Sunday, July 29, 2018







நாம் 

தீமானிப்போம் 

சரவணா !!!









வயதாகிவிட்டதால் கால 4.30 மணிக்கு முழிப்பு தட்டிவிடும் .  maorning obilations  ஐ முடித்துகொகொண்டு மடி கணினியில் அமரரும் பொது 5மணி ஆகும். கணினியைத்திறந்தால்  வெண்புறா சரவணனின் பதிவு இருக்கும். அடுத்து டாக்டர் .சரவணனின்  பதிவு இருக்கும்.

முற்போக்காளர்க்காளையும் இடதுசாரிகளை விமரிசிப்பவர்களை ஒருபிடி பிடித்துவிடுவார்கள். ஒருநாளைக்கு குறைந்தது பத்துப்பதிவாவதுபோட்டு விடுவார்கள். 

முதல் தேர்தல் நடக்கும் பொது எனக்கு 13 வயது இருக்கலாம். நெல்லை டவுனில் முனிசிபல் தேர்தல். காப்டன் வெங்கடாசலம் என்பவர் எனக்கு சகோதரர் முறை டாக்டர் .பிரஜாசோஷலிஸ்ட் கடசியின் சார்பில் நின்றார். அவருக்காக வேலை செயதேன்  வெற்றி பெறவில்லை. 

அப்போதெல்லாம் கம்யூனிஸ்டுகள்  தேர்தலில் பங்கு பெறுவார்கள். எதிர்க்கேட்ச்சிகள் கம்யுனிஸ்டுகளைப்புகழ் வார்கள் .

கம்யூனிஸ்டுகளை பொறுத்தவரை தேர்தல் என்பது ஒரு அரசியல் இயக்கம். தங்கள் தத்துவத்தையும்,அரசியலையும் மக்களிடையே கொண்டுசெல்ல கிடைத்த சந்தர்ப்பம்> அவர்களுக்கு தேர்தல் வெற்றி என்பது முக்கியமல்ல " என்று புகழ்வார்கள். 

வேட்பு மனு தாக்கல் செய்த கையோடு அப்பாவி கம்யூனிஸ்டு தொண்டன் "எங்களுக்கு தேர்தல் என்பது அரசியல் இயக்கம். வெற்றி தோல்வி பற்றி கவலையில்லை " என்று ஆரம்பித்து விடுவான் . அவனை  அப்படி நினைக்க வைத்துவிடுவார்கள்.

"கம்யூனிஸ்டுகள் எளிமையானவர்கள் . அவர்கள் பிரசாரம் எளிமையாக இருக்கும் .இரவு போக்குவரத்து முடிந்தவுடன், தார் ரோட்டில் சுண்ணாம்பு கொண்டு   சின்னத்தை வரைவார்கள்> என்பான் 

அப்பாவி தொண்டன் இரவு கண்விழித்து தார் ரோட்டில் எழுதிவிட்டு காலையில் அதை தேடுவான்> லாரிடயரோடு அந்த சின்னம் பக்கத்து ஊருக்கு சென்றிருக்கும். எதிரிகளின் பதாகை விளக்கு கம் பங்களில் பறந்து கொண்டிருக்கும்.

மேற்கு வங்கத்திலும் கேராளாவிலும் இந்த பாசசா  பலிக்கவில்லை .ஆகவே இப்போது வன்முறையை கையிலெடுத்து விட்டார்கள்.

எனக்கு உள்ளூர ஒருபயம் இருக்கிறது . அக்கறையும் ஆவேசமும் கொண்ட சரவணர் கள் ஆக்க பூர்வமான திசையில் பிரசாரம் எய்வதை மடைமாற்றுகிறார்களோ  என்ற பயம் தான் . 

சரவணா நாம் எப்படி பிரச்சாரம்  செய்ய வேண்டும் என்பதை நாம் தீர்மானிப்போம் ! 

மதிகெட்ட "மாறன் "கள்  தீர்மானிக்கவேண்டாமே !!!

Sunday, July 22, 2018





"காந்திமதி " அம்மனுக்கு 

வளைகாப்பும் ,சீமந்தமும்

நடக்கும் பொது .....!!!



1936ம் ஆண்டு நெல்லை டவுனை அடுத்து இருக்கும் "பாட்டப்பத்து" கிராமத்தில் பிறந்தவன்  நான்  காட்சி மண்டபமும்,சந்திப்பிள்ளையார் மூக்கும், காந்திமதி அம்மான் சந்நிதி யும் எங்கள் விளையாட்டு மைதானம் ."கள்ளம்பிளே " விளையாடும் பொது அம்மன் கோவிலில் ஒளிந்து கொண்டால் ஸ்காட்லான்ட்டு போலீசாலும் பிடிக்க முடியாது

நெல்லையப்பர் -காந்திமதி அம்மன் கோவில் பிரம்மோத்சவம் ஆனி மாதம் நடக்கும் . பத்தாம் நாள் தேரோட்டம். திருவில்லி புத்தூரில் 7/8 தேர் நெல்லையில் 6/8 தேர். பிரம்மாண்டமாய் இருக்கும்> பத்து நாளும் அம்மான் காலையும் இரவும் நான்குவிதியிலும் பவனி வருவாள் .

ஒருநாள் காலையில் அம்மன் குளிக்கப்போகும் அலங்காரத்தில் வருவாள். ஓராடையில் "குறுக்குமார் " கட்டிக்கொண்டு மீதமிருக்கும் சேலையை கக்கத்தில் வைத்துக்கொண்டு வரும்  அழகை பரவசத்தையோடு பகதர்கள் பார்த்து மகிழ்வார்கள். 

ஆடிமாதம் அம்மன் கோவில் ஊஞ்சல்  மண்டபத்தில் அம்மன் அமர்ந்திருப்பாள்> ஏழுமாத த கர்ப்பிணியாக> பகதர்கள் வரகரிசி முறுக்கு,அதிரசம் என்று அம்மனுக்கு "மசக்கை " பட்சணம்" படையிலிட்டு கொடுப்பார்கள் .

ஐப்பசி கார்த்திகை மாதங்களில் அடைமழை  பெய்யும்.தாமிரவருணி மழைநீரோடு செங்காவி நிறத்தில் செல்லும். அப்பொது ஏதாவது ஒருநாளை தேர்ந்த்டுத்து ஆற்றில் குளிக்க செல்ல மாட்டார்கள்.அன்று அம்மன் மாதாந்திர குளியலுக்காக ஆற்றினுக்கு செல்வார் .  

சிறுவயதில் பார்த்த திருவிழாக்கள் இவை.1954 ல் நெல்லையைவிட்டு வந்து விட்டேன். இப்பதும் விழாக்கள் நடைபெறுகிறதா என்பது தெரியவில்லை .

தோழர் கிருஷி மூலம் விசாரித்தேன் அவர் நிர்வாகி யக்ஞராமனை தொடர்பு கொள்ள சொன்னார்.  அவர் உற்சவம் நடப்பதையும். வளைகாப்பு நடப்பதையும் உறுதி செய்தார்> மாதாந்திர குளியல்பற்றி விபரம் இல்லை> என்கிறார் . 

மேலும் முதிய சிவாசாரியார் அவர்களையும் கோவில் பேஷ காரையும் தொடர்பு கொள்ள செய்தார்>பேஷகாரும் யக்ஞராமன் சொன்னதைமட்டுமே உறுதிப்படுத்தினார்> சிவாச்சாரியார்  மகன் கணேசன் அவர்களை தொடர்பு கொண்டேன் அவரும் இவர்களை சொன்னதையே உறுதிப்படுத்தினார்.

நெல்லை மக்கள் தெய்வத்தையும் , கொண்டாடுகிறார்கள். அன்னை காந்திமதியை ஒரு பெண்ணாகவும் கொண்டாடுகிறார்கள்.

எத்தனை அற்புதமான AMALGAM !!!



Tuesday, July 17, 2018




புதுச்சேரி தான் 

ஒரு முதல்வர் கலந்தது கொண்ட 

முதல் மாநாடு !!! 




தமுஎகசங்க மாநாட்டில் அமைசர்கள்  பலர் கலந்து கொண்டுள்ளனர் . இடது சரி இலக்கிய அமைப்பு என்பதால் நடமாடும் பல்கலைக்கழகமான நெடுஞ்செழியனிலிருந்து தலை வெட்டி தம்பி கிருஷ்ணசாமிவரை  வந்துள்ளனர் /செயலாளர்கள் எழுதி கொடுத்த  பேச்சை பேசுவார்கள் . அதிகம் சோ வியத் எழுத்தாளர்கள்பற்றி இருக்கும்.

பலசந்தர்ப்பங்களில் தமாஷாக இருக்கும். ஆண்டன் செகோவ் அவர்களுக்கும்,அந்தோணி கிராம்ஸிற்கும் வித்தியாசம் தெரியாமல் பேசியவர்கள் உண்டு.கார்க்கி என்றாலே தெரியும். பாவம் ஒரு அமைச்சர் மாநாட்டில் "மாக்சிமம் கார்க்கி " என்று என்றே கடைசிவரை  சொல்லி சிரிப்பாணி  காட்டியதும் உண்டு . 

பாண்டிசேரி முதலவர் வந்திருந்தார்.ரத,கஜ துர  பதா திகளோடு மேடை ஏறி அங்கிருந்த பிரமுகர்களை விரட்டிவிட்டு தன சீடர்களை அமர்த்தவில்லை. 

பார்வையாளர்களை இருந்த அரங்கம் சென்று அவர்களை வரவேற்பையே ஏற்றும் வாழ்த்துக்களை சொல்லியும் பின்னர் மேடை ஏறினார்.(வைரமுத்து இது பற்றி கருத்து சொல்லி இருக்க வேண்டாமோ )

இன்றைய நிலைமையில் ஒன்று பட்டு இருக்க வேண்டியது ப்றறிக்குறி ப்பிட்டார்.நிகழ்ச்ச்சிகளை முடிவடையும் வரை  இருந்து (பாதியில் அம்பேல் என்று விட்டுவிட்டு ஓடிவிடா மல் ) கவுரவித்தார் .

முதல்வர் நாராயணசாமி அவர்கள்  மாநாட்டிற்கு வந்ததற்கு முக்கிய காரணமுண்டு.

ஒருவர் மாநிலங்கள் அவை உறுப்பினர்தோழர்  டி .கே ரங்கராஜன் அவர்கள். 

மற்றோருவர் அந்த சமுகப் போராளி தோழர்  முருகன் !

இருவருக்கும் தமு எ க சங்கம் கடமைப்பட்டிருக்கிறது. !!!








Sunday, July 08, 2018





த .மு.எ.க.சங்கத்தின் 

14வது மாநாட்டில் ...!!!m 





1989ம் ஆன்டுஜனவரி மாதம் முதல் தேதி ! வேலை முடிந்து தீக்கதிரலுவலகத்திலிருந்து புறப்படுமுன்,யு.என் ஐ பிரிண்டரை பார்ப்பது வழக்கம் . "jana naattya manch theatre person attacked  in Gaziabad " என்று வந்திருந்தது. இது மார்க்சிஸ்ட் கடசியின் நாடகக் குழு.

வீட்டிற்கு வந்து விட்டேன்.இரவு ஆங்கில செய்தியில் சசிகுமார் "the cpi (m )activist Safdar hashmi was attacked " என்று வாசித்தார். 

டெல்லியின் புறநகர் பகுதியான காஜியாபாத்தில் தொழிலாளர்களபோராட்டம்நடக்கிறது.அவர்களுக்கு ஆதரவாக சன நாட்டிய மான்சி என்ற விதி நாடக  அமைப்பு "ஹால்ல போல் " என்ற நாடகத்த்தை நடத்தியுள்ளது .ரவுடிகள் நாடகாக்காரர்களை  தாக்கியுள்ளனர்> இதில் சப் தார் ஹாஷ்மி படுகாயம் அடைய மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார் . சிகிசை அளித்தும் பலனில்லாமல் சபித்தார் ஹாஷ்மி 2ம் தேதி இறந்தார்  மூன்றாம் தேதி அடக்கம் செய்த பிறகு சப்தரின் மனைவி மாலாஸ்ரீ எந்த இடத்தில் நாடகம் போட தடை செய்தார்களோ அதே இடத்தில் ஹல்லாபோல் நாடாகத்தை நடத்தி காட்டினார்.ஹல்லோ போல் என்றால் உறக்கப்போச்சு என்று அர்த்தம் .

ஜனவரி 17ம் தேதி சர்வதேச திரைப்பட விழா ஆரம்பமாகியது> அந்த விழாவின் வர்ணனையாளராக ஷப்னா ஹாஸ்மி இருந்தார்> வீழா  ஆரம்பமாகும் பொது ஷப்னா "ஒரு நடிகனை அடித்தே கொன்று விட்டவர்கள் நடத்தும் இந்தவிழாவில் நான் பங்கெடுக்க விரும்பவில்லை என்று அறிவித்து அரங்கத்தையே கதிகலங்க வைத்தார்> சர்வதேச பத்திரிக்கையாளர்மற்றும் ஊடகங்கள் முன் அரசு அமபலப்பட்டு திணறியது>

சப் தார் ஏப்ரல் 12ம் தேதி பிறந்தவர்> 1989ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதியை அவர்நினைவாக டெல்லியில் கொண்டாடினார்கள்> இந்தியாமுழுவதிலிமிருந்த ஆர்வலர்கலகலந்து கொண்டனர்> மராட்டியத்திலிருந்து விஜய்,டெல்லியில் வைவான் சுந்தரம், எம்.எஸ்.சத்யு, ஹபீபிதந்விர் என்று கலந்து கொண்டனர்> தமிழ க்கத்திலிருந்து நான் கலந்து கொண்டேன்.

மண்டி ஹவுஸிலிருந்து பிரும்மாண்டமான ஊர்வலம் புறப்பட்டது.உள்துறை அமைசர் பூட்டா சிங்  வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் என்று அறிவித்தருந்தார்கள் .அவர் விட்டு வாசலில் கயிருக்கட்டி எங்களை சுற்றி வளைத்து விட்டார்கள் .அங்கேயே அமர்ந்து நாடகம் போட்டோம். ஆயிரக்கணக்கில் பார்வையாளர்கள் .பார்வையாளர்களிடையே அமர்ந்திருந்தார்கள் ஷபானா ஹஸ்மியும் ,ஜாவேத் அக்தரும்.

சபித்தார்,ஜஹ்பனா,ஜாவேத் ஆகியோர் காஷ்மீரி கேட்டில் வசிப்பவர்களை. கம்யூனிஸ்ட் குடும்பம்.

தமுஎகசங்கத்தின் 14வதுமாநாட்டை  துவக்கி வைக்க ஜாவேத் வந்திருந்தார். முதல்நாள் கலைஇரவின் பொது அருகிலமர்ந்திருந்த நான் சப்தர் தார் நினைவு தினம் பற்றி சொன்னேன். ஜாவேத் உணர்சிவயப்பட்டார் .நீங்கள் முன்னாலேயே வந்திருக்கக்கூடாதா >வாருங்கள் நாம் அறையில் அமர்ந்துபேசலாம்> என்றார். எனது முதுமையையும் இயலாமையாயியும் எடுத்து சொன்னேன்.நாளை  வருவீர்களா? என்றுகேட்டார்> கண்டிப்பாக என்றேன்.

மறுநாள் அவருடைய துவக்க உரையை  கேட்டேன்.அற்புதம் 


"முற்போக்காளர்களா எல்லாரும் கம்யூனிஸ்ட் அல்ல ! ஆனால் கம்யுனிஸ்டுகள் முற்போக்காளர்களாக இருக்கவேண்டும்" என்றார் அவர் கூறியபோது கையொலி  எழுந்தது.

அவர் பேசி முடித்ததும் SATANDING OVATION அரங்கத்தில் நடந்தது.

14வது மாநாடு துவங்கியது கம்பிரமாக !!!













Saturday, July 07, 2018




த.மு.எ.க. சங்கத்தின் 

14வது மாநாட்டில் ...!!!






நான்கைந்து ஆண்டுகளாகியிருக்கும். அப்போது நான் தென் சென்னை அமைப்பில் உறுப்பினராயிருந்தேன். பாரதி பதிப்பகத்து மேலாளர் சிராஜுத்தீன் அவர்களை எங்களமைப்பின் செயலாளராக இருந்தார் . ஒருஜெராக்ஸ் செய்யப்பட புத்தகத்தை கொடுத்தார் .ராகுல்ஜி எழுத "வா  ல்காவிலிருந்து கங்கை வரை" என்ற புத்தகத்தின் இந்தி மூலம். முத்து மீ னாட்ச்சியால்  மொழிபெயர்க்க முடியுமானால் நாம் கொண்டு வரலாம். என்றார்.

ஆறுமாதம்பாடுபட்டு மொழிபெயர்த்தோம் . செய்நேர்த்திமிக்க பாரதி பதிப்பகம், அதனை அழகுமிளிர வெளியிட்டுள்ளது.

1917ம் ஆண்டுக்கான சிறந்தமொழிபெயர்ப்பாளராக தமிழக அரசு முத்து மீனாட்ச்சிக்கு ஒருலட்சம் ரொக்கமும் விருதும் அளித்துள்ளது. பஞ்சாபி மொழியில் வெளிவந்த "நரபட்சிணி  " என்ற நாவலை இந்தி முலம் தமிழில் கொண்டுவந்ததற்காக   இருக்கலாம். 

