினார்கள் !
வாழப்பாடி அருகே ஆளும் கட்சி ரௌடிகள் ஆளும்கட்சி தொழிலாளர்களை தாக்கினார்களாம் !
எப்போதும் 7/- ரூ டிக்கட் தான் வாங்குவார்கள் ! இப்போது 30/- ரூ வாங்குகிறார்கள் என்று ஒருவர் அங்கலாய்த்தார் !
தொழிலாளர் ஸ்ட்ரைக் என்றால் இவர்களுக்கு மக்கள் நலன் புலப்பட ஆரம்பிக்கும் !
தீபாவளியின்பொது சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு பேருந்து கட்டணம் 1500 /- ரூ தனியார் வாங்கியபோது கட்டை விரலை வாயில் வைத்துக் கொண்டிருந்தவர்கள் தான் இவர்கள் !
பெற்றோலுக்கும்,டீசலுக்கும் வரி போட்ட பொது பொத்தி கொண்டிருந்தவர்கள் தான் இவர்கள் !
இவர்களின் மாமனும் மச்சானும் தான் தனியார் பேருந்து உரிமம் உள்ளவர்கள் !ஒரு பண்டிகை,நல்லது வர விடமாட்டார்கள் ! அரசு அனுமதியிலாமலேயெ அதிக கட்டணம் வசூலிப்பார்கள் !
வேல நிறுத்தத்தால் பொது மக்களுக்கு சங்கடம் உருவாகிறது தான் !
ஏல ! "பொதுமக்கள் " ங்கறது யார்ல ? போக்கு வரத்து தொழிலாளி போராடும்போது அரசு,ஊழியன், தனியார் கம்பெனி சிப்பந்திகள் "பொதுமக்கள்"
அரசு ஊழியன் போராடும்போது தொழிலாளி" பொதுமக்கள் "!
காலம் வரும்ல ! அப்ப போக்குவரத்து தொழிலாளி மட்டுமல்ல ! அரசு ஊழியன், தனியார் கம்பெனி சிப்பந்திகள் , ரிக்ஷா,ஆட்டோ, ஏன் பாடுபட்டு உழைக்கிற மனுசன் அத்துணை பேரும் "செயின்ட் ஜார்ஜ் " கோட்டை வாசல்ல நிப்போம் !
அப்பம் வச்சுகிடுதம் !!!
2 comments:
இதையே எத்தனை நாள் சொல்லிட்டிருப்பீக? வேலை நிறுத்தம் யார் செஞ்சாலும் தப்புத்தேன்.
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா...
Post a Comment