Thursday, June 29, 2017






வடமாநிலங்களில் ,


1996 ம் ஆண்டு தேர்தல் ....!!!




1996ம் ஆண்டு வடமாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் மார்க்சிஸ்ட் கடசி கலந்து கொண்ட சில தொகுதிகளுக்கு சென்றேன். அதில் ஒன்றுதான் "சிம்லா " தொகுதியாகும்.

முழுக்க முழுக்க மலைப்பகுதி ! தெருக்கள் வித்தியாசமாக இருக்கும். முதல் தெருவுக்கும் அடுத்தத்தெருவுக்கும் நூறடி உயரம் வித்தியாசம்  இருக்கும். பொருட்டாக்களை சுமந்து செல்வதும்நடந்து செல்வதும் சிரமம். சுமை கூலி க்காரர்கள் .அதிகம் அவர்களும் தலைசுசுசுமையாக கொண்டு செல்லமாட்டார்கள்.முதுகில் கட்டிக்கொண்டு கம்பு ஊன்றி தா ன செல்வார்கள்.

சுமை கூலி  தொழிலாளர்கள் சங்கத்தை மார்க்சிஸ்ட் கடசி வைத்திருந்தது.  சிம்லா நகராட்ச்சியில் கடசி யின் செல்வாக்கும் அதிகம். அதனால் ஒரு தெருவிலிருந்து அடுத்த தெருவுக்கு போக "லிப்ட் " வசதி வைத்திருந்தார்கள். அதனை பொதுமக்களும் பயன்படுத்தினார்கள்.

மத்திய நேரத்தில் நான் சுற்றி வந்தேன் . தூரத்தில் ஒரு கோவில் தெரிந்தது. அங்கிருந்தது "ராம் துன் " பாடிக்கொண்டு ஒரு பஜனை கோஷ்டி வந்து கொண்டிருந்தது. அவர்கள் அருகில் வந்தார்கள். பாடிக்கொண்டு நடுநாயகமாக வந்தவர் கையில் கொடி ! அருவாள் சுத்தியல் நட்ஷத்திரம்போட்ட "செங்கொடி " அது.அவர்சட்டையில்   மார்க்சிஸ்ட் கடசியில் சின்னம் "பாட்ஜ் ".ஆக இருந்தது. ஆர்மேனியம், டோல் வாசிப்பவர் ,கூட வந்தவர்களும் சின்னத்தை "பேட்ஜ்" ஆக அணிந்திருந்தார்கள். என்கூட எல்.ஐ.சி தோழர் பட் என்பவரும் வந்திருந்தார் .

" கேரளமாநிலத்தில் 56 ம் ஆண்டு கடசி கங்கிரசு நடந்தது ..அது டிசம்பர் மாதம்  சபரிமலை பக்தர்கள் கூட்டம் அதிகம்ஒலவக்கொடு ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததுஏ.கே .கோபாலன் ரயிலில் வருகிறார் அவரை வரவேற்க.தொண்டர்கள் காத்திருந்தனர். ரயில் நிலையத்திற்குள் மெதுவாக வந்தது. திடீரென்று 

ஜிந்தாபாத் ! ஜிந்தாபாத் !!
ஏகேஜி ஜிந்தாபாத் !!
ஐயப்பா ! ஐயப்பா !!
சாமிசாரணம் ஐயப்பா !!
ஜிந்தாபாத் ! ஜிந்தாபாத் !!
ஏகேஜி ஜிந்தாபாத் !!

என்று இருமுடிகட்டிய அய்யப்பன் மார்கள் கோஷம்போட்டனர்."


இதை நான் தோழர் "பட்" அவர்களிடம் கூறினேன் !


குட்டையான ,சிவப்பான , வயதில் மூத்தவரான "பட்"அவர்கள் 


" we are intelectuals  ! we understand Marxisym ! they feel It ! that is the difference Comrade ! என்றார்  


0 comments: