Thursday, April 19, 2018



ஆண்டவரே 

எங்களை ,

ஏன்கைவிட்டீர் ? !!!




ஹைதிராபாத் போக செகந்திராபாத்திலிருந்து ஹுசைனஸாகர் ஏரிக்கரைவழியாக போய் இறங்கும் இடம் தான் "லக்டிகா பூல் ". அதற்கு அடுத்த பஸ்நிறுத்தம் பஷிர்பாக் !

இங்குதான் ஹைதிராபாத் கூட்டுறவு இன்சூரன்ஸ் தலைமையகம் இருந்தது> அந்த கட்டிடத்தில் தான் 1956ம் ஆண்டு எல்.ஐ.சி மண்டல அலுவலகம் துவங்கியது. 

அதற்கு நேர் எதிரில் "தில் குஷ் " என்ற உணவு விடுதி இருந்தது. அதற்கு இரண்டுபக்கமும் இரணியன் ஓட்டல். பிரேசில் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட மாட்டிறைச்சி பிரியாணி கிடைக்கும். நாக்கில் போட்டால் இறைச் சி  கரையும். தில்குஷ் அப்படியல்ல. கேக்குகள்,மற்றும் பூரி சப்பாத்தி, இட்டலி வடை தோசை கிடைக்கும். 

பாலக்காடு மணிஐயர் நடத்துகிறார். உருது கவிதை பாடுவார்.ரெட்டிவந்தால் வேமன்னாவின் வாக்கியங்களை ஒப்பிப்பார்  மதராஸி என்றால் கம்பரை பாடுவார். கிளப்பி விட்டால் மணிக்கணக்கில் பேசுவார் அவர் பேச்சில் போலீஸ் ஆக்ஷன் என்ற வார்த்தை அடிக்கடிவரும். இருபது வருடமாக அங்கு இருக்கிறார்.

என்னோடு நாராயண் ராவ் தக்லிகர்  வேலை பார்த்தார். வயதானவர்> அவரிடம் போலீஸ் ஆக்ஷன் என்கிறார்களே என்ன வென்று கேட்டேன். காண்ணாடியை கழட்டிவிட்டு என்ன ஆழ்ந்து பார்த்தார் .

" இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஹைதிராபாத் சமஸ்தானம் இந்தியாவில் சேரவில்லை.தனி நாடாக இருப்போம் என்கிறார் நிஜாம். மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சி அது  மறைமுகமாக சௌதி அரேபிய படைகளை காசிம் ரஜ்வி தலைமையில் நிஜாமுக்கு ஆதரவாக அனுப்பினார்கள்."

இந்திய அரசாங்கம் கர்னல் சௌத்திரி தலைமையில் ராணுவத்தை அனுப்பியது. இந்தியாவின் கண்டமாத்தியில் சௌதி படையும் இந்திய படையும் மோதியது. இதனை சர்வதேச பிர்சினையாக்கி ஐநா மூலம் தலையிட மேலைநாடுகள் முயன்றன. நெருசர்க்கார் இதன் தடுக்க இது ராணுவநடவடிக்கை அல்ல.வெறும் உள்நாட்டு போலீஸ்   நடவ டிக்கைதான் என்று அறிவித்தது..இந்த சமயத்தில் தான் தெலுங்கானா விவசாயிகள் ஆயுதம் தாங்கிய புரட்சியை நடத்துக் கொண்டிருந்தார்கள்.ஜமீன்களையும் ஜாக்கிரகளையும் அடித்து விரட்டி னார்கள். அவர்கள் ஹைதிராபாத் வந்து தஞ்சம்  புகுந்தனர். நிலத்தை பகிர்ந்து ஆட் சி யை மூன்று ஆண்டுகளாக நடத்திவந்தனர். நிஜாம் காசிம் ராஜ்வி கூலி ப்படையுடன் விவசாயிகளோடு மோதினான். இந்தியா சுதந்திரம்  அடைந்த பொது விவசாயிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவு கிடையாது .என் நிலம் இந்நிலம் என்று கொண்டாடினார்கள் .கேர்ணல் சௌத்திரிக்கு ஆதரவாக நிஜாம் ப டைகளை துவம்சம் செய்தனர். நிஜம் சரணடைந்தார் விவசாயிகள் ஆடிப்பாடி களித்தனர்> ஹைதிராபாத் சமஸ்தான இந்தியாவோடு இணைந்ததும் .மறுநாள் காலை நேரு அரசாங்கம் அறிவித்தது .இந்திய அரசு விவசாயிகளின் அரசு. நில சிர்திருத்தம் செய்யப்போகிறோம். விவசாயிகள் ஜமீன்தார்களிடம் பிடுங்கிய நிலம் சட்ட பூர்வமானது அல்ல. அதனை உடனே திருப்பி அளிக்கவேண்டும். நாங்கள் ஜமின் ஒழிப்பு சட்டம் கொண்டுவந்து விவசாயிகளுக்கு பங்கிட்டு கொடுப்போம் "என்று அறிவித்தது> போராளிகளிடையே குழப்பம். ஏற்கமறு த்த விவசாய போராளிகளை கர்னல் சௌத்திரி தலைமை இந்திய ராணுவம் கொன்று குவித்தது "

போராளிகள் சிதற புரட்ச்சி தோற்கடிக்கப்பட்டது.

"ஆண்டவரே எங்களை ஏன் கைவிட்டீர் "என்று இன்றும் விவசாயிகள் கதறிக்கொண்டிருக்கிறார்கள்.  


அந்த விவசாய போராளிகளின் வாரிசுகள் ஹைதிராபாத் நகரில் மூன்றாம் நாளாக மாநாடு நட த்துகிறார்கள்!


0 comments: