Tuesday, March 22, 2016

ஆயிரம் நாட்களுக்கு மேல் ஓடிய 

திரைப்படம் "ஹரிதாஸ் "...!!!



நான் சிறு வயதில் டூரிங்க் கொட்டகையில் படம் பார்த்திருக்கிறேன். இரவு 7 மணிக்கு ஆரம்பித்து 11 மணி வாக்கில் முடியும். இரண்டாம் ஆட்டம் 11.30 அர்மபித்து 3.30 மணிக்கு முடியும்.படத்தின் பெயர் "ஆயிரம் தலை வாங்கி  அபூர்வ சிந்தாமணி " .முன்னாள்   முதலமைச்சர் வி.என்.ஜானகியும் ,பி.எஸ் கோவிந்தனும் நடித்தது.

தமிழகத்தில் மின்சாரம் பரவலாக்கப்பட்டதின் பயனில் ஒன்று திரை அரங்குகள் அதிகமாக தோன்றியதாகும். எம்.ஜி ஆர் ,சிவாஜி, ஜெமினி என்று மூவரும் கொடிகட்டி பரந்த காலம் உண்டு.

அப்பொதும்  கிராமங்களில் .டூரிங்க் கொட்டைககள்  இருந்தன.நடிகர்கள் பெருக பெருக கிராமத்துபெருசுகள் நடிகர்களுக்கு அவர்களாக பெயர் வைத்து அழைப்பார்கள். அப்போது ரஜனி,கமல் வந்த நேரம்.
" யார் ஆக்ட்  கொடுக்கா தாத்தா ? !  என்று கேட்டால்  
"அதுதான் அப்பு ! அந்த டப்பாமுஞ்சிகாரன் " என்பார்கள் . ரஜனியைத்தான் அப்படி சொல்வார்கள்..

இன்று ரஜனி சூப்பர் ஸ்டார். இப்போது சுப்றீம் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார் , பவர் ஸ்டார் என்று வந்து விட்டார்கள். சிவா கார்த்தி கேயனை "மைல்டு சூப்பர்  ஸ்டார்" என்கிறார்களாம்.
எம்.ஜி.ஆர் ,சிவாஜி,ஜெமினி காலத்தில் நூறு  நாட்கள்  ஓடிய படங்கள் நிறைய உண்டு.ரசிகர்கள் விழா  எடுப்பார்கள். இன்று நூறு காட்சிகளூக்கு விழா . எடுக்கிறார்கள் .

தமிழ் திரை  உலகில் ஸ்டூடியோ சிஸ்டம் உடைந்து ஸ்டார் சிஸ்டம் வந்த பொது அதன் முடி சூடா மன்னாக இருந்தவர் மறந்த எம்கே.தியாகராஜ பாகவதர் 

1934 ம் ஆண்டு "பவளக்கொடி " யில் ஆரம்பித்தவர் முடிசூடா மன்னனாகவே திகழ்ந்தார். 

1944ம் ஆண்டு அவர் நடித்த "ஹரிதாஸ் " மூன்று  தீபாவளிக்கு ஓடியது ,1000 நாட்களுக்கு மேல்  ஒரே திரை  அரங்கில் ஓடியது . திரைப்பட உலகம் கண்டிராத சாதனை யாகும்  இது .

இதில் மிகவும் வியப்பிற்குரிய விஷயம் எம்கேடி 1934ம்  ஆண்டிலிருந்து 1959 வரை   14 படங்களில்மட்டுமே  நடித்தார்.

தமிழ் திரை உலகின் உண்மையான சூபர் ஸ்டார் எம்.கே. டி 
 என்றால் அது மிகை அல்ல .





 

0 comments: