(per month lecturer rs 5000/- Proff rs 8000/-)
Sunday, April 30, 2017
Friday, April 28, 2017
அமைச்சர் செல்லூர் ராஜுவும் ,
"தெர்மாகோல் " பரிசோதனையும் ...!
மதுரையில் உள்ள எல்.ஐ.சி மண்டல அலுவலகம் செல்லூரில் உள்ளது>அங்குதான் 30 வருடங்களுக்கு மேலாக நான் பணியாற்றினேன்.
செல்லூர்,தத்த நெறி,பாரதிநகர் , என்று அந்த பகுதியில் நண்பர்கள் நிறைய உண்டு. தொண்டனாக இருந்த காலத்துலேயே செல்லூர் ராஜூவை பரிசயம் கொண்டவன் நான். அவருடைய அறிவார்ந்த திறமை பற்றி எனக்கு அனுமானம் உண்டு.
நீர் ஆவியத்தலை தடுக்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சி பற்றி முகநூல் நண்பர்கள் அவரை கிழித்து தோரணம் கட்டி விட்டார்கள்.ஈவு இரக்கம் இல்லாமல் அவரை வசை பாடிவிட்டார்கள் . அப்படி செய்யும் பொது தங்கள் அறியாமையையும் (முட்டாள் தனத்தையும்) வெளிப்படுத்தி னா ர்கள்.
நீர் ஆவியாவதை தடுக்கும் முயற்சியில் பலநாடுகள் ஈடுபட்டு க்கொண்டிருக்கின்றான. இதனை அவர்கள் இரண்டுவகையில் பார்க்கிறார்கள்.
நீர் ஆவியாவதால் ஏற்படும் நன்மைகள் எவை? அதனை தடுத்தால் சுற்று சூழல் எவ்வாறு பாதிக்கப்படும் ?என்று ஒருபுறம் ஆராய்சசி நடக்கிறது.
மற்றோரு புறம் நீரை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ! இதில் தெர்மாகோல் பற்றியும் ஆராய்சசிகள் நடக்கின்றன.
தெர்மக்கோலால் மூடப்பட்ட நீர் குறைந்த ஆக்சிஜன் கொண்டதாக இருக்குமா? அப்படியானால் அந்த நீரில் வாழும் உயிரினங்கள், மற்றும் உயிரிகள் என்னவாகும்? அதனால் சுற்று சூழல் என்ன வாகும் என்று ஆராய்சசி நடக்கிறது.
இதனை அரைகுறையாக புரிந்து கொண்ட அதிகாரி ஒருவர் கொடுத்த ஆலோசனையை பரீட்சார்த்தமாக செய்து பார்க்க அமைசசர் ஒப்புதல் அளித்துள்ளார்.
பல சதுரமைல் பரப்பளவு கொண்ட அணையில் 70 சதுர அடியில் பரிசோதனை முயற்சி நடந்துள்ளது.
அதற்குள் அவசரப்பட்டு தங்களின் அறியாமையை முகநூல் அன்பர்கள் வெளிப்படுத்தி இருக்க வேண்டாம் .
Thursday, April 27, 2017
(இது ஒரு மீள் பதிவு )
(யதார்த்தா பென்னேஸ்வரன் பதிவிட்டிருந்தார் )
27 ஏப்ரல் 2016 ·
"P.R.is a gentle man "
1936 ம் ஆண்டு நான் பிறந்தேன். என் மூத்த சகோதரிக்கு 1936ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவருக்கு 1942ம் ஆண்டு பெண் குழந்த பிறந்தது.1962ம் ஆண்டு அந்த பெண்ணை நான் திருமணம் செய்து கொண்டேன்.
என்மாமனார் ஒரு அப்புராணி .துஷ்டனைக்ண்டால் தூர விலகு என்று வளர்க்கப்பட்டசனாதனகுடும்பம்.தூரமாகவிலகமாட்டார்.ஒருமைலாவது தள்ளி நின்று கொண்டு எட்டிபார்க்கும் ரகம்.
நான் தொழிற்சங்கத்தில் ஈடுபாடு கொண்டவன். " எல்.ஐ.சி வேல லேசுலகிடைக்காது. தேவை இல்லாமல் சண்டய போட்டு வேலையை கெடுத்துக்காம இருக்க சொல்லு " நு மாணவி முலம் "அட்வைஸ் " வரும். என்னை பார்க்க வரும் நண்பர்கள் தலவர்கள் கம்யுனிஸ்டுகள் என்பது அவருக்கு தெரியும்.
"தினமணி " -"இந்தியன் எக்ஸ்பிரஸ் " பத்திரிகைகள் மூலம்கம்யூனிசம் பற்றி "அறிந்து " கோண்ட கோடானு கோடி அப்பாவி இந்தியர்களில் அவரும் ஒருவர் .கம்யுனிஸ்டுகளுக்கு இரண்டு கைகள் அல்ல -நான்குகைகள் -ஒருகையில் அரிவாள், மற்றோன்றில் கம்பு ,ஒருகையில் துப்பாக்கி, அடுத்ததில் குண்டு என்று ஒரு படிமத்தை கொண்டவர்களிலொருவர்.
அவர் ஓய்வுபெற்ற பின் மகளொடு பத்து நாட்கள் தங்க மதுரை வந்திருந்தார்.78-79 ஆண்டாக இருக்கலாம். அப்பொது தான் பைபாஸ் சாலைக்கு தீக்கதிர் ஆபிஸ் வந்த நேரம் . பக்கத்தில் இன்று மாதிரி கட்டிடங்கள் கிடையாது. தீக்கதிர் ஆபீசை ஒட்டி ஒரு குடிசைபோட்டு ஜோசப்ஃ என்ற கேரளத்துக்காரர் டீக்கடை போட்டிருந்தார். ஆபிசில் "கம்யூன் " இருந்தது.
மதுரை வந்திருநத P . R அவர்கள் இரவு அங்கு தங்க வேண்டியதாயிற்று.
நிர்வாகியான ராமராஜ் அவ்ர்கள் "டேய் ! சாமா ! பி ஆர் "நான் மிர்ச்சி " கோஷ்டி. ராத்திரி டவ்னுக்குகூட்டி போய் சாப்பாடு எற்பாடு பண்ணனும் . நீ ..." என்று இழுத்தார்.
"எதுக்கு தோழர் ! நான் கொண்டுவரேன் ! இல்ல அவர் வந்தா நல்ல சூடா.." ..."
"அதுக்கு தாண்டா ஒங்கிட்ட சொன்னேன் .ராத்திரி ரண்டு இட்லி சாப்பிடுவாரு. பால் கண்டிப்ப வேணும் .ரண்டு டம்ளராவதுகுடிப்பாரு "
"எத்தன மணிக்கு வருவாரு ?"
"ஏழரை மணின்னு வச்சுக்கோயேன் "
வீட்டில் என் மனைவியிடம் சொன்னேன். என்மாமனார் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் முகம் கோணியது. கம்யூனிஸ்ட் தலைவர் - அவரோடு ஒரே வீட்டில் - போலிஸ் மோப்பம் பிடித்தால் - பாவம் குட்டிபோட்ட பூனைமாதிரி அலைந்தார். காலையில் ஒரே பரபரப்பு . நாலுமணி இருக்கும். "நான் வேணா ஒரு ஏழுமணிக்கு பிள்ளையார் கோவில்ல பூஜை பாக்க போகட்டுமா ? உங்க தலைவர் வந்து போனதும் சொல்லி விடு .நான் கொவில்லேர்ந்து வரேன் " என்றார்.
"உங்கப்பாவுக்கு போலிஸ் காரன் இவர பிடிச்சுட்டு போயிடுவானோ நு பயம் "என்மனைவியிடம் சொன்னேன்.
"No! No! it is not like that " என்றார் என் மாமனார் .
இருந்தாலும் இருப்புக்கொள்ளாமல் தான் இருந்தார்'
வீட்டு குள்ளேயே வரவில்லை. வராண்டாவிலேயே இருநதார்
ஏழுமணிக்கு பி .ஆர் வந்தார். ஹாலுக்குள் வந்த மாமனார் ஜன்னலோரத்தில் இருப்புக் கொள்ளாமல் நின்று கொண்டிருந்தார்.
"தோழர் ! இது என் மாமனார் "
பீ ஆர் அவர்களுக்கு என் குடும்பம் மனைவி ஆகியோரை தெரியும் .
உன் அத்திம்பேரா ?
"ஆமா தோழர் "
"நாக்பூரா ? "
என்மாமனார் தலையை ஆட்டினார் !
"அப்படியா ! உங்களுக்கு ஹிதவாதா பத்திரிகை எடிட்டோர் எ.டி. மணியைதெரியுமா ?"
என்மாமனார் முகத்தில் ஒரு தேளிவு கிடைத்தது.
"கோபால கிருஷ்ண கோகிலே யோட சிஷ்யன் servents of india society மெம்பர் "
"வார்தால இருந்திருக்கேன் சுவாமி ! உம்மா பெயர் என்ன ?"
"நடராஜன் "
"படிச்சதெல்லாம் எங்க ?"
"மெட்ராஸ்ல ? "
"எந்த ஸ்கூல் ?"
"இந்து ஹைஸ்கூல் ,திருவல்லிகேணி !"
"நானும் அங்கதான்யா படிச்சேன் "
"அப்படியா !"
"உமக்கு ரங்கநாதன தெரியுமா ?"
"பெரிய தெரு ரங்கநாதானா ?'"
"ஆம்மாம் ஐயா ! கிரிகெட் பிளேயர் !"
"நல்ல தெரியும் ! நான் பால் பாட்மிண்டன் 1 அவன் கிரிகெட் !"
இருவரும் அவர்கள் வாத்தியார்கள் ,பள்ளி வாழ்க்கை என்று பேசிக்கொண்டார்கள் .
"தோழர் ! உங்க மாமனார் என் ஸ்கூல் மேட் "
பி ஆர் உணவு அருந்தி விட்டு கிளம்பினார் ஜீப்பில் ஏறும்போது "வரட்டுமா நடராஜன்" என்று மாமனாரிடம் விடை பெற்றார்.
அவரை அனுப்பி விட்டு படியேறினேன் !என் மாமனார் தன மகளிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
"எவ்வளவு சிம்பிள் ! காந்தி ,நேரு , இந்திரா , எப்பேர்பட்ட தலைவர்களோடு இருந்தவர்."
"P.R is a gentle man "
Tuesday, April 25, 2017
"இந்தி "
எங்க ல பேசுதான் ? "
1996ஆண்டு ஒய்வு பெரும் முன்பு ஓர் அகில இந்திய பயணம் மேற்கொண்டேன். அப்பம் தேர்தல் வேற. அப்படியே மே .வங்கம், திரிபுரா, வாரணாசி,சிம்லா, பி டர் ,வார்தா ஆகிய இடங்களில் நடக்கும் தேர்தலையும் cover பண்ணலாம் என்று யோசனை. மொழிபெயர்ப்பாளர் வேண்டுமே அதனால் முத்து மினாடசி அவர்களையும் அ ழைத்து சென்றேன்.
கல்கத்தா சென்றதும் "கண சக்தி " அலுவலகம் சென்று திரிபுரா செல்வதற்கான ஏற்படுகளுக்கு உதவி கேட்டுக்கொண்டேன்.அவர்கள் திரிபுரா செல்வதை வீட .வங்க தேர்தலை பாருங்கள் என்றார்கள். மறுநாள் முதல்வர் ஜோதி பாசு அவருடைய தொகுதியான "சத்காசிய்யா " போகிறார் .விரும்பினால் நீங்களும் அவரோடு போய்வாருங்கள் என்று கூறினார்கள்.
