Tuesday, May 30, 2017




"பா.ஜ .வின் நிகழ்ச்சி  நிரல் "


"choice is yours "



நரேந்திர மோடியும் சரி, அவருடைய எஜமானனான ஆர்.எஸ்.எஸ் சும்  சரி தங்கள் திட்டத்தினை மிகவும் தந்திரமாகவும் செய்நேர்த்தியோடும் செயல் படுத்துகிறார்கள்.


முதல் ஐந்து ஆண்டுகளில் கிடைத்தவெற்றியை பங்கமில்லாமல் காப்பது ஹரியானா விலிருந்து பாட்னாவரை ,யமுனையின் தென்கரையிலிருந்து கோதாவரியின் வட கரை  வரை உள்ள தங்கள் பசு பாதுகாப்பு பகுதியை மேலும் உறுதிப்படுத்துவது என்று வைத்திருக்கிறார்கள். 


தங்களுடைய இந்துத்வா  நிகழசசி  நிரலை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வைத்துக்கொள்வது என்று திட்டம் தீட்டியுள்ளார்கள்  இதற்கிடையே கார்ப்பரேட் நிறுவனங்களோடு தேவையான சமரசங்களில் ஈடுபடுவது என்பதும் திட்டம்.முதலில் அரசியல் தளத்தையும்,நிர்வாக தளத்தையும் முழுமையாக கைப்பற்றுவது. பல்கலை,கல்வி, ஆகியவற்றில் தலையிட்டு திசை திருப்புவது.

அவர்களுடைய கண் தென் இந்திய பகுதியை ஆகிக்கிரமிப்பது என்பதில்   நிற்கிறது . அதற்கு குறுக்கே நிற்பது தமிழகமும் கேரளமும்தான். தமிழகத்தில் உருவாகியுள்ள அரசியல் வெற்றிடம் அவர்களுக்கு சாதகமாக உள்ளது.


ஆனானப்பட்ட எம்.ஜி  ஆரோ ,  ஜெயலலிதாவோ  ஆளுவதாக மக்கள்நினைக்கவில்லை. மாறாக மோடிதான் ஆள்வதாக மக்கள் மனதிலொரு பிம்பம் உருவாக்கப்பட்டு வருகிறது. பழனிசசாமியும் ,பன்னிரும்  மோடிக்கு காவடி எடுப்பவர்கள் என்ற படிமம் கிட்டத்தட்ட உருவாகிவிட்டது .    ப.சிதம்பரம் படும் பாட்டில் காங்கிரஸ் நிலை தடுமாறி நிற்கிறது. 2 ஜி கத்தி யாக தொங்கும் நிலையில் ஸ்டாலின் தடுமாறத்தான் செய்வார்.


எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் நாடியை அவர்கள் ஆளந்தே  வைத்துள்ளார்கள். இந்தி, பார்ப்பனியம், மாட்டுக்கறி என்று பண்பாட்டுத்துறையில் சடுகுடு ஆடவிட்டு அரசியல் மற்றும் நிவாகத்துறையை ஏப்பம் விடுவது அவர்கள் திட்டம்.


கேரளத்தை நேரடியாக சந்திக்க தயாரிப்பு நடக்கிறது . மேற்கு வங்கத்தில் இடதுசாரி  தலைவர்களை நடு ரோட்டில் போட்டு மிதித்து எடுத்தபோது   மற்றவர்கள் மவுனமாயிருக்கிறார்களே ஏன் ?


இது கேரளத்திலும் நடக்கலாம் . 

தமிழகத்தில்  அறிஞர் சமஸ் அவர்களோடும் , பேரறிஞர்   சமுத்திரக்கனியோடும்  தத்துவார்த்த விவாதங்களை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

நாம் என்ன செய்ய போகிறோம் ?


choice is yours  comrades !!!








0 comments: