பி.கே நாயரும் ,
"ஊமை படங்களும் "
மும்பையின் பஞ்சாலைகள இருக்கும் பகுதி> ஆலவாயிலில் கூலிதோழிலாளர்கள் காத்திருக்கிறார்கள். வாயிற்காப்போன் ஒவ்வொருவராக அனுப்பிக் கொண்டிருக்கிறான். வயதான தொழிலாளி ஒருவனை உள்ளெ விட மறுக்கிறான்.நான் நேற்றும் வேலை பார்த்தேன் என்கிறான் தொர்ழிலாளி..உனக்கு வயதாகிவிட்டது.அதனால் உன்னை வேலையிலிருந்து நிறுத்திவிட்டார்கள் என்கிறான் வாயிற்காப்போன். இருவருக்கும் தள்ளு முள்ளு . மோதலில் தொழிலாளி கிழே விழுகிறான். அவன்தலை படியில் மோத அவன் மயங்கி விழுகிறான்.
காட்சி மாறுகிறது. புனே நகரத்து வயல் வெளியில் விவசாயி வயலுக்கு நீர் பாய்ச்சிக் ஒண்டு இருக்கிறான். அவன் மாணவி அவனுக்கு கஞ்சி கொண்டுவருகிறாள். அவளோடு அவ்ர்களின் ஐந்து வயது மகன் வந்து தந்தையிடும் கொஞ்சி விளையாடுகிறான்.
நல்ல விளைச்சலில் இருக்கிறது அறுவடை முடிந்ததும் கடனை அடைத்து விடலாம் என்று மனைவியிடம் கூறுகிறான்.
அப்போது அங்கு வந்த சௌகார் (வட்டிக்காரன் ) விவசாயியை விரட்டிவிட்டு மகசூலயும் வயலையும் எடுத்துக் கொள்கிறான்.
காட்சி மாறுகிறது.
மயங்கி விழுந்த தொழிலாளியின் மகன் ஒடி வருகிறான் வாலிபனான மகன் தந்தையின் தலையை தன மடியில் போட்டுக் கொள்கிறான் . " மகனே !எந்த சமயத்திலும் நீ சௌவகாரிடம் வட்டிக்கு கடன் வாங்காதே "என்று கூறி சாய்கிறான்!
"சௌகாரிகி பாஷ் "(வட்டிக்காரன் வலை ") என்ற இந்த படத்தில் விவசாயியாக நடித்தவர் பாபுராவ் பெயிண்டர் என்ற நடிகர் இயக்குனர் அவர் இளம் மகனாக நடித்தவர் வி.சாந்தாராம்.
அற்புதமான இந்த ஊமைப்படம் இப்பொது இல்லை ஆனால் அதன் சில strip
அதாவது 50 அடி,100 அடி துண்டுகள் கல்கத்தாவில் உள்ள காயலான் கடையில் இருப்பதாக கேள்விப்பட்ட பி.கே நாயர் ஓடிச்சென்று அதன பாது காத்து ஆவ\ண பாதுகாப்பகத்தில் வைத்துள்ளார்.
1979ம் ஆண்டு நெல்லூரில் நடந்த திரைப்பட ரசனை முகாமில் நாயரையும்,சதீஷ் பகதூரையும் சந்தித்து பழகும் வாய்ப்பு கிடத்தது பின்னர் மதுரையில், நாயர்,சதீஷ் பகதூர்,தியோடர் பாஸ்கரன் ஆகியோரோடு கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
பி.கே நாயர் திரைப்படத்தை கலை வடிவமாக மட்டுமல்லாமல் அறிவியல்ரீதியாகவும் வளர்த்தெடுத்தவர்.
("சௌகார் கி பாஷ் " படம் பற்றிய குறிப்பு சித்தார்த் காக் ஆசிரியராக இருந்த "cinima " என்ற பத்திரிகையிலிருந்து கண்டெடுத்தது)
0 comments:
Post a Comment