skip to main |
skip to sidebar
"படித்தவன் பொய் சொன்னால் "
"ஐயோ ! ஐயோ ! என்று போவான் "
-------பாரதி
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என்று பத்திரிகைகள் அலறுகின்றன.நேற்றே தொலைக்காட்ச்சிகள் ஒப்பாரிவைக்க ஆரம்பித்து விட்டன.
7000/- ரூ யிலிருந்து கடைநிலைஊழியருக்கு சம்பளம் 18000/_ ரூ யாக உயர்ந்துள்ளது என்று கூவுகின்றன .
சினிமா கொட்டகைல கடலை விக்கறவன் கூட சர்க்கார் ஆபிசுல பியூனாக போயிறலாமா னு நினைக்கான் .
இது ஜமக்காளத்துல கடைஞ்சு எடுத்த போய் . படிசச அதிகாரிகள் சொன்ன போய் .
உண்மைதான் என்ன ? மத்திய அரசு பணில உள்ள மிகக்குறைந்த ஊதியம் பெரும் கடைநிலை ஊழியருக்கு இன்று 19000/- ரூ சம்பளம் என்று வைத்துக் கொள்வோம்.
இதில் 7000/-ரூ அடிப்படை சம்பளம். பஞ்ச,படி,வாடகை படி ,அது இதுனு 12000 /-ரூ கொடுக்கான் . மொத்தம் 19000 /- இப்பமே வாங்குதான்.
பத்து வருசத்துக்கு ஒருதரம் பஞ்சசப்படியை அடிப்படை சம்பளத்தோடு சேத்துரணம் னு நீதி மன்ற தீர்ப்பு இருக்கு.
கமிஷன் காரன் என்ன செஞ்சான் பஞ்சபடில 12000/- ரூபாய எடுத்து அடிப்படை சம்பளத்துல செத்துட்டான். இப்பம் அடிப்படை சம்பளம் 18000/-ஆகி மிசசமுள்ள 1000 /- ரூ பஞ்சசப்படியோட சேர்த்து அதே 19000?- தான் . இது சாம்பிள் தான.
7000 /-ரூ அப்படியே 18000/-ரூ ஆயிட்டதுன்னு இதை தான் சொல்லுதானுக.
படிசச பயலுக பூறா போய் சொல்லுதானுக .
இந்த பொய்யாய் எதிர்த்து மத்திய அரசு ஊழியர்கள் போராடுவோம் னு அறிவிசசி இருக்காங்க !
அரசு இறங்கும் .!
இறங்கத்தான் வேணும் !!!
0 comments:
Post a Comment