skip to main |
skip to sidebar
குழந்தை வளர்ப்பு ,
பெற்றோர் ,
நாறும் பூ !!!
திருநெல்வேலி தசசநல்லூர் ல இருக்கற வேதிக் பள்ளில கருத்தரங்குநடந்திருக்கு.நாறும் பூ நாதன் ,பூதத்தான் ஆகியோர் பேசியுள்ளனர் . தலைப்பு குழந்தை வளர்ப்பும்,பெற்றோர்களும் என்பதாகும்.
எனக்கு வயதாயிட்டு . ஆனா நானும் பெற்றோரா இருந்தவனாதானே ! என்னுடைய அனுபவம் ரொம்ப "unique "
எனக்கு ஒரே பையன்.பட்டப்படிப்பு முடிஞ்சதும் வடநாடு போயிட்டான்.அங்கதான் pg ,law படிசசு வேலையும் பாக்கான். நம்மளுக்கு ஒரு நப்பாசை. நம்ம தின்நேலி பிள்ளையை கட்டிபோடனும் னு .எல்லாம் கூடி வந்தது.. நல்ல செவத்த பிள்ளை .பாளையன் கோட்டை . Bcom 1st class . விட்டு வேலைலமாகா கெட்டி .சாம்பார் பண்ணினா திருநெல்வேலி ஜில்லாவே மணக்கும். கலயாணம் முடிஞ்சுது .
ரெண்டு வருஷம் கழிஞ்சு பேரன் பொறந்தான்.அப்பம் என் அம்மை இருந்தா. எம் பேரத்தான் வைக்கணும்னு சொல்லிட்டாங்க.சாண்றித்ழ படி சியாமளம் .கதை எழிதும் போது காஸ்யபன். அரசியல் கட்டுரைனா திலீபன் . எதை வைக்க.எங்க அம்மை ஒரே போடா போட்டது . குடும்ப பெரிதான வைக்கணும்னு . குடும்ப பெரு "பதஞ்சலீஸ்வரன் " பெற்றோர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எவருமே கவலைப்படவில்லை.
பையன் வடநாட்டுக்குடும்பத்ததோட போயிட்டான். ஒருவருசத்துக்கு மேல ஆயிட்டது. பேரன் பாக்கணும்னு சொல்லி சொல்லி ஆறுமாதம் ஆகி வந்தாங்க. பேரன் வளந்துட்டான். நிக்கவே மாட்டேங்க. ஓட்டம் தான். எங்க விட்டு அம்மாவுக்கு அவனை கொஞ்சத்தான் நேரம். இடுப்புல தூக்கி வச்சுக்கிட்டு விட்டுவிடா போயி காட்டுவா . அவனை "நிகால்" னு கூப்பிட்டுத்தாங்க . "நிகால் காஷ்யப் " னு வடநாட்டு பேரை வச்சுட்டாங்க>
வந்ததிலிருந்து மருமக தான் சமையல். எங்க விட்டு அம்மா தோட்டத்துல துணிகளை காயப்போட்டுக்கிட்டு இருந்தாங்க.மருமக சாம்பார் வைக்கா . வாசன தூள் கிளப்புது. பேரன் அவளை வேலை செய்யவிடாமா சேட்டைபண்ணிக்கிட்டுஇருக்கான். அவன் தூக்கிகிட்டு வந்து"மாமா! இவனபாத்துக்கிடுங்கசாம்பார் கொதிக்குது. இறக்கிப்புட்டு வாங்கிடுதேன்னு " மருமக பேரனை எங்கிட்ட கொடுத்தா.
அவனை தூக்கினேன் .
"சக்கரை பயலே "னு கொஞ்சினேன் .
கண்ணாடியை புடுங்கி எரிஞ்சான். ஒரே சிரிப்புதான்.
"அயோக்கிய பயலே"னு கொஞ்சினேன் .
காத கடிசான் .முக்கைகிள்ளினான் .
சுகமா இருந்தது.
திடீரென்னு வராண்டாவில பிளாஸ்டிக் வாளி "டோம்" னு கேட்டது. எங்க விட்டு அம்மாதான்.கோபமோ . பயமா இருந்தது. "சமாளிக்க என்னம்மா ? "என்று கேட்டேன்.முகம் எள்ளும் கொள்ளு வெடிக்கிற பதத்துல இருந்தது. கண் சிவந்துஇருந்தது. விசும்பிடு வாளோ என்று தோன்றியது.
"ஊரா விட்டு பிள்ளையை இம்புட்டு கொஞ்சசுதேளே ! எம் பிள்ளையை இப்படி ஒருநாள் தூக்கிவசசு கொஞ்சியிருக்கேளா?"
முந்தானையால் முகத்தை முட்டிக்கொண்டு உள்ளே போய்விட்டாள் .
வே ! நாறும் பூ ! நேர பஸ் பிடியும் ! பாளை போய் அங்கன மன நல டாக்டர் ராமானுஜத்தை விளக்கம் கேட்டு எனக்கு சொல்லும் வே ! நல்லா இருப்பெரு !!!
0 comments:
Post a Comment