டாக்டர் ஜாண் செல்லதுரையும்
நானும் .................!!!
செவ்வாய்கிழமைதான் (17.11.2015 ) தான் அவருக்கு 49 வயது ஆகிறது. நாகபுரியில் இந்திய அமைதி மையத்தின் இயக்குனராக இருந்தவர் தன பணியை மாற்றிக்கொண்டு தற்போது ஒரு அறக்கட்டளையில் ஆராய்ச்சித்துறையில் ஜலகாவ் என்ற ஊரில் பணியாற்றுகிறார்.
நெல்லை மாவட்டம் சேரன் மாதேவியை சொந்த ஊராகக்கொண்டவர். தினம் பஸ்ஸில் சென்று ம.தி.தா இந்து கல்லூரியில் விலங்கியல்படித்துபட்டம் பெற்றவர்.
நண்பர்களோடு சேர்ந்து Friends Commune என்ற பரிசோதனை வாழ்வை ஆரம்பித்தார். ஐந்தாறு நண்பர்களோடு அலங்காநல்லூரின் அருகில் உள்ள காட்டுப்புகுதியில் நிலம்வாங்கி வாழத்தோடங்கினார் .அந்தநிலத்தில் அங்கு வசிப்பவர்கள் எல்லாரும்குடும்பத்தோடு உழைப்பார்கள். எல்லாரும் அதனை பங்கிட்டு வாழ்வார்கள். ஒரு புதிய சமூகத்தை உருவாக்க இந்த இளைஞர்கள் துடித்து எழுந்தனர்.
குஜராத் பல்கலைகழகத்தில் சுற்றுப்புற சூழல்பற்றி ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றார் . ஆராய்ச்சிக்கு அவர் தேர்ந்தெடுத்த பொருள் "Conflict" என்பதாகும். எந்த மோதலையும் சமாதானமாக தீர்க்க முடியும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளவர் டாக்டர். ஜாண்.
நாகபுரியில் இருக்கும் வரை நாங்களிருவரும் விவாதிக்காத பொருள் இல்லை என்றெ சொல்லலாம். .
மூன்று வருடத்திற்கு ஒருமுறை பத்து வயதிலிருந்து பனிரெண்டு வயதுள்ள தென்கொரிய சிறுவர் சிறுமியர் இருவரை இந்தியா அழைத்து வந்து 8.9.10 வகுப்பு வரை கல்வி புகட்டி அவர்களை மீண்டும் அவர்களை ஊருக்கு அனுப்பி வைப்பார். அந்தநாட்டில் ஆங்கிலம் படிக்க வாய்ப்புகள் குறைவு என்பதால். எனக்கு தெரிந்து இது பத்து ஆன்டுகளூக்கும்மேலாக நடக்கிறது.
அவர் ஜலகாவ் சென்ற பிறகு தீபாவளி அன்று அவருடைய அருமை மகள் அனிதாவையும் அழைத்துக்கொண்டு என்னை பார்க்க வந்தார்.
வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். வைணவம் பற்றி,பகத்சிங் ,கொடிகாத்த குமரன் பற்றி, பற்றி என்று விவாதம் தொடர்ந்தது.
சேரன் மாதேவி ஊர்க்காரர் என்பதால், வா .வே.சு. அய்யரின் குருகுலம் பற்றியும் ,"சம்பந்தி போஜனம்" பற்றியும்கேட்டேன் ..
"ஐயா! குருகுலம் பற்றி பேசும் முன்பு காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் நடந்ததையும் தெரிந்து கொள்வது நல்லது ஐயா ! அங்கு பிராமணர்களுக்கு தனி சாப்பாடு.! மேல்சாதி இந்துக்களுக்கு தனி பந்தி. இது சரியா ? இன்றய நோக்கில் இது பெரியதவறு என்பதில் ஐயமில்லை. 1910-1930 ம் ஆண்டுகளை நினைத்து பார்க்க வேண்டும் ஐயா ! அவர்கள் தத்தம் சொந்த பழக்க வழ்க்கங்களெப்படி இருந்த போதிலும் அதனை கணக்கிடாமல் இந்திய சுதந்திரம்,பிரிட்டிஷ் ஏகதிபத்திய எதிர்ப்பு ஆகியவற்றிர்க்காக நின்றனர் வா.வே.சு அய்யரின் தேச பக்தியை குறைத்து மதிப்பிட முடியுமா ?இளம் வயதுனருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியை அளித்ததாக கூறுவார்கள்.,அவர் பிராமணர்களுக்கு தனிபந்தி வைத்தது இன்றையசமூகநீதிபார்வையில் தவறுதான். .அதனை மாற்ற வேண்டும் என்று பெரியார் அவர்கள் அன்றே கோரியது அவரின் தீர்க்க மான பார்வையை சொல்கிறது.இதற்கு மேல் இதில் விவாதிப்பதற்கு ஒன்றுமில்லை "என்றார் .
மிகச்சிறந்த காந்தீய வாதியான டாகடர் ஜாண் செல்லதுரை அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.!!!
0 comments:
Post a Comment