"நீட் " தேர்வு ,
பற்றி ......!!!
National Eligibility and Enterence Test என்ற தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர் வைதான் அப்படி அழைக்கிறார்கள். இந்தியா பூறாவும் இந்த தேர்வு நடந்தது. மருத்துவ துறையின் தரத்தை உயர்த்தப்போவதாக பா.ஜ .க அரசு கண்ணீர் விடுகிறது.
இவர்களின் கல்வித்தரம்,குறிப்பாக மத்திய பிரதேசத்தில் "வியாபம் " ஊழல் மூலம் நாறிக்கொண்டிருக்கிறது.
இந்தியாவில் சுற்றுலா துறை மருத்துவ சுற்றுலாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் மிகசிறந்த மருத்துவம் உலகத்தரத்தில் கிடைப்பதால் அதனை மையப்படுத்தி விரிவாக்கப்போகிறார்கள்.
மத்திய பிரதேசம், மராட்டியம், உ.பி ஆகியபகுதிகளில் பல கண்மருத்துவ மனைகள் உள்ளன. நேரடியான அனுபவம் எனக்கு உண்டு. அவர்களோடு பழகியதில் நான் தமிழ் நாடு என்று கூறியதும் அவர்கள் முக மலர்சசி யோடு என்னிடம்பேச ஆரம்பிப்பார்கள்.
நான் மதுரை அரவிந்த் ல் தான் "ஆப்தல் " பயிற்சி பெற்றேன் என்று பெருமையாக கூறுவார்கள்.ஒரு சிலர் சென்னை என்பார்கள். இன்று கண் மருத்துவத்தில் தமிழகம் தான் முன்ணணியிலிருக்கிறது என்றால் மிகையாகாது.
கழுத்திலிருந்து வயிற்றின் அடிப்பகுதி வரை thorasic என்பார்கள்.இதிலும் சென்னை புகழ் பெற்றது.நரம்பியல், சிறுநீர்பை, என்று பல துறைகளில் விற்பன்னர்கள் உள்ளார்கள். இதய நோய்க்கான அறுவை சிகிசையில் தமிழக மருத்துவர்கள் உலகப் புகழ் பெற்றவர்கள்.
தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகள் 19 உள்ளன. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு முறையில் தான் சேர்க்கப்படுகிறார்கள். தரம் தரம் என்று கூப்பாடு போடுபவர்களித்தனையும்கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.
"நீட்" தேர்வால் இது கண்டிப்பாக பாதிக்கப்படும்.
இந்த தேர்வு இந்தியா முழுவதும் நடை பெறுகிறது. மாணவர்கள் யாரும் தமிழகத்திலோ கேரளத்திலோ சோதனை செய்யப்பட்ட மாதிரி வடமாநிலங்களில் செய்யப்பட்டதாக செய்திகள் இல்லை.
ஏன் ? அப்படி.!
வலைத்தளங்களிலிந்த சோதனை முறையை கண்டித்து கடுமையான விமரிசனங்கள் வந்துள்ளன . கடுமையான சொற்களால் வசைமாரி பொழிந்துள்ளனர்.
ஒருவேளை இந்த சோதனை முறை தவிர்க்கப்பட்டிருந்தால் "நீட் " தேர்வை ஏற்கும் மனநிலைக்கு நம்மை தள்ளும் முயற்சியாக இருக்குமோ !
"நீட் " நமது உரிமையை தாக்கும் சூது !
மத்திய ஆளும் கூட்டம் வழக்கம் போல நம்மை "நிழற்சண்டை " போட விட்டு வேடிக்கை பார்க்கிறதோ !!!
0 comments:
Post a Comment