Monday, April 30, 2018

அரசியல் தலைமைக்குழுவும் ,

தமிழக அரசு ஊழியர்களும் ...!!!



மார்க்சிஸ்ட் கடசியின் மாநாடு ஹைதிராபாத்தில் நடந்து வெற்றிகரமாக முடிந்தது. மாநாடு பற்றிய விமரிசனங்கள் வந்து கொண்டு இருக்கின்றன..

எள்ளை காயப்போடும் பொது எலிப்புழுக்கையும் குப்பையோடு சேர்ந்து காயத்தானே செய்யும். ?   விமரிசனங்கள் அப்படித்தான் இருக்கின்றன !

அரசியல் தலைமைக்குழுவில் பிராமணர்கள் அதிகம். ஏன் தலித்துகள் ஒருவர் கூட ட இல்லையே ? என்று திரவிட  குஞ்சுகள் ஒப்பாரி வைக்கின்றனர்.!

சாதிவாரியாக பிரித்து இதற்கு பதிலளிக்க வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன்.

எனக்கு வெகு காலமாக ஒரு கேள்வி நி \ரடிக்கொண்டே இருக்கிறது. தொலைபேசி துறையை எடுத்துக்கொண்டால்  அதில் சேரும் தலித் இளைஞனுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு பதவி உயர்வு உண்டு.அநேகமாக அவர் ஒய்வு பெரும் பொது senior supdt ஆக ஒய்வு பெரும் வாய்ப்பு அதிகம். அதேபோலத்தான்,தபால் தந்தி ,ரயில்வே துறை ஆகியவற்றிலும்.

பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி..வாங்கி ஆகியவற்றிலும் சங்கங்கள் போராடி பதவி  உயர்விலும் இட ஒதுக்கீட்டினை பெற்றுத்தந்தன போராடும் பொது இந்த சங்கங்களை கம்யூனிஸ்டுகள் என்று வசைமாரி பொழிவார்கள். இருக்கட்டும். 

கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஆட்சி தானே நடந்தது ? தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட் ஒதுக்கீடு இல்லையே ஏன் ?சோள்ள முத்து தாசில்தாராக கூடாதா? மாரிமுத்து விற்பனை வரி அதிகாரியாகக்கூடாதா ? சங்கர கம்பன்  காவல் துறையில் பகுதி தலைவராக கூடாதா ?

கூடாது ! முதலியார் தாசில்தார் விட்டு வாசலில் நிற்கலாமா? கணபதியா பிள்ளை விற்பனை கணக்கை காட்ட மாரிமுத்துவை  நாடலாமா? வீரபத்திர--- சங்கரகமபன் விட்டு வாசலை மிதிக்கலாமா?

இது பற்றி கவலைப்பட யாருமே இல்லையே ஏன் ? 

வீரமணியின்தி.க வும்,கலைஞரின் திமுகவும் கவலைப்பட வில்லையே ஏன் ?

தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் !



Thursday, April 19, 2018



ஆண்டவரே 

எங்களை ,

ஏன்கைவிட்டீர் ? !!!




ஹைதிராபாத் போக செகந்திராபாத்திலிருந்து ஹுசைனஸாகர் ஏரிக்கரைவழியாக போய் இறங்கும் இடம் தான் "லக்டிகா பூல் ". அதற்கு அடுத்த பஸ்நிறுத்தம் பஷிர்பாக் !

இங்குதான் ஹைதிராபாத் கூட்டுறவு இன்சூரன்ஸ் தலைமையகம் இருந்தது> அந்த கட்டிடத்தில் தான் 1956ம் ஆண்டு எல்.ஐ.சி மண்டல அலுவலகம் துவங்கியது. 

அதற்கு நேர் எதிரில் "தில் குஷ் " என்ற உணவு விடுதி இருந்தது. அதற்கு இரண்டுபக்கமும் இரணியன் ஓட்டல். பிரேசில் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட மாட்டிறைச்சி பிரியாணி கிடைக்கும். நாக்கில் போட்டால் இறைச் சி  கரையும். தில்குஷ் அப்படியல்ல. கேக்குகள்,மற்றும் பூரி சப்பாத்தி, இட்டலி வடை தோசை கிடைக்கும். 

