" தீக்கதிர் " பத்திரிகையும் ,
விளம்பரங்களும் ...!!
இரண்டு நாட்களுக்கு முன்னர் தீக்கதிர் பத்திரிக்கையில் ஒரு விளம்பரம் வந்தது .ஒரு கோவில் கும்ப அபிஷேகம் பற்றிய விளம்பரம் அது.
இப்படிப்பட்ட விளம்பரம் நம் பத்திரிக்கையில் வரலாமா ? என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள் .
பலர் எத்தனாமதேதி, எந்த பதிப்பு என்று கேள்விகளைஆர்வத்தோடு எழுப்பி உள்ளனர் .இவர்கள் பத்திரிக்கை யை தினமும் வாங்குபவர்களா என்பதை எழுப்பிய கேள்விகளிலிருந்தே எண்ணி விடலாம்.
1969 ஆண்டிலிருந்து தீக்கதிரும்,செம்மலரும் மதுரையிலிருந்து வர ஆரம்பித்தன . அன்றிலிருந்து எனக்கு அதனோடு தொடர்பு ஆரம்பித்தது. தீக்கதிர் பத்திரிகையின் கார்டூனிஸ்ட், பிழை திருத்துபவர், செம்மலர் துணை ஆசிரியராக பணியாற்றிய தோ ழர் வரதராஜன் 30 ரூ அலவன்ஸ் கொடுப்பார்கள்..தீக்கதிர் துணை ஆசிரியராக ஆ.சண்முக சுந்தரம் BA ;BL இருந்தார். வ .உ.சி.யின் பேரர் . Bdo வேலையை விட்டு வந்தவர்மாதம் 60 ரூ . திண்டிவனத்தில் வஸ்தியான குடும்பத்து பையன் ஞானபாரதி .துணை ஆசிரியர் 30 ரூ. மதுரையில் இதனை வைத்துக்கொண்டு குடுமபத்தோடு வாழ முடியாது தோழர்கள் சென்னையிலும், அல்லிநகரத்திலும் குடும்பம் இருக்க மதுரையில் பணிபுரிந்தார்கள். மெஷின் மென் பாலன் வீட்டில் மதீய சோறு. புளிக்குழம்பு வரும். விசேஷ நாட்களில் மோர் கிடைக்கும்.
மாலை 3மணிக்கு படிக்காசு அல்லது டீ காசு நாலணா கொடுப்பார்கள். இரவு சித்திரை வீதியில் கை ஏந்தி பவனில் நான்கு இட்டலி சாப்பிடுவார்கள்.
(சமீபத்தில் ஞான பாரதி யோடு தொடர்பு .இன்று அவர் முத்த புகழ் பெற்ற வக்கீல் . "காஸ்யபன் ! அன்று பட்டினி வாழ்க்கை தான். ஆனால் அதுதான் என் பொற்காலம் "என்கிறார் இன்று லட்சத்தில் புரளும் அவர்)
இன்றும் தீக்கதிர் வளாகத்தில் பணி புரிபவர்கள் living wage ஐ எட்டவில்லை .
பத்திரிக்கை நிர்வாகத்தின் சிலவு .என்பது மிகவும்வி.த்தியாசமானது .டைம்ஸ் ஆப் இந்தியா , இந்து ,இந்தியன் எஸ்பிரஸ் ஆகியவை முக்கியமான பத்திரிகைகள். அவற்றின் ஆசிரியர் ஒருவரோடு அறிமுகம் கிடைத்தது . "எங்க வருமானம் வித்தியாசமானது. வருமானம் என்பது சந்தாவை பொறுத்து இல்லை.தினம் காலையில் பத்திரிகையை ஆளுக்கு கொடுத்து விட்டு கும்பகோணம் டிகிரி காப்பியையும் கொடுக்கமுடியும் இலவசமாக . வருமானம் அவ்வளவு " என்றார்
விளம்பரத்தின் மூலம் கோடிக்கணக்கில் வருகிறது. சாதாரணமாக 18 பக்கத்திலிரு0 ந்து 24 பக்கம் தருகின்றன ஆங்கில ஏடுகள் . ஒரு பக்கத்திற்கு எட்டு பத்தி. மொத்தம் 144 லிருந்து 192 பத்தி வருகிறது .இதில் எத்தனை பத்தி செய்தி இருக்கும்.நீங்களே எண்ணி பார்க்கலாம். கிட்டத்தட்ட 64 அல்லது 80 பத்தி செய்தி இருக்கலாம். மீதம் உள்ள இடங்கள் விளம்பரங்களை கொடுக்க மட்டுமே . நம் கண்ணை மறை க்கும் அளவுக்கு அதனை ஆர்டிஸ்டுகள் அற்புதமாக disply பண்ணி விடுவார்கள்.
மேலை நாடுகள் அமேரிக்கா போன்ற நாடுகளில் பத்திரிகைகள் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. இதில் ஆச்ரியப்பட ஒன்றுமில்லை. சென்னையில் "மாம் பலம் டைம்ஸ்,"மைலாப்பூர் டைம்ஸ் " பத்திரிகைகள் நமக்கு அனுபவம் தான்.
கம்பெனிகளின் விளம்பரத்துக்காக பேப்பர்,மை ,கலர் பணத்தையும் நம்மிடமிருந்து வசூலித்து விடுகிறார்கள்.இதனைதடுக்க 70 ம் ஆண்டுகளில் காலம் சென்ற மோகன் குமாரமங்கலம் முயன்றார். page -price policy என்று கொண்டுவந்தார்.பத்திரிகையின் விலை செய்திகளின் பக்க அளவை ஒட்டி இருக்க வேண்டும் என்றார்.முதலாளிகள் இதனை ஏற்க வில்லை.
தீக்கதிர் மிகுந்த முயற்சிக்கு பிறகு அரசு விளம்பரங்களை பெற்றது. மத்திய அரசு ஊழியர் வேலை நிறுத்தத்தின் பொது வேலை நிறுத்தத்திற்கு எதிரான விளம்பரங்களை போட மறுத்ததால் அரசு விளம்பரம் கொடுப்பதை நிறுத்தி கொண்டது. மாநில அரசம் இதே போன்று செயல்பட்டது.
ஒரு பத்திரிகையின் இதயமும் நுரையீரலும் அதன் விளம்பரமும், வாசகனும் தான்.
மதுரை தேனீ சாலையிலிருந்து திரும்பி BYEPASS சாலைக்கு திண்டுக்கல் செல்லும் வழிக்கு திரும்பினால் அரசடியிலிருந்து பார்க்கும் போதே வைகையின் மறுகரையில் தீக்கதிர் கட்டிடத்தின் மேல் செங்கோடி கம்பீர மாக பறப்பதை காணலாம்.
அந்த கொடியின் நிழிலில் இருக்கும் ஒவ்வொரு செங்கல்லும் அதனுள்ளே பணிபுரியும் தியாக சிலர்களின் மேன்மையை சொல்லிக் கொண்டே இருக்கிறது தோழர்களே !!!