இட ஒதுக்கீடும்
நாமும்........!!!
80 ம் ஆண்டுகளில் இட ஒதுக்கீட்டினை எதிர்த்து வலது சாரிகள் கடுமையான போராட்டத்தினை நடத்தினார்கள். குறிப்பாககுஜராத் மாநிலத்தில் அன்றைய இந்துத்வா தலைமையேற்று நடத்தியது.
அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள்,வாங்கி இன்சூரன்சு பொதுத்துறை ஊழியர்கள் என்று குஜராத் மாநிலம் இட ஒதுக்கீட்டினை எதிர்த்து பொங்கியது.
இடதுசாரி சங்கங்கள் செய்வதறியாது திகைத்தன. சிலகூட்டத்தோடு கோவிந்தா போட ஆரம்பித்தன. அகமதாபாத் நகரம் ஸ்தம்பித்தது. இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் சங்கம். ஆனால் ஊழியர்கள்மன நிலை முற்றிலும்மாறுபட்டு இருந்தது. இட்ஒதுக்கீட்டை எதிர்க்கும் வேலை நிறுத்தத்தில் பங்குபெறவேண்டு என்று விரும்பினார்கள். ஒரு கட்டத்தில்சங்கத்தின் தலைமையைமீறி வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்வோம் என்றார்கள்.
அகமதாபாத் மண்டல சங்க நிர்வாகிகள் திகைத்தார்கள். அகிலஇந்திய தலைமையை ஆலோசனை கேட்டார்கள்.
" இட ஒதுக்கீட்டினை நாம் ஆதரிக்கிறோம். அதனை எதிர்க்கும் எ ந்த கிளர்சசியிலும்நாம் பங்குகொள்ள மாட்டோம் "என்று மேலிடத்திலிருந்து ஆலோசனை வந்தது.
பெருவாரியான ஊழியர்கள் இதனை எதிர்த்தார்கள். சங்க செயல்விரர்கள் வேலை நிறுத்தத்தை உடைத்துக்கொண்டு அலுவலகம் செல்ல முடிவு செய்தார்கள்.
இதற்கிடையே வலது சாரிகள் வன்முறையை தூண்டிவிட்டார்கள்.அரசு ஊரடங்கு உத்திரவு போட்டது. வெளியே வந்தால் சுட்டுவிடும் ஆபத்து.அகமதாபாத் சங்க நிர்வாகிகள் மீண்டும் அகில இந்திய தலைமையை கலந்து கொண்டார்கள்.
"இட ஒதுக்கிட்டைனை நாம் ஆதரிக்கிறோம். என்ன வந்தாலும் நாம் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க மாட்டோம். ஊரடங்கு உத்திரவு இருப்பதால் கலெக்டரிடமனுமதி பெற்று அலுவலகம் செல்லுங்கள் "என்று தலைமை அறிவித்தது.
செயல்விரர்கள் அனுமதி பெற்று அலுவலகம் சென்றார்கள். வலது சரிகளின்மயக்கும் பேசசில் மயங்கிய ஊழியர்கள் " துரோகிகள் " என்று கோஷம் போட்டார்கள். அலுவல க்ம்செல்லும் செயல்விரர்கள்மீது செருப்புகளை வீசினார்கள் .
அந்த ஆண்டு நடந்த சங்க தேர்தலில் அகில இந்திய தலைமையை ஆதரித்தவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள் .
ஒரே ஆண்டுதான்.வலது சாரிகள் வேஷம் கலந்து ஊழியர்களவிழித்துக் கொண்டனர்.
மீண்டும் இடது சாரிகள்பொறுப்பிற்கு வந்தார்கள் .
நமது தலைமை சரியான முடிவை சரியான நேரத்தில் எடுக்கும்.அதனை உறுதியாக நின்று நடைமுறைப்படுத்தும் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது.
என்ன செய்ய !
யானை இளைத்தால் எறும்பு கூட நாட்டாமை செய்யுமாம் !!!