skip to main |
skip to sidebar
7000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ........!
"பறவையை கண்டான் ,விமானம் படைத்தான் " என்றார் கண்ணதாசன் !
பறவை பறப்பது இருக்கட்டும் ! மனிதன் பறப்பது எப்படி? ஒருபொருள் வானில் பறக்க வேண்டுமானால் என்னென்ன வேண்டும் !
தீபாவளி பட்டாசு விடும் போது "ஏரொபிளென் " பட்டாசு விட்டிருக்கிறோம் ! கொஞ்ச தூரம் பறந்ததும் அது விழுந்து விடும் ! அதன் பின் பகுதியில் உள்ள கருமருந்து தீர்ந்து விட்டால் முடிந்தது அதன் சங்கதி ! அது போல அது படுக்கைக்க்கோட்டில் பூமிக்கு இணையாக செல்ல அதற்கு ஏதாவது விசை வேண்டும் ! அந்த விசை தீர்ந்ததும் முடிந்து விடும் !
விமானம் மட்டும் எப்படி மேலே பறக்கிறது ?!
விஞ்ஞானம் "பூமியின் ஈர்ப்பு சக்தியால தான் அது பறக்கிறது ! "என்கிறது அதன் பின்னல் இருக்கும் விசை அதன உந்தி மேலெ தள்ளுகிறது ! அத்ற்கு எதிராக ஈர்ப்பு சக்தி அதன் கிழே இழுக்கிறது ! ஈர்ப்பு சக்தி இல்லை என்றால் அதனை தடுக்க எதுவும் இல்லாமல் போய்க்கொண்டே இருக்கும் ! விண்கலத்தில் ஈர்ப்பு சக்தி இல்லாமல் வீரரகள் மிதந்துசெல்வதையும் , பொருள்கள் மிதப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம் !
அதேபோல் விமானம் நகர்வதற்கும் விசை தேவைப்படுகிறது ! அந்தவிசைக்கு எதிர் விசை இல்லை என்றால் அது நகர்ந்து கொண்டே இருக்கும் ! அதனை தடுக்க எதிர் விசை வேண்டும் ! காற்றில் உராய்வதின் மூலம் எதிர் விசை கிடை க்கிறது !
ஆரம்ப காலத்தில் காற்றை விட எடைகுறை ந்த(lighter than air craft ) பலூன்களில் தொட்டில் கட்டி மனிதன் பறக்கும் பரிசொதனகளை செய்தான் ! அதன் மூலம் அவன் கற்று கொண்டான் 1
தற்போது ஒரு பொருள் வானத்தில் செல்ல புவி ஈர்ப்பு விசையும் ( gravity )காற்றின் உராய்வும் (drag ) அவசியம் என்பதை உணர்ந்தான் !
இந்த இயற்பியல் அறிவு தான் காற்றை விட கனமான (havier than air craft ) கருவியை அவனுக்கு அளித்தது !
புவியின் ஈர்ப்பு சக்தியால் தான் நாம் மிதக்காமல் இருக்கிறோம் ! அதேபோல் உராய்வு எதிர்ப்பதால் தான் நாம் இருந்த இடத்தில் இருக்கிறோம் !
இதனை நான் முழுமையாக விளக்கியிருக்கிறேனா என்ற சந்தேகம் எனக்கு உண்டு ! நீ என்னaeronotics படுச்சவனா என்று கேட் காதீர்கள்! நான் Lic ல் குமாஸ்தாவாக பணியாற்றி ஒய்வு பெற்றவன் !
அங்கு இன்சுரன்சு பரிட்சையில்,marine ,மற்றும் aviation இன்சுரன் ஸ் பரீடசயை வே ரு வழியில்லாமல் படித்து தொ லைத்தேன் ! இதில் வேடிக்கை என்ன வென்றால் இன்றுவரை நான் கப்பலை பார்த்ததில்லை ! அதுமட்டுமல்ல ! நான் என்னுடைய fellowship முடிக்கும்வரை விமான த் தி ல்பற ந்ததில்லை !
படித்து பாஸ் செய்தது மட்டுமல்லாமல் பிற் மாணவர்களுக்கு வகுப்புகளும் எடுத்து அவர்களையும் தேர்ச்சிபெரசெய்துள்ளே ன் !
அடிமுட்டாளான எனக்கே இது தெரியுமென்றால் விஞ்ஞானிகள் மத்தியில் 7000 ஆண்டுகளுக்குமுன்னால் விமானம் இருந்தது என்றும் கிரகம் விட்டு கிரகம் சென்றார்கள் என்றும் கேப்டன் வினோத் படோஸ் என்ற விமானி ,விமானப்பயிற்சி யாளர் கூறி யது விந்தையான ஒன்று !
அண்ணே ! வேற எதோ சூட்சுமம் இருக்கு போல தெரியுது !!!!
2 comments:
வேறு காரணங்கள் இருக்கத்தான் செய்யும் ஐயா
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
Post a Comment