skip to main |
skip to sidebar
விவசாயிக்கு விதைக்கத்தான் தெரியும் !
விதைக்கு முளைக்கத்தான் தெரியும் .......!
"Sincere and faithful wishes will never fail " என்று ஒரு சொலவடை உண்டு . என் பேரன்கள் பற்றி நான் இட்டிருந்த நிலைத்தகவலுக்கு கிட்டத்தட்ட ஐநூறுக்கும்மேற்பட்ட வாழ்த்து செய்திகள் குவிந்துள்ளன. மனம் நிரம்பி தளும்புகிறது.
நிஹால் காஷ்யப்,,அபினவ் H .R இருவருமே கைக்குழைந்தையாக இருந்ததிலிருந்து என்னிடம் வளர்ந்தவர்கள். அதிலும் சின்னவன் அவன் தாயார் படிக்கும் காலத்திலேன்னோடேயே வாரக்கணக்கில் இருந்தவன்.பல சந்தர்ப்பங்களில் அவனை மூத்தவன் வீட்டுக்குக்கொண்டு சென்று அவர்கள் இருவரும் விளையாடும் அழகை ரசித்தவன்.அவர்களின் செல்ல சண்டையும்,விட்டுக்கொடுப்பதும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை.
அவர்கள் பள்ளி செல்லும்காலங்களிலும் அவர்களோடு பேசுவேன். விவாதிப்பேன். சாதி,சமயம்,சமநீதி என்று பேசுவோம். எந்த தயக்கமும் இன்றி என்னோடு எதைப்பைப்பற்றியும் பேசுவார்கள். ஒரே ஒரு விகுயத்தில்மட்டும் முரண்படுவார்கள். Reservation இட ஒதுக்கீடு விஷயத்தில் ஏற்கமாட்டார்கள்." தாத்தா ! நான் 90 மார்க் வாங்கி பாஸாகிறேன். இன்னொருத்தன் 40 வாங்கி பசிக்கிறான். ரெண்டு பேர் திறமையும் வித்தியாசம் இல்லாயா ? " என்பார்கள். கொஞ்சம் subjectivisym இருக்கிறது. நான் அதற்கு பதில்சொல்லமாட்டேன்.
"உங்கள் வகுப்பில் ஒதுக்கீடு பெற்ற நண்பர்கள் உண்டா ?"
"உண்டு "
"அவங்க கிட்ட இது பற்றி பேசி இருக்கீர்களா ?'
"இல்ல "
"ஒதுக்கீடு வேண்டாம் கிறது ஒந்தரப்பு நியாயம் "வேணும்ங்கிறவன் நியாயத்தை கேக்கணும் இல்லையா? அப்பதான் முழுமையேயான விவரம் கிடைக்கும் "
ஒன்பதாவது படிக்கும்போது இத சொன்னேன். கொஞ்சம் கொஞ்சமாக அது பற்றி பேசுவது குறைந்தது .ஒரு புரிதல் ஏற்பட்டிருக்கலாம்.
இருவருக்கும் ஒரு வயது வித்தியாசம்.சின்னவன் 11 th படிக்கும் பொதுபெரியவன் 12 th .இருவருமே cbse stream .
"சீதாராம் எசுரி யார் னு தெரியுமாடா ?"
"தெரியுமே 1 உங்க கடசி தலைவர் " என்றான பெரியவன்.
சின்னவன்" பாட்டி எழுதின சிறுகதை தொகுப்புக்கு முன்னுரை எழுதினார்னு நீங்க சொன்னிங்க "என்றான்
அவரவர் தளத்திலிருந்து விஷயங்களை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் .
"சீத்தரமும் cbse தான் "
"அப்படியா ?"
"எப்படி பாஸ்பண்ணினார் தெரியுமா ?"
"எப்படி ? '
"natinal merit list ல number one " இந்தியாவிலேயேமுதல் மாண வனாக"
"நீங்க இப்படி பாஸ்பண்ணுவிங்களாடா ?"
"வாசிஸ்சுருவோம் "என்றான் மூத்தவன்.சின்னவன் மண்டைய ஆட்டினான் ."செஞ்ச்ருவம் தாத்தா " என்றான்.
"ஜவஹர்லால் பல்கலையில்படித்தார். சக மாணவர்களுக்காக நின்றார். இந்திரா அம்மையார் விட்டு முன்னால் பல்கலைக்கழக கமிட்டியிலிருந்து ராஜினாமா செய்ய வற்புறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். அப்போது அவருக்கு வயது 21 தான். "
பிரமிப்போடு இருவரும் கேட்டார்கள்..
"மாதர் சங்க தலைவர் மைதிலி சிவராமன் தெரியுமா ?"
"பாட்டி சொல்லியிருக்காங்க "
"அவங்க அமெரிக்காவில் படி சங்க . அமெரிக்காவுல "குயூபா " னு சொன்னாலே உள்ள போட்டுருவான் அவ்வளவு கெடுபிடி . மைதிலி அம்மா சர்க்காருக்கு தெரியாம சரக்கு விமானத்துல சரக்கோடு சரக்கா "குயூபா " போய் பத்துநாள் தங்கி பத்திரிகைல எழுதினங்க ."
பேரன் பேத்திகளோடு ஊடாடுவது ஓர் அருமையான அனுபவம்.
நீங்களும் உங்கள் மகன் மகள் பேரன் பேத்தி களோடு பேசுங்கள்..
விவசாயிக்கு விதைக்கத்தான் தெரியும்.!
விதைக்கு முளைக்கத்தான் தெரியும் !!
சரிதானே !!!
0 comments:
Post a Comment