skip to main |
skip to sidebar
எங்கள்
"சுனில் மைத்ரா "
மார்க்சிஸ்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக இருந்தவர் தோழர் சுனில் மைத்ரா ! நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். நாடளுமன்ற பொது கணக்குக் குழு தலைவராக இருந்தவர்.எல்.ஐ.சி யை கூறு போடும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்ட பொது அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி இந்த செய்தியை "பத்திரிகையாளரிடம் நீங்களே சொல்லுங்களேன் " என்று மரியாதை அளித்த பெருமைக்கு உரியவர்.
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க செயல்வீரரகளுக்கு அவர் சங்கத்தின் உறுப்பினர் . அகில இந்திய துணை செய்லாளர். எல்.ஐ.சி நிர்வாகத்திற்கு சங்கத்தின் ராணுவ அமைச்சர் . மூத்த அதிகாரிகளுக்கு மரியாதை கலந்த சிங்கம்.
சுனில் இளம் வயதிலேயே சுதந்திர போராட்டத்தில் ஈடுபாட்டார். கைதாகி சிறைபட்டார்.அவரோடு சிரையீருந்தவர்கள் பின்னாளில் மத்திய அமைச்சரானார்கள். மத்திய தொழிலாளர் நல அமைச்சராக இருந்த ரகுநாத ரெட்டி அவரோடு ஒரே "செல்"லில் சிறையில் இருந்தவர்.
மிகவும் சாதாரண வசதி கொண்ட குடும்பம். அவருடைய சகோதரர் மாநில அரசில் ஒரு ஊழியராக இருந்தார். பிரிட்டிஷ் அரசை எதிர்த்து தம்பி போராடுவது அண்ணனுக்கு பிடிக்கவில்லைவீட்டிற்கு வரக்கூடாது என்று கூறிவிட்டார்.இரவு அவருக்கு தெரியாமல் புரவாசல் வழியாக வந்து தாயார் கொடுக்கும் உணவை உண்பார் .
காலம் மாறியது.இந்தியா சுதந்திரம் பெற்றது. சுனில் வேலை தேடினார். கொவாபறேடிவ் இன்சுரன்ஸ் கம்பெனியில் சொற்ப சம்பளத்தில் வேலை கிடைத்தது. ஊழியர்களை திராட்டி ஊதிய உயர்வுக்காக போராட்டம். வெற்றி கிடைத்தாலும் நிர்வாகத்தின் அடக்குமுறை அதிகரித்தது.கல்கத்தாவிலிருந்து கோயம்புத்தூர்,நாகபுரி என்று மாற்றல்கள் .
அவருடைய தொழிற்சங்க ஈடுபாடு அவரை கம்யுனிஸ்ட் இயக்கத்தின் பால் கொண்டு சேர்த்தது.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு,மத்திய குழு என்று அவருடைய அரசியல் வாழ்வு உயர்ந்தது.
மாநில அரசு ஊழியராக இருந்த அண்ணன் அப்படியே இருந்தார். அவருக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வுக்காக தாயார் மூலம் தம்பியின் அரசியல் செல்வாக்கை பயன் படுத்த விரும்பினார்.
"இந்திய சுதந்திரத்திற்காக போரடிசிறைசென்றவனின் தேச சேவை அவன் குடும்பத்தாலேயே இந்த அளவுக்குதான் மதிக்கப்படுகிறது " என்று சுனில் ஒரு ஊழியர் கூட்டத்தில் கூறும் போது நாங்கள் நெகிழ்ந்துவிட்டோம்.
0 comments:
Post a Comment