நானும் முத்து மீனாட்ச்சியும் ஸத்காசியா செல்ல முடிவு செய்தொம். நகரத்தில் மம்தா வின் தொகுதியை தாண்டி கிராமப்புரங்கள் வழியாக சென்றோம். போகும் பொது ஒருகுறிப்பிட இடத்தில் நாங்கள் சென்ற ஜீப பழுதாகிவிட நாங்கள் covoy விட்டு விலகி நின்றோம்.
அது வயல் வேளி கள் நிறைந்த கிராமம். நாங்கள் கிழே இறங்கி காலரா நடந்தோம். வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி இடம் பேச முனைந்தோம். முத்துமீனாட்ச்சி இந்தியில் பேச அந்தவிவசாயி முழித்தார் . நாங்கள் பேசுவதை பார்த்த ஜீப்பில் வந்த தோழர் ஒடி வந்தார்.
நகரத்தில் (கல்கத்தா ) மட்டும் தான் இந்தி யில் சமாளிக்க முடியும் இங்கு இவர்களுக்கு வங்க மொழி மட்டும் தான் தெரியும் என்றார். இந்தி இவர்களுக்கு அந்நிய மொழி.
ஓர்வழியாக ஜீப்கிள ம்ப நாங்கள் ஸத்காசியா சென்று அடைந்தோம். கூட்டம் ஆரம்பமாயிற்று. தலைவர் வங்க மொழியில் பேசினார். முத்து மினாடசி அவர்களும் நானும் திரு திரு வென்று முழித்தோம். திணறி விட்டொம்.எங்கள் பாடுகளை கண்ட ndtv நிருபர் "தீபா அவர்கள் தன்மகளை அனுப்பி உதவினார்> அந்த மாணவி வங்காளி மொழியை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க நாங்கள் தமிழில எழுதிக்கொண்டோம்.ஜோதி பாபு பேசஆரம்பித்தார். அவர் முழுக்க முழு க்க வங்க மொழியில் தான் பேசினார்.
இதே தான் வார்தாவில் ஏற்பட்டது. நகரங்களில் சமாளிக்கலாம்> ஆனால் கிராமப்புறத்தில் "இந்தி " என்ற பப்பு வேகவில்லை .
இதே அனுபவம் தான் "பிடர் " தொகுதியிலும் கிடைத்ததுஅசாம், நாகாலாந்து,மேகாலயா என்று வட கிழக்கு மாநிலங்களிலும் இந்தி பேசப்படுவதில்லை.
இந்தியாவில் 26% மக்கள் இந்தி தெரிந்தவர்கள். அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதத்தை படித்தால் இந்த பாவிகள் செய்த சூது விளங்கும். ராஜேந்திர பிரசாத்செய்த அராஜகமான , ஜனநாயக விரோத செயல்பாட்டினால், ஒரு ஓட்டில் இந்தி வென்றது .
1965ம் ஆண்டு இந்தி போராட்டத்தை மாணவர்களும் மக்களும் வீரமாக நடத்தினார்கள் .
அந்த வெற்றியை மொழியின் பேரால் ஆட்ச்சிக்கு வந்தவர்கள் விரயமாக்கினார்கள்.
இன்று புதிதாக எழுத வேண்டும் வரலாற்றை !!!
Monday, April 24, 2017
உத்திர பிரதேச முதல்வர் ,
"இந்து " இல்லையாமே ?
உ.பி முதலைவராக இருப்பவர் பெயர் யோகி ஆதித்தியநாத் என்கிறார்கள். இவர் யோகி கோரக்நாத் அவர்களின் சிஷ்யர் ! சமீபத்தில் நடந்த சட்டமனற தேத்தலுக்குப் பிறகு மோடி இவரை முதல்வராக்கினார். இவர் இன்னும் சட்டமனற உறுப்பினராகவில்லை.தற்போது நாடாளுமனற உறுப்பினராக உள்ளார்.
இவர் "யோகி " என்ற மதப்பிரிவை சேர்ந்தவர் என்கிறார்கள். இவர்களைப்பற்றி கூகுளில் தேடினேன். இவர்கள் காபூல்,மெக்கா,மதினா மற்றும் பலநாடுகளில் உள்ளனர் என்கிறது கூகுள் . இவர்களுக்கு உருவ வழிபாடு கிடையாது என்கிறார்கள். இவர்களுடையா முக்கியமான வழிபாட்டு தோத்திரம்
meaning only then:
There is no Brahma no Visnu and no Rudra;
There is no Indra nor there gods who matter,
There is no earth no water in the final reckonning,
There is no fire, no air, no sky, no directions, and no time
There are no vedas, no sacrifices, no sun and no moon;
There is no Vidhi, the creator nor his fabulous time duration called Kalpa,
The knowledge of the SELF is the only truth. Glory to you O, One the manifestation of the truth, the awareness of bliss.Peace, Love; Bliss
" பிரும்மா விஷ்ணு ருத்திரன் என்று எவனும் கிடையாது.
இந்திரன்,மற்றும் கடவுள்களும் கிடையாது
அடிப்படையில் பார்த்தால் நிலம் நீர் என்று எதுவும் இல்லை.
நெருப்பில்லை .காற்றில்லை .வானம் இல்லை .திசைகள் இல்லை .காலம் இல்லை .
வேதம் என்று ஒன்று இல்லை. பலி இல்லை. சூரியன் இல்லை.சந்திரன் இல்லை.
விதி என்று எதுவும் இல்லை. இந்த உலகத்தை உருவாக்கியவனோ ,அவன் சொல்லும்" கல்பகாலம் " என்பதோ இல்லை .
உன்னை அறிந்து கொள்வதே உண்மை.
உண்மையின் வடிவமே !
மோனத்தை அறிந்தவனே !
அமைதியையும் அன்பையும் புரிந்தவனே !
எல்லாப்புக்கழும் உனக்குத்தான் !!!
-----------------------------------------------------------------------------------------------------------------------------
என்னண்ணே செய்யப்போறாங்க ?
( அண்ணே ! பயமா இருக்கு அண்ணே )
Wednesday, April 19, 2017
எல்லாப்புகழும்
த.மு.எ ச வுக்கே ...!!!
தோழர் மாதவ ராஜ் எழுதிய writ up படித்தேன். இதைவிட நேர்த்தியாக,சிறப்பாக, சுருக்கமாக அந்த படத்தை பற்றி யாராலும் எழுதிவிட முடியாது.ஆம் ! "கக்கூஸ் " படம் பற்றிய அவரது கட்டுரை நெஞ்சை கிழித்து தோரணம் போட்டுவிட்டது.
இந்த படத்தை ரஜனி பார்த்திருப்பாரா ?
"வாய்ப்பில்லை."
கமல் ?
"no chance "
அந்த இளம் புயல் தனுஷ் ?
"ஊஹூம் "
ஆனால் சாத்தூர்,நகரத்து புழுதியில் வாழும் மக்கள் பார்த்திருக்கிறார்கள்.விருதுநகர், நெல்லை,கோவை , மக்கள் பார்த்திருக்கிறார்கள்.மதுரை,திருவண்ணாமலை,சென்னை ஆகிய பகுதி மக்கள் பார்த்திருக்கிறார்கள். AC தியேட்டரில் அல்ல .தெருக்களில், திருமணமண்டபங்களில் பார்த்திருக்கிறார்கள்.
இந்த சமயத்தில் எனக்கு நினைவு தட்டுகிறது கிட்டத்தட்ட 42 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் . மதுரையயில் நடந்தது.
பெரியார் பஸ்நிலையம் அப்போது குப்பை மேடாக இருந்தது.அங்கு தான் திடீர் நகர் தோன்றியது. எனோதானோக்கள் ,எடுபிடிகள்,ஏதுமற்றவர்கள் அங்கு குடிசை போட்டு வாழ்ந்தார்கள்...அங்குதான் ஒருகுடிசையில் போக்குவரத்து தொழிலாளர்களும் ,மின்வாரிய தொழிலாளர்களும் தங்கள் சங்கத்தை வைத்திருந்தார்கள்.
அந்த சங்கத்தில் தான் தமிழகத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் கு.சின்னப்ப பாரதியிலிருந்து,தணிக்கைசெல்வன் வரை 16 பேர் கூடினார்கள். அவர்களின் நடுநாயகமாக விற்றிருந்தார் அந்த முதுபெரும் எழுத்தாளர் கே.முத்தையா அவர்கள்.
"நாம் எழுத்தாளர்கள் மட்டுமல்ல. சமூகப்போராளிகளும் கூட .வர்க்கப்பபோராட்டத்தின் முன்னணி படைவீரர்கள். அந்த பிரும்மாண்டமான போருக்கு முன் எதிராளி களின் களத்தில் புகுந்து அந்த மக்களை நம் பக்கம் திருப்பும் முன்னணி நாம் . முதல் தாக்குதலும் முதல் பலியும் நாம் தான் எதிரிகள் எங்கு ஒளிந்திருக்கிறார்கள்,அவர்களின் கண்ணி வெடிகள் எங்குள்ளன என்பதை கண்டறியும் பணியை செய்ப்பவர்கள் நாம் . நாம் இப்படி உதிரியாகஇருக்க கூடாது நமக்கு என்று ஒரு அமைப்பை கட்டி அமைக்க வேண்டும் " என்பது அவர்களின் கூ ட்ட முடிவாகியது .கே.முத்தையா தலைமையில் அமைப்பை உருவாக்க முடிவு செய்தார்கள் அந்த அமைப்புதான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்றாகியது.
"கக்கூஸ்" திரைப்படத்தை தமிழகம் முழுவதும் கொண்டு செல்கிறவர்கள் அவர்கள் தான்.
எனக்கு வருத்தம் தான். இந்த படத்தை பார்க்கமுடியாமல் இருக்கிறேனே !
ஆனாலும் நான் பாக்கியசாலி !
ஆம் ! 42 வருடத்திற்கு முன் த.மு,.எ ச வை ஆரம்பிக்க முடிவெடுத்த அந்த 16 பேரில் நானும் ஒருவன் என்பது எனக்கு கிடைத்த \பெரும் பாக்கியம் அல்லவா !!!
Saturday, April 15, 2017
"நாங்கள்
காட்டுவாசிகள்
தானே ஐயா ...!!!
என் மனைவிக்கு உதவியாக இருப்பவர் யமுனா தேவி. ஜார்கண்டு மாநிலத்தை சேர்ந்தவர்.வனகுடி மக்கள் இங்கு வந்து பணிசெய்து மாதாமாதம் அவர்கள் அனுப்பும் மணி ஆர்டர் மூலம் குடும்பம் பிழைக்கிறது . எப்போதாவது அவருடைய கணவர் வருவார்.வந்தால் என்னிடம் பேசிக்கொண்டிருந்த விட்டு இரவோ மறுநாளே சென்று விடுவார்.
நல்ல ஞானஸ்தர் . தமிழ் நாட்டை விசாரிப்பார். இந்தமுறை வந்திருந்த பொது மதுவிலக்கு போராட்டம் பற்றி பேசிக்கொண்டிருந்தோம் . ஆண்களை வீட பெண்கள் மிக ஆக்ரோஷஹமாக ஈடுபடுகிறார்கள் என்று கூறினேன்.அவர்களை போலீசார் அடக்குவதையும் சொன்னேன்.
"எங்கள் குடி இருப்புகளிலும் இப்படி தான் நடக்கிறது "
"எல்லா இடங்களிலும் இப்படித்தான் நடக்கிறது."
"தலையாரியே எங்கள் கிராமங்களில் பெரிய ஆபிசர் "
"அப்படியா ?'
"இப்பம் கொஞ்சம் குறைஞ்சிருக்கு "
"ஏன் ?"
'பசங்க எதிர்ப்பு தான் "
"எப்படி ?"
"நாங்க படிக்காதவங்க ! ஆளைப்பிடிச்சு புளிய மரத்துல தலைகீழா தொங்க விடருவம் . செங்குத்தா வீட மாட்டோம். விட்ட மண்டைல ரத்தம் ஏறி நரம்பு வெடிச்சு செத்துருவான். கொஞசம் சாயமானமா வேசுருவம் . மண்டைல ரத்தம் ஏற ஏற தலைவலி தாங்காம கதறுவான் ."
"இல்லைனா உடம்புல தேனதடவி கரையான் புத்துல போட்ருவம் . கரையான் வாயில விஷம் இருக்கு. குண்டூசி முன்னால ஆயிரத்துல ஒரு பங்கு இருக்கு. அதனால தான் நமக்கு கடிச்ச்சதும் சுரீர்ங்குது . நூத்துக்கணக்குல கரையான் கடிச் \சா கதறவேண்டியது தான் "
"வித்தியாசமா இருக்கே ? "
'போமபளட்ட வாலாட்டினா வேறமாதிரி !"
"வாழை க்குலை காம்புதான் வெள்ளை அடிக்க வச்சிப்பம் . வலது கை மணிக்கட்ல இரும்பு உலக்கையால் போடுவம் . வெள்ளை அடிக்க கூ ட கையை பயன்படுத்தமுடியாது"
"காட்டுமிராண்டித்தனமா இருக்கே "
"நாங்க காட்டு வாசிகள் தானே ஐயா !"
Thursday, April 13, 2017
காக்கி சட்டை போடாத
பாண்டியராஜன்.....!!!
"தமிழக கவர்னரை மும்பையில் பார்த்தோம். ஆட்சியை கலைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம் " என்று துறை முருகன் கூறியதாக செய்தி வந்துள்ளது .
122 பேர் ஆதரவில் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. "சரிதான் அண்ணே!" ஆறுபேர் ஓடினாலும் -" ஆறு என்ன ? பதினாறு பேருக்கு 5கோடி விதம் ரெடியா இருக்கு " என்றும் செய்திகள் வருகின்றன.
பிரசினை அதுவல்ல . "யார் முதலவர் ? யார் துணை ?" என்பதில் தான் சிக்கல். எதற்கும் ரெடி என்கிறாராம் எடப்படி.
பணப்பட்டுவாடா நடந்தது உண்மை. செய்தவர்களை கைது செய்யவேண்டும் . அந்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்கிறார் எதிர்க்கட்சி தலைவர்.
அவருடைய கட்ச்சியும் கொடுத்ததாக செய்திகள் உண்டு. அரவக்குரிசசி நினைவுக்கு வருகிறது.
சிவகங்கை நினைவு தட்டுகிறது . ராஜ கண்ணப்பன் வெற்றி என்று அறிவித்தபின், சிதம்பரம் வெற்றிபெறுகிறார்.
அடேயப்பா ! பழ .கருப்பையா அப்பம் குதிச்ச குதி ! தொலைக்காடசி பார்த்தவர்களுக்கு தெரியும் .
தேர்தல் கமிஷன் மேலையும் கீழையும்பொத்திக்கிட்டு நின்னது.
கருப்பையா ஒரு ரவுண்டு போயிட்டு இப்பம் திருப்பி திமுகவுக்கு வந்துள்ளார்.
இந்த கொள்ளைல சோழவந்தான் சுப்பிரமணி தினகரனை கவர்னர் முதல்வரா நியமனம் செய்யணும்காரு.
ஒரு வேளை மடத்து உத்திராவோ என்னவோ ?
பணப்பட்டுவாடா செய்த வேட்பாளர்கள் மூன்று(?) பேரையும் தகுதி நீக்கம் செய்ய வென்டும் .
தேர்தல்கமிஷன் என்பது காக்கி சட்டை போடாத பாண்டியராஜன்.
ஒரு ம --ம் நடக்கப் போறதில்லை .
Wednesday, April 05, 2017
ஆர்.கே. நகர் தெருக்களில் ,
எத்தனை அப்துல்லாக்கள் ...???
கிராமத்து முட்டாள்கள் (village idiots ) என்பார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் நாம் பார்த்திருக்கலாம் . "பாண்டி " விளையாடும் சிறுவர் சிறுமியிலிருந்து ,பெரியவர்கள் வரை அவனை ஏதாவது பட்டப்பெயர் சொல்லி தான் கூப்பிடுவார்கள்.அவனும் எந்த கல்மிஷமும் இல்லாமல் அவர்கள் சொன்னதை செய்வான். சொன்னதை கேட்பான். அவர்கள் கொடுத்ததை சாப்பிடுவான். இவனை கிராமத்து முட்டாள் (village idiot ) என்பார்கள்.
இப்படி ஒரு பாத்திரமாக நடித்தார்,ராஜ்கபூர். 50 ம் ஆண்டுகளில் வந்த படம்.சக்கை போடு போட்டது. படத்தின் பெயர் நினைவில்லை. ஆவாரா அல்லது ஸ்ரீ 420 ஆக இருக்கலாம்.
இந்த படத்தில் உருது கவிஞர் பாட்டு எழுதினார் . அது கதையோடு கூடிய பாடல்.
அதுஒரு இஸ்லாமியர்கள்வாழும் கிராமம்அ.ந்த கிராமத்தில்தான் அப்துல்லாவும் இருக்கிறான்.அவன் கிராமத்து முட்டாள்.
அந்த கிராமத்து இஸ்லாமிய பண்ணனையார் வீட்டில் கல்யாணம் வருகிறது. இதை தெரிந்து கொண்ட அப்துல்லாவுக்கு ஏகப்பட்ட குஷி !
தெருத்தெருவாக சென்று பண்ணையார் வீட்டில் கலயாணம் ,பண்ணையார் விட்டில்களையானம் என்கிறான். வீடு வீடாக சென்று சொல்கிறான்.
"சரிடா !உனக்கென்ன வந்தது?"
"என்ன அப்படி சொல்றிய! பிரியாணி பொடுவாகலா "
"அப்புறம் "
"மூணு நாளும் விருந்து "
"உனக்கென்னடா ஆச்சு "
"அவங்க வீட்டுக்கு விருந்தளிக்க வருவங்கல்லா "
"ஆமாம்! ஐம்பது பேராவது வருவாங்க "
"ஐமபத்து பேரா !ஆகா "
"என்ன ஆசுசுடா !"
"அவங்க குளிக்கணும்னா நான் தான கிணத்து தொட்டில தண்ணி இறைக்கணும் "தொட்டிக்கு காலணா அம்புட்டும் எனக்கு தான ! எனக்கு வெட்டியும் துண்டும் தர்றருல்லா "
கவிஞர் இதனை பாடலாக எழுதி யுள்ளார் .
"பெகானே சாதி மே
அப்துல்லா திவானா !
( திவான் விட்டு கலயாணம் அப்துல்லாவுக்கதெரிஞ்சு பொசுசு )
ஜைஸே மன் மௌஸி மே
முஷ்கில் ஹை சம்ஜானா
(அவனுடைய சந்தோஷத்திற்கு ஈடு இணை இலலை )