"சர்ப்பக் குறியீடு "
(கன்னியப்பன் நெல்லை அவர்களின் இடுகையை முன் வைத்து )
பெரியவர் நெல்லை கன்னியப்பன் அவர்கள் ஒரு நிலைத்தகவல் விட்டிருந்தார்கள். சர்ப்பங்கள் இரண்டு ஒரு கோலில் பின்னிப்பிணைந்து இருப்பதாய் மருத்துவர்கள் தங்கள் இலசினையாக வைத்துக் கொள்வது பற்றியதாகும் அது .
பொதுவாக உயிரினங்கள் வம்சவிருத்தியில் ஈடுபடும் பொது முகத்திற்கு முகம் பார்ப்பதில்லை. அவற்றின் உடல்வாகு ஆகியவற்றை இயற்கையும் அப்படியே படைத்திருக்கிறது.
உயிரினத்தில் மனிதன் மட்டுமே முகம் பார்த்து தாம்பத்திய உறவில் ஈடுபடுகிறான் . இதே போல் ஈடுபடும் மற்றோரு உயிரினம் பாம்புகள்..ஐப்பசி,கார்த்திகை மாதங்களில் , பூந்த்தூத்தல் போட லேசாக வெயிலும் அடிக்கும் . இது பாம்புகளுக்கு மிகவும் கொண்டாடட்டமான நேரமாகும் .அவை இனவிருத்தியில் ஈடுபடும் காலமும் இதுதான்.
இந்த நேரத்தில் கிட்டத்தட்ட அவை நிற்கும் நிலையில் முகத்திற்கு முகம் பார்த்தவாறு செயல்படுகின்றன . பல் சந்தர்ப்பங்களில் நான் பார்த்திருக்கிறேன். புகைப்படங்களும் உள்ளன.
திருமணமாகி குழந்தை பேறு இல்லாதவர்கள் இதற்கான மருத்துவ சோதனையில் இறங்கிய பொது தங்களை போன்றே உறவில் ஈடுபடும் பாம்பினை வணங்கினால் வம்ச விருத்தி ஏற்படும் என்று நம்பினார்கள்.
ஆறு,குளம் ,வாய்க்கால் போன்ற நீர் நிலைகளின் கரைகளில் அரச மரத்தை நட்டு அதன் கீழே பாம்பு சேர்ந்திருக்கும் சிலைகளை வணங்கினார்கள்.
இந்த சிலைகள் பின்னிப்பிணைந்து நின்று கொண்டிருக்கும் நிலையில் முகத்திற்கு முகம் பார்த்திருக்கும். சிலர் "நாகர் " சிலைகளை செய்து நேர்த்திக்கடன் செய்வதும் உண்டு .
இன்று "டெஸ்ட் டுயுப் " வந்த பிறகும் அதனை தொடர்வது சரியா ? என்ற கேள்வி இருக்கத்தான் செய்கிறது.
1 comments:
நலமாக இருக்கிறீர்களா ஐயா?
முன் பிறவியில் பாம்பைக் கொன்றவர்கள், இப்பிறவியில் வாரிசு இல்லாமல் துயரப்படுவார்கள் என்ற நம்பிக்கை இன்றும் பலருக்கு உண்டு. புற்றுக்குப் பால் வார்க்கும் வழக்கமும் இன்றும் தொடர்கிறது. எப்படியோ, பாம்பை வீடுதோறும் கொண்டுவைத்துப் பூஜை செய்யும் நிலைமை இல்லாதிருப்பது மகிழ்ச்சியே.
- இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.
Post a Comment