Thursday, November 26, 2015

"நாங்கள் 

இஸ்லாம் ஆனவர்கள் "





2000 வது ஆண்டு பிறந்தவுடன் "மில்லியணம் " என்று கொண்டாடினார்கள். நிருபர்  ஒருவர் நோபிள் விருது பெற்ற அமார்த்திய சென்னிடம் முதல் ஆயிரமாவது ஆண்டில் நடந்த முக்கியமான நிகழ்வு என்ன ? என்று கேட்டிருக்கிறார்.

"இந்தியாவிற்கு இஸ்லாம் அறிமுகமானது தான் "என்றார் அவர்

அரேபிய மணல் வெளிகளில் அதற்கு முன்பும் மக்கள் வாழ்ந்தார்கள் .அவர்களுக்கு என்று ஒரு சமூக அமைப்பை வைத்திருந்தார்கள். உலக நாடுகள் பலவற்றோடு தொடர்பு கொண்டார்கள். பண்ட ,பண்பாட்டு பரிமாற்றங்கள் நடத்தினார்கள் .தமிழகத்தோடும் தொடர்பு கொண்டிருந்தார்கள்.

தமிழகத்தின் கிழக்கு கடற்கரைகளில் தாங்கள் கொண்டுவந்த பொருட்களை அப்போதைய அரசர்களின் அனுமதியோடு "கிட்டங்கிகளை" அமைத்து வர்த்தகம் புரிந்தார்கள். வர்த்தகர்கள் முறைவைத்து தங்கள் நாடு சென்று வருவார்கள். அவர்களில் சிலர் இங்கேயே தங்கி பண்டங்களை பாதுகாப்பார்கள்.

நுற்றாண்டுகளாக இவை நடை பெற்றன . கிட்டங்கிகள் இருந்த இடங்கள் குடி இருப்புகளாகி அவர்கள்   இந்தமண்ணொடு கலந்து வாழ்ந்தார்கள்.ராமநாத புறத்தில் இருக்கும் "கீழக்கறை " உதாரணம்

அப்போது தான் அரேபிய நாட்டில் ஒரு முக்கிய நிகழ்வு நடந்தது. "நபிகள்" நாயகம் அவதரித்து, இனக்குழுக்களிடையே ஒருமையை வளர்க்க புதிய மார்க்கமாக "இஸ்லாம் "  (அமைதி )என்ற பாதையை கொடுத்தார்கள்.மிகவும் இளமையான இந்த மார்க்கம் தன்னுள் பல முற்போக்கான கொள்கைகளை  கொண்டதாக இருந்தது.

அரேபியாவில் எற்பட்ட மாற்றம்  அரேபிய வியாபாரிகள் மூலம் இங்கும் பரவியது.

கிட்டங்கிகளீலும் குடி    இருப்புகளிலும் வாழ்ந்தவர்களும். தங்களையும் மாற்றிக் கொண்டார்கள்.

"கீழக்கறை"  யில் வாழும் முஸ்லீம்கள்   இன்றும் தங்களை "இஸ்லாமானவர்கள் " என்றுதான் அழைத்துக் கொள்கிறார்கள் .

அந்த கிழட்டு ஆச்சார்யாவும் ,இளைஞர் ராஜ்தாக்கரெயும்  இவர்களை பாகிஸ்தானுக்குபோகச்சொல்கிறார்களே ?

நியாயமா  ???





0 comments: