skip to main |
skip to sidebar
வள்ளலாரும் ,
ராஜா ராம்மோகன் ராயும் ...!!!
கற்பனா சோஷலிச வாதியான ராபர்ட் ஓவனுடன் விவாதித்தவர் ,ராம் மோகன்ராய். சோசலிசத்தை ஏற்றுக்கொண்ட ராம்மோகன் அதனை இந்தியாவிற்கு சென்று பிரசசாரம் செய்வேன் என்றார். அவ்ருக்குஒரு சந்தேகமிருந்தது . சோஷலிச சமூகத்தில் கடவுளுக்கு பங்கு உண்டா ?என்பது அவர் சந்தேகம். ராபர்ட் ஓவன் நாத்திகர் சோசலிச சமூகத்தில் கடவுளுக்கு வேலை யோ பங்கோ இல்லை என்று கூறிவிட்டார்.
ராம் மோகன் இங்கிலாந்திலேயே இருந்து விட்டார். இந்தியா வந்து மெலிதான சோஷலிச காற்று வீசும் பாதை அப்போதைக்கு தடைபட்டுவிட்டது.
ஆனால் அவருடை பிரம் மோசமாஜ் தலைவர்கள் விடவில்லை .குறிப்பாக சிவராஜ் என்ற சீடர் தொழிலாளர்கள் பாடுகளைப்பற்றி கவலைப்பட்டார்.அவர்களுக்காக "சிரமசஞ்சீவினி " என்ற பத்திரிகையை நடத்தினார்.
சோஷலிசகருத்துக்களை (கற்பனா ) பரப்ப இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார்.
சென்னையில் பிரம்ம சமாஜ தலைவர் ரங்கநாத முதலியார் மூலம் ராமலிங்க வள்ளலாரை சந்தித்தார். வள்ளலார் அப்போது சமுதாய சீர்திருத்தத்தில் தீவிரமாக இருந்தார். பிடிட்டிஷாரின் அடக்குமுறையை எதிர்த்துவந்தார் . இருவரும் ஓரளவுக்கு உடன்பட்டனர். சிவராஜ் கல்கத்தா திரும்பினார்.
இதற்கிடையே வள்ளலார் தீவிரமான ஆன்மிக தேடலில் ஈடுபட்டார்.
ஓராண்டு கழித்து சிவராஜ் வள்ளலாரை தொடர்புகொண்டு சோஷலிச பாதையை பிரசாரம் செய்ய அழைத்தார்.
"மன்னிக்க வேண்டும்.! நான் தீவிரமான ஆன்மிக வழியை தேர்ந்தெடுத்து விட்டேன் ! நீங்கள் சொஸலிஷத்தின் மூலம் மக்கள் நலவாழ்வை உருவாக்குங்கள் !"
என்று கூறி ஒதுங்கி கொண்டார் .!!!
(ஆதாரம்;சுதந்திர போராட்ட வரலாறு ' தமிழக அரசு பதிப்பு )
0 comments:
Post a Comment