skip to main |
skip to sidebar
(இந்தப்பதிவு "Mahathma Gandhi -the last 200 days " என்ற நூலை ஆதாரமாக கொண்டது )
அண்ணல் காந்தி அடிகளின் கடைசிபிறந்த நாள்
2-10-1947 ..............!!!
" நான் 125 வயது வரை வாழ்வேன். என்மக்களுக்கு சேவை செய்வதின் மூலம் இறைவனுக்கு தொண்டூழியம் செய்வேன் "என்றார் அடிகள்.
அதற்கு ஏற்றார்ப்போல் தன் உடலையும் உள்ளத்தையும் வளர்த்துக் கொண்டார்.
சுதந்திர இந்தியாவில் அவருடைய முதல்பிறந்த நாள் வந்தது.உலகம் பூறாவிலும் இருந்து 2-10-47 வாழ்த்து செய்திகள் குவிந்தன. லார்டுமவுன்பாட்டன் லேடிஎட்வினா சகிதம் வந்து வாழ்த்து சொன்னார்
அதிகால 5மணிக்கு சர்தார் பட்டேல் வந்தார். காலை பிரார்த்தனைக்கு பிரதமர் நேருவும்,முன்ஷியும் வந்து ஆசிபெற்றனர்.
ராஜகுமாரி அமிர்த்கௌர் மற்றும் அமைச்சர்கள் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
"மிகவும் பலவீனமான,ஒல்லியான இந்த மனிதர் சக்கரவர்த்திகளை விட பலமானவர்.இவர் நம்பிக்கை இழந்தவர்களுக்கு நம்பிக்கை தந்தவர். கோழை இந்தியர்களை தீரனாக்கியவர். கீழே விழ இருந்தவனை தூக்கி நிறுத்தியவர்.மிருக உணர்வு கொண்டவனை மனிதனாக்கியவர் . அவர் என்தலைவர் ,ஆசான், தந்தை " என்று கவிதையில் வாழ்த்தினார் சரோஜினி நாயுடு .
"இந்தியா இருண்டு கிடக்கிறது .அதில் ஒரே ஒரு தீபம் மட்டும் எரிந்து கொண்டிருக்கிறது. கலவர பூமியில் அமைதி,சமாதானம் இரண்டையும் சுமக்கும் ஒரே தூண் அவர்தான் "என்றார் கவர்னர் ராஜ கோபாலாச்சாரி .
அந்த தூண் அடிவானத்தை இழந்து நிற்கிறது. அந்த தீபத்தின் எண்ணை மிகவும் குறந்து விட்டது.
வாழ்த்துக்களை ஒரு ஏளனமான உதட்டுச் சுழிப்போடு தான் ஏற்க முடிந்தது..
" நான் 1915ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தேன்.அன்றிலிருந்து மத நல்லிணக்கித்திற்காக நின்றேன். நமது மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் ஒன்றுபட்டு வாழமுடியும் என்று நம்பினேன். இன்று நாம் எதிரிகாளாக வாழ்கிறோம்.! இதனைப்பார்க்க நான் 125 வருடம் அல்ல ,100 வருடமல்ல, 90 வருடமல்ல உயிரோடு இருக்க வேண்டுமா ? நான் 79 வயதிற்குள் நுழைகிறேன் .என்னை புரிந்து கொண்டவர்களுக்கு சொல்கிறேன் .இந்த மிருகத்தனத்தை கைவிடுங்கள். இந்த பைத்திய காரத்தனத்தைகைவிட்டு விட்டுஎன்பிறந்தநாளை கொண்டாடுங்கள். உங்கள் உள்ளத்தில் உள்ள கோபத்தை கை விடுங்கள். இல்லை யென்றால் நான் தங்க இங்கே இடமேது ? "
அண்ணல் காந்தி அடிகளின் உடலைக் கொன்றது நாதுராம்கோட்சே என்பவனாக இருக்கலாம்.
அவர் ஆன்மாவை ................!!!!????
1 comments:
உண்மைதான் ஐயா
Post a Comment