skip to main |
skip to sidebar
(விமரிசனமல்ல )
"பிங்க் "
( இந்தி திரைப்படம் )
மினல் மற்றும் அவளது தோழிகள் நீதிமன்ற கூண்டில் நிற்கிறார்கள். கொலை முயற்சி,விபசாரம் என்று கடுமையான குற்ற சாட்டுகளுடன் அவற்றிற்கு உடந்தை என்று வழக்கு . இவர்களுக்காக வக்கீல் தீபக் சககல் ஆஜராகிறார்.
மன்றத்தில் பொது மக்களும் அமர்ந்திருக்கிறார்கள். வக்கீல் சககல் வாதாட ஆரம்பிக்கிறார். கூண்டில் நிற்கும் மினல் பதில் சொல்ல தயாராகிறார்.
"மினல் நீங்கள் கன்னிதானா ?"
மினல் தயங்குகிறாள். நீதிபதி "இது என்ன கேள்வி தீபக் ?" என்று கோபமாகக்கேட்கிறார்.
"மினல் என்கேள்விக்கு பதில் சொல்லுங்கள் "
தயங்கியபடியே மினல் "இல்லை "என்கிறாள்.
"எப்போது உங்கள்கன்னித்தன்மையை இழந்திர்கள் ?"
"பத்தொன்பது வயதில்."
"after becoming major note this your honour "
"யார் அந்த பையன் ?"
"உறவுக்காரன் "
"பணம் கொடுத்தானா ?"
"நாங்கள் விரும்பியே ஈடுபட்டோம் "
"அதன் பிறகு இப்படி நடந்தது உண்டா?"
"வெவ்வேறு நண்பர்களோடு இரண்டுதடவை "
"பணம் வாங்கினாயா?"
"என்விருப்பத்தின் பேரில் நடந்தது. வாங்கவில்லை "
"மூன்று முறை நடந்துள்ளது .நான்காவதாக "சிங் " கூப்பிட்டபோது ஏன் போகவில்லை ?"
"விருப்பமில்லை "
"அவனிடம் என்ன சொன்னாய் "
"No "
"அவன் என்ன செய்தான் ?"
"என்னை தொட்டான் "
"your honour ! வேசியானாலும், தோழியானாலும்,காதலி ஆனாலும்.ஏன் மனைவி ஆனாலும் no என்றால் no தான் "
படத்தின் பெரும்பாண்மை காட்ச்சிகள் நீதி மண்றத்தில்நடக்கிறது. வக்கீலாக அமிதாப் அவருடைய அந்த baritone அடிக்குரலில் பேசுவது பார்த்து அனுபவிக்க வேண்டியதாகும்.
இளைஞர்கள் ,மாதர் அமைப்புகள், வாலிபர்கள் கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம். படம் இந்தியில் இருக்கிறதே !
பரவாயில்லை !
பார்த்துவிடுங்கள் !!
0 comments:
Post a Comment