skip to main |
skip to sidebar
"மூலதனம் "
சென்னையில் மூலதனம் நூலை வகுப்பு நடத்தி சொல்லி கொடுக்கிறார்கள்.குறிப்பாக தாம்பரம் பகுதியில் தோழர் .பிகே ராஜன், தேவ பிரகாஷ் ,ஆகியோர் இதில் முழுமையாக இறங்கி பணியாற்றுகிறார்கள். நான் ஆரம்ப காலத்தில் "மூலதனம் நூலை ஒரு முறை படித்திருக்கிறேன். அதில் புரிந்து கொண்டதை வீட புரியாதது தான் அதிகம்பின்னர் ஆத்ரேயா வின் வகுப்புகளின் மூலம் கொஞ்சம்தெளிவு பெற்றேன்.
குன்றக்குடி அடிகளார் (sr ) அவர்கள் உரையை கேட்டு இருக்கிறேன். பணம் ,பண்டம், என்று அவர் M , M 1, M 2 ,என்று அவர் எளிமையாக விளக்கி சொல்வார் .
மூலதனம் பற்றி தெரிந்து கொண்டதை வீட அதனை படிக்கும் பொது அந்த தொழிலாளர்களும் ,இளம் உழைப்பாளிகளும் பட்ட துயரம் தான் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியது.
17ம் நூற்ரான்டில் தொழிற் புரட்ச்சி ஏற்பட்டதும் பட்டறைகள் உருவாகின.பொருள் உற்பத்தியில் மிகப்பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன.இதற்கான ஆலைகள் ,தொழிற்சாலைகள் உருவாகின. இதனை உருவாக்க நிறைய மூலதனம் தேவைப்பட்டது.
அப்போது பிரிட்டன்,ஸ்பெயின் ,பெல்ஜியம் போன்ற நாடுகள் பலமான கடற்படையை வைத்திருந்தன.
கரிபியன், ஆபிரிக்க, அரேபிய ,இந்து சமுத்திர பகுதியில் செல்லும் வியாபாரகப்பல்களை கொள்ளையடிக்க இந்த கப்பற்படை தளபதிகளை பிரிட்டன்போன்றநாடுகள்அனுப்பின.இவர்கள்கொள்ளையடித்தவைகளை தங்கள் நாட்டில் தேவைப்படும் மூலதனமாக்கிக் கொண்டன.இந்த கொள்ளையடித்த தளபதிகளுக்கு "சர் " பட்டம் கொடுத்து மகிழ்வித்தன
"மூலதனம் " தன கருவிலேயே குற்றமிழைத்த ஒன்று .
0 comments:
Post a Comment