Wednesday, April 05, 2017





ஆர்.கே. நகர்  தெருக்களில் ,

எத்தனை அப்துல்லாக்கள் ...???





கிராமத்து முட்டாள்கள் (village idiots ) என்பார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் நாம் பார்த்திருக்கலாம் . "பாண்டி " விளையாடும் சிறுவர் சிறுமியிலிருந்து ,பெரியவர்கள் வரை அவனை ஏதாவது பட்டப்பெயர் சொல்லி தான் கூப்பிடுவார்கள்.அவனும் எந்த கல்மிஷமும் இல்லாமல் அவர்கள் சொன்னதை செய்வான். சொன்னதை கேட்பான். அவர்கள் கொடுத்ததை சாப்பிடுவான். இவனை கிராமத்து முட்டாள் (village idiot ) என்பார்கள். 

இப்படி ஒரு பாத்திரமாக நடித்தார்,ராஜ்கபூர். 50 ம் ஆண்டுகளில் வந்த படம்.சக்கை போடு போட்டது. படத்தின் பெயர் நினைவில்லை. ஆவாரா அல்லது ஸ்ரீ  420 ஆக இருக்கலாம்.

இந்த படத்தில் உருது கவிஞர் பாட்டு எழுதினார் . அது கதையோடு கூடிய பாடல். 

அதுஒரு இஸ்லாமியர்கள்வாழும் கிராமம்அ.ந்த கிராமத்தில்தான் அப்துல்லாவும் இருக்கிறான்.அவன் கிராமத்து முட்டாள். 

அந்த கிராமத்து இஸ்லாமிய பண்ணனையார் வீட்டில் கல்யாணம் வருகிறது. இதை தெரிந்து கொண்ட அப்துல்லாவுக்கு ஏகப்பட்ட குஷி !

தெருத்தெருவாக சென்று பண்ணையார் வீட்டில் கலயாணம் ,பண்ணையார் விட்டில்களையானம் என்கிறான். வீடு  வீடாக சென்று சொல்கிறான்.


"சரிடா !உனக்கென்ன வந்தது?"


"என்ன அப்படி சொல்றிய! பிரியாணி பொடுவாகலா "


"அப்புறம் "


"மூணு நாளும் விருந்து "


"உனக்கென்னடா ஆச்சு " 


"அவங்க வீட்டுக்கு விருந்தளிக்க வருவங்கல்லா "


"ஆமாம்! ஐம்பது பேராவது வருவாங்க "


"ஐமபத்து பேரா !ஆகா "


"என்ன ஆசுசுடா !"


"அவங்க குளிக்கணும்னா நான் தான  கிணத்து தொட்டில தண்ணி இறைக்கணும் "தொட்டிக்கு காலணா  அம்புட்டும் எனக்கு தான ! எனக்கு வெட்டியும் துண்டும் தர்றருல்லா "

கவிஞர் இதனை பாடலாக எழுதி யுள்ளார் .


"பெகானே சாதி மே  


               அப்துல்லா திவானா !


( திவான் விட்டு கலயாணம் அப்துல்லாவுக்கதெரிஞ்சு  பொசுசு )

ஜைஸே மன் மௌஸி மே


              முஷ்கில் ஹை சம்ஜானா 



(அவனுடைய சந்தோஷத்திற்கு ஈடு  இணை இலலை )

50களில் புகழ்  பெற்ற பாடல்  


ஆர் கே நகர் விதிகளில் அப்துல்லாக்கள் எத்தனை பேர் என்பது ஏப்பிரல் 12  க்கு பிறகு தெரிந்துவிடும்

0 comments: