Tuesday, June 14, 2016






"கிருஷ்ணா நதிக்கரையிலிருந்து "

என்ற குறு நாவலை முன் நிறுத்தி ...!!!


முப்பது நாற்பது ஆண்டுகளாகி இருக்கும் . பிரபலமான தமிழ் வாரப்பத்திரிகையில்  சுஜாதா   தொடர் கதை எழுதிவந்தார். 

"சிலி நாட்டு அதிபர் இந்தியா வருகிறார் தமிழ்நாட்டிற்கு வந்து ரயில்பெட்டி தொழிற்சாலையை பார்வை இட விருக்கிறார்.அவர கொலை செய்ய வெளிநாட்டு ஆசாமிகள் சதி  செய்கிறார்கள். இதுதான் தொடரின்  பின்னணி. 

அப்போது தமிழக சட்டமனரத்தில் விவாதம் நடக்கிறது.the irresistable Umaanaath சட்டமன்றத்தில் பேசுகிறார் ."

மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி அப்போது மண்டையன் ஆசாரி சந்தில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

அங்கு தோழர்களோடு சுஜாதா பற்றி உறையாடிக்கொண்டிருந்தேன் . எவ்வளவு லாவகமாக உமாநாத்தை தன நாவலுக்குள் சுஜாதா கொண்டுவந்திருக்கிறார் என்று புகழ்ந்து பெசிக்கொண்டிருந்தேன் .கேட்டுக்  கொண்டிருந்த கட்சி தோழர்கள்  மௌனமாக இருந்து   கொண்டிருந்தார்கள். எதுவுமே பேசவில்லை ! நிழலாடியது .திரும்பினேன்.

பி. ஆர் அவர்கள் நின்று நான் பேசியதை கேட்டு நின்றுகொண்டிருக்கிறார்.

நடுங்கி விட்டேன். மாடியிலிருந்து இறங்கி வந்தவர் என் பேச்சை கேட்டு நின்றிருக்கிறார். மற்றவர்கள்  பெரியவர் என்ன சொல்லப்போகிறாரோ என்று நினைத்து மௌனமாக  உட்கார்ந்து இரூக்கின்றனர்.இது தெரியாத நான் சுஜாதா வை புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன்.. 

"ஏம்பா எல்.ஐ.சி காரா !" உமா  நாத்தை பற்றி எழுத சுஜாதா வேண்டும். ஏன் ! உம பேனா எழுதினா நிப்பு ஓடஞ்சுடுமா ? நம்மாளுக ஒவ்வோத்தனுக்குள்ளயும் ஒரு இதிகாசமே மறைஞ்சி இருக்கு ! அதை இலக்கியமாக்க சுஜாதா வரணுமா ?"

பெரியவர் பின்பக்கம் சென்றுவிட்டார்.

அப்போது நான் சுந்தரய்யா எழுதிய the telungana strugle  என்ற புத்தகத்தை படித்திர்ந்தேன்.மேலும் ராஜேஸ்வர ராவ் எழுதிய புத்தகத்தையும் படித்தேன். இதனை ஒரு பிரும்மாண்டமான நாவலாக எழுத விரும்பினேன். 

இந்த சமயத்தில் பி.டி . ரணதிவே , பசவபுன்னையா ஆகியோர் மாஸ்கோ சென்று அகிலத்தோடு கலந்து கொண்டதாக கேள்விப்பட்டேன். அதற்கான ஆவணங்களை சேகரிப்பதில் முனைந்தேன். நாட்கள் ஓடிவிட்டான. 

நாவல் எழுதுவது இருக்கட்டும். ஒரு குறு   நாவலாவது உடனடியாக எழுத விரும்பினேன். ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆயுதம் தாங்கிய புரட்சி,நக்சலிசம், எதிரி வர்க்க அழிப்பு, தனி நபர் அழிப்பு என்று இயக்கம் மலினப்படுவதையும் கண்டேன்.

நாகார்ஜுனா அணை கட்டும்போது  அங்கு சென்று அந்த லம்பாடி மக்களோடு ஊடாடினேன்.கிருஷ்ணா நதியிலிருந்த நீர் வீழ்ச்சியில் குளித்து  மகிழ்ந்தேன்  எப்பேற்பட்ட வீரம் செறிந்த போர் ! சுந்தரய்யா  கேந்திர்ரா சென்று பார்த்தேன்.ஆயுதப் புரட்சியின் போது அவருக்கு தகவல் துணை ஒரு ரேடியோ பெட்டிதான். அதோடு தான் முன்று ஆன்டுகள் கம்யூனிஸ்டுகள் தெலுங்கானாவை விடுவித்து ஆட்சி செய்துள்ளார்கள் . ரத்தமும் சதையுமான அந்த இதிகாசத்தை ---

என்னால்" கிருஷ்ணா நதிக்கரையிலிருந்து " என்ற குறுநாவலை தான் எழுத முடிந்தது.



( சென்னை புத்தக கண்காட்சியில் இந்த புத்தகத்தை வாங்கி படித்து அது பற்றி எழுதியுள்ள  எங்கள் தோழர் ராமன் (வெல்லூர் ) அவ்ர்களுக்கு நன்றீ )










  

0 comments: