"ஆயிரம் படம் தந்த
அபூர்வ மனிதர் "
1976ம் ஆண்டு "அன்னக்கிளி " என்று ஒரு படம் வந்தது. அதற்கு "பண்ணைபுரம் " என்ற பட்டிக்காட்டிலிருந்து வந்த ராசய்யா என்ற இளைஞன் இசை அமைத்தான்.
இது 2016ம் ஆண்டு .நாற்பது ஆண்டுகள் ஒடி விட்டான. ராசய்யா இளைய ராஜாவாகி இன்று 1000 படங்களுக்கு இசை அமைத்து சாதனையாளனாக திகழ்கிறார்.
40 ஆண்டுகளில் 1000 படம். ஆண்டுக்கு 25 படம் .மாதம் இரண்டு படத்துக்கும்மேல் .
படத்திற்கு ஐந்து பாடல்கள் எனறால் 5000 பாடல்கள்.
உலகம் பூராவும் தேடினாலும் இப்படி ஒரு ராட்சததனமான சாதனையை செய்தவர் இவரைத்தவிர வேறொருவர் இல்லை.
ஸ்வரங்களில் வித்தியாசம். ஸ்ருதியில் வித்தியாசம். தாளத்தில் வித்தியாசம். வெவ்வேறுபட்ட ராக விந்நியாசம் 5000 பாடல்கள் . அது மட்டுமல்ல .பின்னணியாக இசைக் கோர்வை .
திருவையாறில் தியாகய்யர் இருந்தார் தினம் தெருவில"பிக்ஷை " எடுத்து உண்பார்.
"பள்ளன் நந்தனை " பாடியதால் அகிரஹாரம் தள்ளிவைக்க கோபாலகிருஷ்ண பாரதியாரும் தெருவில். இருவரும் சமகாலத்தவர்.தெருமுக்கில் சந்தித்து பேசிக்கொள்வார்களாம் .
"இன்னிக்கு என்ன உருப்படி ?"
"நந்தன் வயக்காட்டுல விதைக்கப்பொறான் !"
"நீங்க ? "
"ஆபோகி வர்ணம் "
ஆச்சரியப்பட்டிருக்கிறேன். லட்சக்கணக்கில் ராகங்களை உருவாக்க ஒரு மனிதனால் முடியுமா ?
இளைய ராஜா முடியும் என்று சாதித்துள்ளார்.
தியாகய்யரும் செய்திருக்கலாம்.
"இசை என்பது ஒழுங்குபடுத்தப்பட்ட ஓசை "
ஒரு வினாடிக்கு 178 முறை அதிர்ந்தால் வரும் ஓசை தான் "ஸ " என்ற ஸ்வரம்..
356 முறை அதிர்ந்தால் "ப " என்ற ஸ்வரம்.
712 முறை அதிர்ந்தாள்" மேல் ஸ " என்ற ஸ்வரம்.
சர் சி.வி ராமன் "ஒளி "பற்றி ஆராய்வதற்கு முன்னால் "ஒலி "
பற்றி ஆராய வீணை கற்றாராம் .
மார்க்ஸ் கூறுவார்.இசை என்றகலைவடிவத்தை ரசிக்க காதுகள் வோண்டும்.
Not only ear but a musical ear என்றார்.
காது இருப்பவன் எல்லாம் இசையை ரசிப்பதில்லை ..
0 comments:
Post a Comment