Monday, July 11, 2016





காஞ்சியிலே

"சுந்தாவை

பார்த்தேன் "



80ம் ஆண்டாக இருக்கலாம் . மதுரையில் இலக்கிய முகாம் நடந்தது. மாநிலம்    பூறாவும்  இருந்து நண்பர்கள் வந்திருந்தனர்.

அப்போது நான் புனே திரைப்பட கல்லூரி நடத்தும் திரை ரசனை வகுப்புக்கு போய் வந்திருந்தேன். திரைப்படம் பற்றி என்னை வகுப்பு எடுக்க சொன்னார்கள். அரை மனதோடு சரி என்றேன் .

வகுப்பு ஆதம்பிக்கும் முன்  கல்லூரிப்பேராசிரியர் அருள் நந்தி "கட்டாயமாக " மா  பூமி "  பற்றி   சொல்லுங்கள் " என்றார் .

 திரைப்படத்தின் தோற்றம் , verbal  language ,language  Drawing , Language photography , language of cinematography என்று பேசிவிட்டு   "மா பூமி" பற்றி இருப்பது நிமிடம் பேசினேன்..  எல்லாரும் பாராட்டினார்கள் .

சென்னையில் இருந்து வந்த நண்பர் பாராட்டினார்> அவர் அருகில் இருந்தவர் என்னை படமாக வரைந்துள்ளார் என்றும் சொல்லி அந்த நண்பரை அறிமுகப்படுத்தினார்.கல்லூரி மாணவன் போல் -இல்லை - பள்ளி மாணவன் போல் இருந்த சுந்தா தான் அது.

பொதுத்துறை வங்கியில் பணியில் சேர்ந்து  அதிகாரியாகி ஓய்வு பெற்ற சுந்தாவை 3-7-16  அன்று  பார்த்தேன் .

காஞ்சி  த.மு.எ .ச      நண்பர் பலரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. கலந்து உரையாடினோம். என்னுடன் வந்திருந்த முத்துமீனாட்ச்சி அவர்களும் கலந்து கொண்டார்கள்.

மிகவும் இனிமையான அனுபவமாக இருந்தது.             










 

2 comments:

தருமி said...

மதுரக்காரரோ....?

kashyapan said...

ஆமாம் ! சொந்த ஊர் திருனெல்வேலி . நாற்பது வருடம் மதுரை வாசம் ---காஸ்யபன்