பாலக்காடு மணிஐயர் நடத்துகிறார். உருது கவிதை பாடுவார்.ரெட்டிவந்தால் வேமன்னாவின் வாக்கியங்களை ஒப்பிப்பார்  மதராஸி என்றால் கம்பரை பாடுவார். கிளப்பி விட்டால் மணிக்கணக்கில் பேசுவார் அவர் பேச்சில் போலீஸ் ஆக்ஷன் என்ற வார்த்தை அடிக்கடிவரும். இருபது வருடமாக அங்கு இருக்கிறார்.

என்னோடு நாராயண் ராவ் தக்லிகர்  வேலை பார்த்தார். வயதானவர்> அவரிடம் போலீஸ் ஆக்ஷன் என்கிறார்களே என்ன வென்று கேட்டேன். காண்ணாடியை கழட்டிவிட்டு என்ன ஆழ்ந்து பார்த்தார் .

" இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஹைதிராபாத் சமஸ்தானம் இந்தியாவில் சேரவில்லை.தனி நாடாக இருப்போம் என்கிறார் நிஜாம். மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சி அது  மறைமுகமாக சௌதி அரேபிய படைகளை காசிம் ரஜ்வி தலைமையில் நிஜாமுக்கு ஆதரவாக அனுப்பினார்கள்."

இந்திய அரசாங்கம் கர்னல் சௌத்திரி தலைமையில் ராணுவத்தை அனுப்பியது. இந்தியாவின் கண்டமாத்தியில் சௌதி படையும் இந்திய படையும் மோதியது. இதனை சர்வதேச பிர்சினையாக்கி ஐநா மூலம் தலையிட மேலைநாடுகள் முயன்றன. நெருசர்க்கார் இதன் தடுக்க இது ராணுவநடவடிக்கை அல்ல.வெறும் உள்நாட்டு போலீஸ்   நடவ டிக்கைதான் என்று அறிவித்தது..இந்த சமயத்தில் தான் தெலுங்கானா விவசாயிகள் ஆயுதம் தாங்கிய புரட்சியை நடத்துக் கொண்டிருந்தார்கள்.ஜமீன்களையும் ஜாக்கிரகளையும் அடித்து விரட்டி னார்கள். அவர்கள் ஹைதிராபாத் வந்து தஞ்சம்  புகுந்தனர். நிலத்தை பகிர்ந்து ஆட் சி யை மூன்று ஆண்டுகளாக நடத்திவந்தனர். நிஜாம் காசிம் ராஜ்வி கூலி ப்படையுடன் விவசாயிகளோடு மோதினான். இந்தியா சுதந்திரம்  அடைந்த பொது விவசாயிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவு கிடையாது .என் நிலம் இந்நிலம் என்று கொண்டாடினார்கள் .கேர்ணல் சௌத்திரிக்கு ஆதரவாக நிஜாம் ப டைகளை துவம்சம் செய்தனர். நிஜம் சரணடைந்தார் விவசாயிகள் ஆடிப்பாடி களித்தனர்> ஹைதிராபாத் சமஸ்தான இந்தியாவோடு இணைந்ததும் .மறுநாள் காலை நேரு அரசாங்கம் அறிவித்தது .இந்திய அரசு விவசாயிகளின் அரசு. நில சிர்திருத்தம் செய்யப்போகிறோம். விவசாயிகள் ஜமீன்தார்களிடம் பிடுங்கிய நிலம் சட்ட பூர்வமானது அல்ல. அதனை உடனே திருப்பி அளிக்கவேண்டும். நாங்கள் ஜமின் ஒழிப்பு சட்டம் கொண்டுவந்து விவசாயிகளுக்கு பங்கிட்டு கொடுப்போம் "என்று அறிவித்தது> போராளிகளிடையே குழப்பம். ஏற்கமறு த்த விவசாய போராளிகளை கர்னல் சௌத்திரி தலைமை இந்திய ராணுவம் கொன்று குவித்தது "

போராளிகள் சிதற புரட்ச்சி தோற்கடிக்கப்பட்டது.

"ஆண்டவரே எங்களை ஏன் கைவிட்டீர் "என்று இன்றும் விவசாயிகள் கதறிக்கொண்டிருக்கிறார்கள்.  


அந்த விவசாய போராளிகளின் வாரிசுகள் ஹைதிராபாத் நகரில் மூன்றாம் நாளாக மாநாடு நட த்துகிறார்கள்!






நாகார்ஜுனா 

அணையும் ,

பல்கலைக்கழகமும் ...!!!






1958 டிசம்பர் அல்லது 1959 ஜனவரி யாக இருக்கலாம். 40 -50  lic ஊழியர்கள் நாகார்ஜுனா அணை கட்டுவதை பார்க்க சென்றோம். அணையின் ஒருபகுதி விஜய நகரம் என்று இருந்தது. மறுபகுதி குண்டூர் வாய்க்கால் என்கிறார்கள்.

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தான் அந்த குன்று இருந்தது .அதன் அடிவாரத்தில் தான் நாகார்ஜுனா  பல்கலைக்கழகம் சிதிலமாகி கிடந்தது. பிக்குகள் உருவாக்கிய சிற்பங்கள்,தங்குமிடங்கள் ஆகியவை புதை பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வந்தது. நாங்கள் முழுமையாக அந்த குடவரை மற்றும் சிற்பங்களை பார்த்து மகிழ்ந்தோம்.

அணை  கட்டிக்கொண்டிருந்தார்கள் நீர்வரத்து வரும் பொது இந்தக்குன்று மூழ்கிவிடும். அதன் மேல் முனை மட்டுமே தெரியும். அ ப்படியானால் பல்கலையின் சிதிலங்கள் கதி ? மத்திய அரசு கையை பிசைந்து கொண்டிருக்க வெளிநாட்டிலிருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அங்குலம் அங்குலமாக அவற்றை பெயர்த்து குன்றின் உச்சியில் அமைத்தனர்.இன்று அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் படகில் சென்று குன்றின் மேல் இருக்கும் பல்கலைக்கழகத்தை பார்க்கலாம்.

கிருஷ்ணா நதியின் நீர்  வீழ்ச் சியில் குளித்தோம் .அடர்ந்த காட்டுப்பகுதி ! வன குடிமக்கள்,லம்பாடிகள் இருக்கும் இடம். உருது,தெலுங்கு கலந்த மொழி பேசுவார்கள் . என் நண்பர் விஜய் சாகர் அவர்களோடு உரையாட உதவினார் .

அமராவதி என்ற அம்மையார்தான் என்னோடு பேசினார்.ஐம்பது வயது இருக்கலாம். 

"எங்கள் ஜமீன்தாருக்கு அறுபது ஆயிரம் ஏக்கர் சொந்தம்.இந்தநிலத்தில் விளையும் புல் , பூண்டு ,மரம்,செடி,கோடி மட்டுமல்ல ,வசிக்கும் மனிதர்களும் அவர்களுக்கு சொந்தம் .குறிப்பாக பெண்கள் முதலிரவு அவர்களோடு.இரண்டாம் இரவுதான் கணவனோடு "

"இதைசசோல்ல உங்களுக்கு கூச்மாக இல்லையா ?"

"காலம் காலமாக,என்தாத்தா,அப்பா,அண்ணன்  தம்பி கணவன் பொத்திக்கிட்டு இருக்கும் பொது நான் ஏன் கூச்சப்படவேண்டும் ?"

"உங்களை எது மாற்றியது ? "   யோசித்தார் .

"செங்கோடி  இயக்கமும்  ஆந்திராமகிள  சபாவும்.விவசாயிகளும். "

"ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் கலந்துகொண்டிர்களா?"

"ஆண்கள் கலந்து கொண்டார்கள்> நாங்கள் போராளிகளுக்கு உதவினோம். மறுக்கரையிலிருந்து,துப்பாக்கி,கொடுக,ரவை, எரிகுண்டு, உணவு உடை ஆகியவற்றை கடத்தி வருவோம்."

"பயமாக இல்லையா ? "

"ஏதுமற்றவர்களுக்கு என்ன பயம் எது கிடைத்தாலும் லாபம் தானே !"

"உங்கள் குடும்பம் ?"

"என்கணவர் போராட்டத்தில் இறந்து விட்டார்.நான் இப்போது அவருடைய தம்பியோடு வாழ்கிறேன்..நேருவின் காங்கிரஸ் ஆடசி எங்களை வேட்டையாடியது> என்மகன் 17வயது,18 வயது இருவரும் தப்பி .வங்கம் சென்று விட்டார்கள்> ஒருவன் தற்போது ரயில் கம்பெனியில் க்ளாசி யாக் இருக்கிறான் .மற்றவன் மருத்துவமனையில் எடுபிடியாக  பணியாற்றுகிறான் "

(நான் எழுதிய குறுநாவல் "கிருஷ்ண நதிக்கரையிலிருந்து " ! ஒரு பாத்திரம் அமராவதி என்பதாகும் . இந்த விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய புரட்ச்சியை பின்புலமாக கொண்டது ) 


அந்த அம்மையார் அமராவதி என் நெஞ்சில் நிலைத்துவிட்ட ஒருவர் !

அவரை சந்தித்த நான் பாக்கியசாலி !!!


Wednesday, April 18, 2018

நேற்றய நிர்மலாக்கள் ,

இன்றைய பெரியமனிதர்கள் !









"நிர்மலா"விவகாரம்  தமிழகத்தை குலுக்கிக் கொண்டிருக்கிறது. நண் பர் முனைவர் ! கல்வித்துறையில் பணியாற்றிக்கொண்டிருப்பவர் . தொடர்பு கொண்டேன் !

"திருட்டுப்பயலுக ! ஏதோ ! இன்னக்கி தான் நடப்பதாக நாடகம் போடறாங்க ! கடந்த பத்து ஆண்டுகளாக நடக்குது. இன்றய "---மன்னர்கள் " அன்றைய ஆண்  நிர்மலாக்கள்.! பேராசிரியர் பதவி வேண்டு மா முப்பது அல்லது நாற்பது லட்சம் கொடுக்கவேண்டும் ! புரோக்கராக பணியாற்றினால் சலுகை உண்டு ! குறிப்பாக இளை ஞர்களை  முன்னேற்றுகிறேன் என்று கூவி இதைசெய்கிறார்கள்." என்று கத்திவிட்டார்.

"இவ்வளவு நாள் இல்லாமல் இன்று ஏன் வெளிவந்தது ?"

"நிச்சயம் அரசியலாக இருக்கும் !"

"என்னப்பா சொல்ற ?"

"கிடைக்காதவன் கிடைச்சவனை மாட்டி விடலாம் இல்லாயா ?"

"தடுக்கவே முடியாதா ?"

"லேசா வெளிச்சம் வந்திருக்கு ! பாப்பம் !"

மண்வெட்டியின் கை  பிடியை மாற்றினால் போதாது ! அதன் "அலகை"யும் மாற்றவேண்டும்!!!



"அலகை"யும் "பிடி "யையும் மாற்றி அமைப்பபோம் !!!

Tuesday, April 17, 2018




"மார்க்சிஸ்ட் கடசியின் 

அகிலஇந்திய மாநாடு " 



(ஆயுதமேந்தி நிஜாமை எதிர்த்து போராடி நிலத்தை விவசாயிகளுக்கு  கொடுத்தார். விரட்டியடிக்கப்பட்ட நிஜாமும் அவனுடைய ஜாகீர்தார்களும் ஹைதிராபாத்தில் பதுங்க தெலுங்கானாவில் மூன்று ஆண்டுகள் கம்யூனிஸ்ட் கடசி ஆட்சி நடத்தியது . குதிரையின் கடிவாள கயிறை வாயில் கவ்விக்கொண்டு இரண்டு கைகளாலும் சௌதி அரேபிய நிஜாம் ஆதரவு கூலி படையை சுட்டு வீழ்த்திக்கொண்டே சென்ற அந்த வீராங்கனை சுயராஜ்யம் கொடியேற்ற மாநாடு இன்று ஹைதிராபாத் நகரத்தில் துவங்குகிறது  . மாகன் லால் சதுர்வேதி அவர்கள் எழுதிய கவிதையை இங்கே தருகிறேன் )


தோட்டக்காரா !   தோட்டக்காரா !!

என்னை பறித்து மாலை தொடுக்கிறாயா ?

அந்த சிவன் கழுத்தில் போடப்போகிறாயா ?

அதுதான் எனக்கு பெருமை என்று நினைக்கிறாயோ ?

அதோ அங்கே 

முதிர்ந்த வயதிலும் 

கொடியேற்ற 

வீரநடை போட்டு வருகிறாள் !

அவள் காலடியில் போடு !

சரளைக்கற்கள் அவள் 

காலை குத்தும் !

பூக்களின் மெத்தையாகி

தடுக்கிறேன் !

தோட்டக்காரா  ! தோட்டக்காரா !!

அதுதான் எனக்கு பெருமை !!

அதுமட்டுமே !!!