"நாங்கள்
காட்டுவாசிகள்
தானே ஐயா ...!!!
என் மனைவிக்கு உதவியாக இருப்பவர் யமுனா தேவி. ஜார்கண்டு மாநிலத்தை சேர்ந்தவர்.வனகுடி மக்கள் இங்கு வந்து பணிசெய்து மாதாமாதம் அவர்கள் அனுப்பும் மணி ஆர்டர் மூலம் குடும்பம் பிழைக்கிறது . எப்போதாவது அவருடைய கணவர் வருவார்.வந்தால் என்னிடம் பேசிக்கொண்டிருந்த விட்டு இரவோ மறுநாளே சென்று விடுவார்.
நல்ல ஞானஸ்தர் . தமிழ் நாட்டை விசாரிப்பார். இந்தமுறை வந்திருந்த பொது மதுவிலக்கு போராட்டம் பற்றி பேசிக்கொண்டிருந்தோம் . ஆண்களை வீட பெண்கள் மிக ஆக்ரோஷஹமாக ஈடுபடுகிறார்கள் என்று கூறினேன்.அவர்களை போலீசார் அடக்குவதையும் சொன்னேன்.
"எங்கள் குடி இருப்புகளிலும் இப்படி தான் நடக்கிறது "
"எல்லா இடங்களிலும் இப்படித்தான் நடக்கிறது."
"தலையாரியே எங்கள் கிராமங்களில் பெரிய ஆபிசர் "
"அப்படியா ?'
"இப்பம் கொஞ்சம் குறைஞ்சிருக்கு "
"ஏன் ?"
'பசங்க எதிர்ப்பு தான் "
"எப்படி ?"
"நாங்க படிக்காதவங்க ! ஆளைப்பிடிச்சு புளிய மரத்துல தலைகீழா தொங்க விடருவம் . செங்குத்தா வீட மாட்டோம். விட்ட மண்டைல ரத்தம் ஏறி நரம்பு வெடிச்சு செத்துருவான். கொஞசம் சாயமானமா வேசுருவம் . மண்டைல ரத்தம் ஏற ஏற தலைவலி தாங்காம கதறுவான் ."
"இல்லைனா உடம்புல தேனதடவி கரையான் புத்துல போட்ருவம் . கரையான் வாயில விஷம் இருக்கு. குண்டூசி முன்னால ஆயிரத்துல ஒரு பங்கு இருக்கு. அதனால தான் நமக்கு கடிச்ச்சதும் சுரீர்ங்குது . நூத்துக்கணக்குல கரையான் கடிச் \சா கதறவேண்டியது தான் "
"வித்தியாசமா இருக்கே ? "
'போமபளட்ட வாலாட்டினா வேறமாதிரி !"
"வாழை க்குலை காம்புதான் வெள்ளை அடிக்க வச்சிப்பம் . வலது கை மணிக்கட்ல இரும்பு உலக்கையால் போடுவம் . வெள்ளை அடிக்க கூ ட கையை பயன்படுத்தமுடியாது"
"காட்டுமிராண்டித்தனமா இருக்கே "
"நாங்க காட்டு வாசிகள் தானே ஐயா !"
0 comments:
Post a Comment