skip to main |
skip to sidebar
"மார்க்க தர்ஷக் மண்டல் "
இந்தபேரை உச்சரிக்க முடியாம "மெண்டல் " ஆனவங்க உண்டு ! பா.ஜ.க. தன்னுடைய அமைப்புகளுக்கு இப்படிதான் பெயர் வைக்கிறது !
குஜராத் கலவரம் நடந்த போது அன்றய பாஜக தலைவர்கள் நேரடியாக அதனை ஆதரித்து அறிக்கைகள் வெளியிடவில்லை ! கடுமையான விமரிசனம் வந்ததால் அப்போது தலைமையில் இருந்த வாஜ்பாய்,அத்வானி ,ஜோஷி ஆகியொர் அதனை விமரிசித்து கருத்து தெரிவித்தனர் !
வெளிநாட்டினர் கேட்டால் நான் என்ன பத்தி சொல்வேன் " என்று நொந்து கொண்டார் வாஜ்பாய் !
குஜராத்தின் முதலமைசராயிருந்த நரேந்திர மோடியும்,உள் துறை அமைசராக இருந்த அமீத் ஷாவும் ராஜினாமா செய்வதின் மூலம் கட்சியின் மரியாதையை காப்பற்ற வெண்டும் என்றும் கூறினார் ! இதனை அத்வானியும்,ஜோஷியும் ஆதரித்தனர் !
அன்று பிடித்த சனியன் பாவம் இந்த மூன்ரு பேரயும் ஆட்டிப்படைக்கிறது !
ஜோஷியின் வாரணாசி தொகுதியை மோடி கைப்பற்றினார் ! அதற்கு உள்குத்து அமீதஷா !
ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தொசீனா வரை உள்ள பகுதியில் இந்து ராஷ்ட்றத்தை உருவாக்கும் கனவில் இருக்கும் பா.ஜ.வின் தலைவராக ஒரு இந்து அல்லாதவர் தலைவராக வரலாமா என்ற கெள்வி எழுந்தது ! இதற்குப் பின்னால் ஜொஷியும் அத்வானியும் உண்டு என்று அமீத்ஷா நினைக்கிறார் !
2014ம் ஆண்டு ஜூலை மாதம் அமீத் ஷா ப.ஜ.கவின் தலைவர் ஆகிறார் !
அதற்கு அடுத்த மாதம் அமீத் ஷா ""மார்க்க தர்ஷக் மாண்டல்" என்று ஒரு குழுவை அமைக்கிறார் !
பா.ஜ.கவின் ஆட்சிமன்றக்குழுவில் இருந்த அத்வானி,ஜோஷி ஆகிய இரண்டு போரையும் அதிலிருந்து அமீத் ஷா விலக்குகிறார் !
பிரதமர் மோடியை கடுமையாக எதிர்ப்பவர்களுக்கு தலைமை தாங்குபவர்கள் தான் இவர்கள் இருவரும் !
கட்சியை வழிநடத்த (மார்க்க தர்ஷக் ) உள்ள கமிட்டியுள் இவர்கள் இருவரும் செயலாற்றுவார்கள் ! இவர்களுக்கு உதவியாக படுத்த படுக்கையில் இருக்கும் வாஜ்பாய் அவர்களும் செயல்படுவார் என்று அமீத் ஷா அறிவிக்கிறார் !
ஒரேகல்லில் இந்த மூண்ரூ பேரையும்" முதியோர் இல்ல "த்திற்கு மோடியும்,ஷாவும் அனுப்பி விட்ட குதூகலத்தில் திளைக்கின்றனர் !
பாவம் ! நம்மூர் பெரிசு இல.கணேசன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து "நாகபுரி"யினை பார்க்கிறார் !
நாகபுரி காரர்கள் ஜண்டெ வாலா மார்க் என்ன சொல்கிறது என்று காத்திருக்கிறார்கள் !
1 comments:
உள்கட்சி அரசியல்...
இல.கணேசன் என்ன செய்வார்...
Post a Comment