Friday, November 06, 2015

சின்னையா காசி அவர்களின் .....3சென்னையில் கொடம் பாக்கம் ,விருகம்பாக்கம்,வளசரபாக்கம் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தெரிந்த விஷயம் தான்.

நண்பர் இசக்கி முத்து அவர்களை பார்க்க சென்றிருந்தேன். வங்கியில் முத்த அதிகாரி. தலித் குடும்பத்தை சேர்ந்த அவரும் நானு சமஸ்கிருதம் படித்தோம்.அது பற்றி ஒரு நாவலே எழுதலாம் .

எங்களுக்கு விருந்து அவர் விட்டில். அவருடைய துணைவியார் பவம் "மாங்கு-மாங்கு "   நு    வீட்டு வேலையில இருந்தார்.  
"ஏம்மா! உதவிக்கு  ஆள் இல்லையா ?" 
"இருக்காங்க தோழர் ! இன்னைக்கு வெளியூர்ல ஷுட்டிங் "

இந்தப் பகுதியில் பல வீடுகளில் இப்படித்தான் நடக்கிறது. விட்டு வேலைக்கு உதவியாக வரும் பெண்கள் மிகவும் சுறு சுறுப்பாகவும், நறிவிசாகவும் இருப்பார்கள். .வேல அவ்வளவு சுத்தமாக இருக்கும். ஒரே ஒரு சிக்கல்.. என்று . லீவு எடுப்பார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது.

அவர்கள் parttime  domestic helper and parttime actors (extra )..

இந்த பகுதியில் காய்கறி  விற்பவர்கள், சிறு வர்த்தக நிறுவனங்களில்  பணியாற்றுபவர்கள் பலர் இப்படி இரண்டு வண்டிகளில் பயணம் செய்து தான் குடும்பத்தை சுமக்கிறார்கள்,

நான் நடிக்கப் போனபடத்தின் ஷுட்டிங்  கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள பகுதியில் நடந்தது. மொத்தம் முன்று ஷெட்டுயுல் .

எங்கள் யூனிட்டில் துணை நடிகைகள் முன்று பேர்  இருந்தனர்.  ஒய்வு நேரங்களில் கிட்டத்தட்ட இருபது பேர் நடிகர்கள், டெக்னீஷ்யன்கள் என்று அமர்ந்து பேசுவோம்..
உயிர் என்றால் என்ன? அறிவு என்றால் என்ன? கலை இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்,காலம் என்றால் என்ன ? வெளி என்றால் என்ன ? என்று ஒவ்வொரு நாளும் அவர்களிடையே பேசுவேன்.மார்க்ஸ்,ஏஞ்சல்ஸ் எழுதிய Art and litereture என்ற புத்தகத்தை பகல் நேரங்களில் படித்து வைத்துக் கொள்வேன் . எந்த சமயத்திலும் அவர்களுடைய பெயரை உச்சரிக்க மாட்டேன்.
இது என்பாலவர்களை ஈர்த்தது. பலர் என்னிடம் நெருக்கமாகவும், மனம்விட்டு பேசவும் ஆரம்பித்தார்கள

துணை நடிகைகள் தங்கள் கதை களை மனம் விட்டு பேசினார்கள். உலக வாழ்க்கையல் நாம் நடிகர்,நடிகைகள மிகவும் கேவலமாக  பேசுவதும், நடத்துவதும் எவ்வளவு பாவகரமான செயல் என்பதை புரியவைத்த அனுபவம் அது .

அந்த துணை  நடிகை கோயம்புத்தூரில் இருக்கிறார்.அவுடைய கணவர் கோவையில் ஜவுளி வியாபாரி, எற்கனவே திருமண ம் ஆனவர். இவர் இரண்டாவது .

"ஏன்மா ! சினிமா காரங்க இரண்டாம் தாரமாவே வாக்கப்படுரீங்க ? "
" புத்தி கெட்டு பகட்டு பேச்சை நம்பி  வீட்டைவிட்டு வந்துட்டோம். வந்தபிறகு இந்த சுழல் லேர்ந்து மீள முடியாம தவிக்கிறோம் சார். கல்யாணமா? நினைச்சு பாக்கமுடியுமா ? சார் ! ராத்திரி பத்து மணிக்கு  போலீஸ்காரன் வந்துஇன்ஸ்பெகர் குப்பிடராறு ம்பான். நேர  அவருக் நு இருக்கர லாட்ஜுக்கு போகணும்."
அவர் கண்களில் கண்ணிர் வழிந்தது. நடிக்க வில்லைஇப்போது.

"டாப் ஸ்டார இருந்த  நடிகைகள் கதை  தெரியும்தானே சார் !  இப்ப நான் இன்னாருடைய மனைவி ! ஒரு பாதுகாப்பு இருக்கு !எனக்கு  ஒரு சுயம் வந்திருக்கு " 

பெருமூச்சு விட்டார். "எல்லாம் முடிஞ்சு போச்சு சார்.! என் மகளை ஹாஸ்டல்ல போட்டிருக்கேன் சார். என்னை புரிஞ்சுகிட்டா ! அவ காலேஜ் லக்சரர ஆகணூம்ன்கா !  நான் ஐ.எ.எஸ் படிங்கன். முதலாளி தான்  படிக்க வைக்கறார்."  

சரியாக பத்துமணிக்கு அந்த மாவட்டத்தில் eb  காரன் grid மாத்துவான் .30 வினாடி லட் அணைஞ்சு எரியும்..  

"மணி பத்தாயிட்டுது சார் ! நீங்க தூ ங்குங்க " என்றார் அந்த அம்மையார்.

"தூக்கமா ? இன்னிக்கு இல்லை " என்று நினைத்து கொண்டே எழுந்தேன்.


0 comments: