Wednesday, January 25, 2017




"தோழரும்"

" வால்மீகியும்."




நான் தமிழ் வழி கல்வியில்  படித்தேன். எனக்கு அர்த்தம் தெரியும். நான் அப்படி எழு தவில்லை " என்று சைலேந்திர பாபு டிவிட்டரில்குறிப்பிட்டுள்ளார் என்று ஒரு செய்தி பரவி உள்ளது.

பெரியார் வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடித்து  வந்ததும்  இனி கழக  உறுப்பினர்கள் தோழர் என்றே அழைத்துக் கொள்ளவேண்டும் என்று அறிவித்தார்.

நுறு ஆண்டுகளுக்கு முன்பே தோழர் என்ற வார்த்தையை பாரதி பயனப்டுத்தினான் .

ஆயிரம் ஆண்டுங்களுக்கு முன் "ராமன் குகனை தோழன் என்று அழைத்ததாக "காவியத்தில் எழுதினான்.

வால்மீகி கெட்டிக்காரன். அவன் அப்படி எழுதவில்லை 

ஏன் என்று காரணத்தை தேடினேன்.

காஸ்யபன் எழுதிய     "ஐவரானோம் " என்ற சிறுகதையில் விடை கிடைத்தது .

"ராமர் குகனை  அழைக்கலாம். குகன் ராமரை தோழர் என்று அழைக்கலாமா?  . "

"அழைத்தால் அன்றே அயோத்தியில் சாதிக்கலவரம் தோன்றியிருக்கும் "

கெட்டிக்கார வால்மீகி அதனால் தான் அப்படி எழுதவில்லை.

என்கிறார் சிறுகதை ஆசிரியர் காஸ்யபன்.






1 comments:

சரவணன் said...

1977 ஜனதா ஆட்சியில் கோக் விரட்டப்பட்டபின் அரசே மாடர்ன் பிரெட் கம்பெனி மூலமாக ஒரு குளிர்பானத்தைத் தயாரிக்க, அதற்கு ஒரு போட்டி மூலம் 77 என்ற பெயர் சூட்டினார்கள் அல்லவா? இது பற்றி உங்களுக்குத் தெரிந்த மேலதிக வரலாறை எழுதுங்களேன்.