Saturday, November 28, 2015


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கமும் 




கலை இலக்கிய விருதுகளும்........!!!








நாற்பதாம் ஆண்டில் காலடி வைக்கும் தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் எழுத்தாளர்கள் சங்கம் வழக்கம் போல் சென்ற ஆண்டிற்க்கான விருதுகளை அறிவித்திருக்கிறது . 




வெளி மானிலங்களில் உள்ள எழுத்தாளர் அமைப்புகள் தொடர்ந்து ஆண்டுதோரும் எப்படி நீங்கள் இப்படி லடசக்கணக்கான பெருமானமுள்ள விருதுகளை அளிக்கீறீர்கள் என்று கேட்டு ஆச்சரியப்படுகிறார்கள் .




அகில இந்திய உருது,இந்தி எழுத்தாளர் சங்கம் சில ஆண்டுகளூக்கு முன்பு கலகத்தாவில் மாநாட்டினை நடத்தியது. மதிப்பிற்குரிய எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியும் நானும் கலந்து கொண்டோம். கேரளா,கர்நாடகா,ஆந்திரா,மராட்டிய,மபி.உ.பி,பஞ்சாப்  மாநில எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர் .  அவர்கள் நாம் நடத்தும் கலை இரவு பற்றி கேள்விப்பட்டு மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். மாலை 6 மணியிலிருந்து விடிய விடிய பார்வையாளர்களை கட்டிப்போட்டு எப்படி நடத்துகிறீர்கள் என்று கேட்டார்கள். 




எங்கள் பிரகதீஸ்வரனையும்.கரிசல் குயிலையும் ,உரை வீச்சாளர்களயும்,சிறு.குறு நாடக கலைஞர்களையும் பற்றி விவரித்தேன்..




மனிதாபிமானத்திலிருந்து, புரட்சிவரை கொண்ட சங்கத்தின் பத்து அம்சத்தைச் சொன்னேன்.




எல்லாவற்றுக்கும் மேலாக "கலையும் இலக்கியமும் மக்களுக்காகவே " என்ற சங்கத்தின் கோட்பாட்டயும் குறிப்பிட்டேன்.


நான் தங்கி இருந்த அறைக்கு வந்த பல எழுத்தாளர்களொடு  பேச வாய்ப்பு கிடைத்தது.


"தமிழ் வாசகர்களுக்கு 50ம் ஆண்டுகளிலேயே விச காண்டெகர் அறிமுகம் "என்று சொன்ன பொது மரட்டிய எழுத்தாளர் என் கையைக்குலுக்கினார். "தாகூரும் சரத் சந்திரரும் எங்கள் கிராமங்களில் தொடர்கதையாக வாரப்பத்திரிகைகளில் படிக்கப்பட்டவர்கள். பிரெம் சந்தும், வியொகி ஹரியும் எங்களுக்குத் தெரிந்தவர்கள். தகழியும்,பாஸ்கரும்,வேமண்ணாவும் , மாஸ்தியும் நாங்கள் அறிவோம் .


நணப்ர்களே உங்களுக்கு பாரதிய கொஞ்சம் தேரியும்.புதுமைப் பித்தனை தெரியுமா? அழகிரி சாமியை தெரியுமா? சின்னப்ப பாரதியை தெரியுமா ? "


என்று கேட்டு அவர்களை அசத்தினேன் !




தமிழின் சிறந்த படைப்புகளெல்லாம் மற்ற இந்தியமொழிகளில் வந்துள்ளதா ?என்று


 ஆர்வமாககெட்டார்கள் !




"ஆம் ! "என்று பொய் சொல்ல  எனக்கு தயக்கமாக  இருந்தது. 

0 comments: