Thursday, April 19, 2018





நாகார்ஜுனா 

அணையும் ,

பல்கலைக்கழகமும் ...!!!






1958 டிசம்பர் அல்லது 1959 ஜனவரி யாக இருக்கலாம். 40 -50  lic ஊழியர்கள் நாகார்ஜுனா அணை கட்டுவதை பார்க்க சென்றோம். அணையின் ஒருபகுதி விஜய நகரம் என்று இருந்தது. மறுபகுதி குண்டூர் வாய்க்கால் என்கிறார்கள்.

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தான் அந்த குன்று இருந்தது .அதன் அடிவாரத்தில் தான் நாகார்ஜுனா  பல்கலைக்கழகம் சிதிலமாகி கிடந்தது. பிக்குகள் உருவாக்கிய சிற்பங்கள்,தங்குமிடங்கள் ஆகியவை புதை பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வந்தது. நாங்கள் முழுமையாக அந்த குடவரை மற்றும் சிற்பங்களை பார்த்து மகிழ்ந்தோம்.

அணை  கட்டிக்கொண்டிருந்தார்கள் நீர்வரத்து வரும் பொது இந்தக்குன்று மூழ்கிவிடும். அதன் மேல் முனை மட்டுமே தெரியும். அ ப்படியானால் பல்கலையின் சிதிலங்கள் கதி ? மத்திய அரசு கையை பிசைந்து கொண்டிருக்க வெளிநாட்டிலிருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அங்குலம் அங்குலமாக அவற்றை பெயர்த்து குன்றின் உச்சியில் அமைத்தனர்.இன்று அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் படகில் சென்று குன்றின் மேல் இருக்கும் பல்கலைக்கழகத்தை பார்க்கலாம்.

கிருஷ்ணா நதியின் நீர்  வீழ்ச் சியில் குளித்தோம் .அடர்ந்த காட்டுப்பகுதி ! வன குடிமக்கள்,லம்பாடிகள் இருக்கும் இடம். உருது,தெலுங்கு கலந்த மொழி பேசுவார்கள் . என் நண்பர் விஜய் சாகர் அவர்களோடு உரையாட உதவினார் .

அமராவதி என்ற அம்மையார்தான் என்னோடு பேசினார்.ஐம்பது வயது இருக்கலாம். 

"எங்கள் ஜமீன்தாருக்கு அறுபது ஆயிரம் ஏக்கர் சொந்தம்.இந்தநிலத்தில் விளையும் புல் , பூண்டு ,மரம்,செடி,கோடி மட்டுமல்ல ,வசிக்கும் மனிதர்களும் அவர்களுக்கு சொந்தம் .குறிப்பாக பெண்கள் முதலிரவு அவர்களோடு.இரண்டாம் இரவுதான் கணவனோடு "

"இதைசசோல்ல உங்களுக்கு கூச்மாக இல்லையா ?"

"காலம் காலமாக,என்தாத்தா,அப்பா,அண்ணன்  தம்பி கணவன் பொத்திக்கிட்டு இருக்கும் பொது நான் ஏன் கூச்சப்படவேண்டும் ?"

"உங்களை எது மாற்றியது ? "   யோசித்தார் .

"செங்கோடி  இயக்கமும்  ஆந்திராமகிள  சபாவும்.விவசாயிகளும். "

"ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் கலந்துகொண்டிர்களா?"

"ஆண்கள் கலந்து கொண்டார்கள்> நாங்கள் போராளிகளுக்கு உதவினோம். மறுக்கரையிலிருந்து,துப்பாக்கி,கொடுக,ரவை, எரிகுண்டு, உணவு உடை ஆகியவற்றை கடத்தி வருவோம்."

"பயமாக இல்லையா ? "

"ஏதுமற்றவர்களுக்கு என்ன பயம் எது கிடைத்தாலும் லாபம் தானே !"

"உங்கள் குடும்பம் ?"

"என்கணவர் போராட்டத்தில் இறந்து விட்டார்.நான் இப்போது அவருடைய தம்பியோடு வாழ்கிறேன்..நேருவின் காங்கிரஸ் ஆடசி எங்களை வேட்டையாடியது> என்மகன் 17வயது,18 வயது இருவரும் தப்பி .வங்கம் சென்று விட்டார்கள்> ஒருவன் தற்போது ரயில் கம்பெனியில் க்ளாசி யாக் இருக்கிறான் .மற்றவன் மருத்துவமனையில் எடுபிடியாக  பணியாற்றுகிறான் "

(நான் எழுதிய குறுநாவல் "கிருஷ்ண நதிக்கரையிலிருந்து " ! ஒரு பாத்திரம் அமராவதி என்பதாகும் . இந்த விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய புரட்ச்சியை பின்புலமாக கொண்டது ) 


அந்த அம்மையார் அமராவதி என் நெஞ்சில் நிலைத்துவிட்ட ஒருவர் !

அவரை சந்தித்த நான் பாக்கியசாலி !!!


0 comments: