Thursday, November 05, 2015

சின்னய்யா காசி அவர்களின் ........2 !!!






அவர்களை "லைட்  பாய் " என்று அழைப்பது சரி அல்ல. ."  லைட்  அங்கிள்" "லைட் தாத்தா " என்று தான் கூப்பிட வேண்டும்..

அந்த ஸ்டூடியோவில் டப்பிங் நடந்தது . நானும் போயிருந்தேன் . வேறு  படங்களுக்கான படப்பிடிப்பும் நடந்து கொண்டிருந்தது.நாங்கள் ஓய்வாக வேடிக்கை பார்த்துக் கொண்டருந்தோம்.

ஊர்வலக்க்காட்சி . .கதாநாயகன் தலைமையில் .. ஒரு பள்ளமான பகுதியில் இருந்து மேடேறி வாரவேனும். வெகு துரத்தில் இருந்துகாட்சி ஆரம்பிக்கும். கதாநாயகன் நெருங்க நெருங்க காமிரா அவரை குறிவைக்கும். பலகோணங்கள்.பல பக்க வாட்டு தோற்றங்கள் என்று நெளிசலை எடுத்து விட்டார்கள் .இவை அத்துணைக்கும் ஈடு கொடுத்து விளக்குகள் இருக்க வேணும் . சூரிய ஒளியானதால், கூடுதலாக reflector  பயன் படுத்தப்[பட்டது. கதா நாயகனின்  மூக்கு நிழல் அவன் உதட்டில் விழாமல்  reflector  ஐ கொஞ்சம் கொஞ்சமாக நெருங்க நெருங்க உயர்த்தி பிடிக்க வேண்டும்..படப்பிடிப்பு முடிந்தது . காமிரா காரர் இயக்குனர்காதில் கிசுகிசுத்தார். 
"சார் ஒன்மோர்   ஷாட்" .  
"போய்யா ! வேலையைபாரு ! எல்லா எடிட்டிங்க்ல  பாத்துக்கலாம்"என்றார் நடிகர்.
அவர்களுக்கு சந்தேகம் முக்கு நிழல் பிரச்சினைதான் . " எவண்டா  reflector பிடிச்சவன் ." இயக்குனர்.
அந்த லைட் அங்கிள் "நான் தான் சார் " என்றார்.
அவர் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்
."60000 ரூ போச்செல ! ஓங்கப்பனா கொடுப்பான்"
"packup "   எல்லாரும் கலைந்து சென்றனர். 

பின்னாளில் அந்த ஷாட்  சரியாகவே வந்திருந்தது என்பது தெரிய வந்தது    ;.

1979 -80 ஆண்டுகளில்கோடம்பாக்கம் "ராம்" தியேட்டர் அருகில்  துணை நடிகர்கள்  காத்திருப்பார்கள் .8 மணியிலிருந்து  எஜெண்டுகள்  வந்தபின்  "கால்ஷிட் " கிடைத்தால் சம்பளம்.
கிடைக்காதவர்கள்  தியேட்டர் அருகில் உள்ள சந்திற்கு போய் 
காத்திருப்பார்கள். இதில் துணை   நடிகர்களிளிருந்து டெக்னிஷியன்களும் உண்டு.

8.30 மணிக்கு பெரிய கொத்தனார் கள். பெயிண்ட் கன்ட்ராகடர்கள், கலயாண சமயல்  கான்ட்ராக்டர்கள் வருவார்கள். 

" on the waterfront " திரைப்படத்தில் வருவது போல அன்றைய கூலி வேலைக்காக ,இந்த டாக்டர்களும்,வக்கீல் களூம் முண்டி அடித்துக் கொன்டு போட்டி போடுவார்கள். 200 -300 ரூ  கொண்டு போனால் தானே அவர்கள் வீட்டில் அடுப்பு எரியும்.







  


1 comments:

'பரிவை' சே.குமார் said...

பாவம் சரியாக வேலை செய்தும் அடிவாங்கியிருக்கிறார்...