அல்லது,இந்தி,ஆங்கிலம்,சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கு தமிழ் எழுத்தாளர்களை கொண்டு சென்றதாகவும் இருக்கலாம்.

குறிப்பாக ராகுல்ஜியின் நூலை  மிகச்சிறப்பாக "பாரதி" கொண்டுவந்துள்ளது பெருமைக்குரியது. குறிப்பாக பா.ஜீவசந்தரி,மற்றும்கமலாலயன் ஆகியோரின் பனி மகத்தானது. என்பது முத்துமினாடசியின்  கருத்த்து. அவர்களை புதுசேரியில் சந்திக்க ஆவலாகஇருந்தோம். 

24ம்தேதி தான் சந்திக்கமுடிந்தது ஜீவசந்தரியை கட்டிப்பிடித்து தன வாழ்த்துக்களை முத்து மினாடசி தெரிவித்தார்.

அதோடு நாங்கள் "அப்ஸ் " என்று அழை க்கும் அப்பணசாமியையும் சந்தித்தோம். கோவில்பட்டியில் ஒரு ஜவுளிக்கடை முதலாளி யின் மகன்.அப்ஸ். சகலத்தையும் துறந்து பொது வாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணித்து கொண்டவர் .

ஜீவசவுந்தரி-அப்பண்ணசாமி ஆகிய இருவரையும் சந்தித்தது எங்கள் கொடுப்பினைதான்.

வாழ்த்துக்கள் தோழர்களே !!!


Wednesday, July 04, 2018







த.மு.எ .க.சங்கத்தின் 

14வது  மாநாட்டில் ...!!!


1950ம் ஆண்டில் இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்தது. அன்றிலிருந்து 15 ஆண்டுகள் அதாவது 1965ம் ஆண்டு வரை ஆங்கிலம் ஆடசி மொழியாக இருக்கும். பின்னர் இந்தி ஆடசிமொழியாக இருக்கும் என்று அன்றைய சட்டம் குறிப்பிட்டது.  

1963 மா ஆண்டுகளி லேயே இது பற்றிய விவாதம் நடந்து வந்தது குறிப்பாக இந்து,இந்தியனெக்ச்பிரஸ், மெயில்போன்ற பத்திரிகைகள் கடுமையான நிலை எடுத்து எழுதின. மெயில் பத்திரிக்கை தன பிரசுரத்தை நிறுத்திக்கொண்டது.

அப்போது மதுரையில் இடதுசாரி மாணவர் இயக்கம் துளிர் விட்டுக் கொண்டிருந்தது.  பாலிடெக்னீக்,பொறியியல், மருத்து கல்லூரிகளில் மாணவர் இயக்கம் செயல்பட்டு வந்தது . அவர் கள் 1965ம் ஆண்டு ஜனவரி மாதம் ஊர்வலம் நடத்தி இந்த மொழிப் பிரசசினை பற்றி தீர்மானம்  நிறைவேற்ற விரும்பினார்கள்> இந்து பேசாதமக்கள்  விரும்பும்வரை ஆங்கிலம் நீடிக்கவேண்டும் என்பது அவர்களை கோரிக்கை.   

மதுரை மருத்துவக்கலாலுற்றி மாணவர்கள் டாக்டர் சேதுராமன் தலைமையில் செயல்பட்டார்கள் அவருக்குதொழிற்சங்கங்கள .குறிப்பாக எல் ஐ சி ஊழியர் சங்கம் சிறப்பாக ஆதரித்தது .

நான்கு மாசிவீதியில் ஊர்வலம்.பின்னர் தியாகிகள் சத்துக்கத்தில் ,தீர்மானம் நிறைவேற்ற முடிவாகியது.

நேரு ஆலால  விநாயகர் கோவிலிலிரு \ந்து வடக்கு மாசி வீதியில் ஊர்வலம் புறப்பட்டது. ராமாயணச்சாவடி அருகே வரும்போது வெள்ளையன் என்ற காங்கிரஸ் தொ(கு)ண்டர்  மாணவர்களை தாக்கினார் அன்று பிடித்த சனியன் காங்கிரசை இன்றும் எழ முடியாதபடி செய்து விட்டது.

கலைக்கல்லூரி மாணவர்கள் இவர்களுக்கு ஆதரவாக வந்தார்கள். நாராயணன் (இன்று தீக்கதிர் நாராயணன்),பா.செயப்பிரகாசம், சுருளிவேல் என்று பலர் வந்து போராட்டத்ததலைமை தாங்கி  நடத்தினர் .மதுரை,கோவை திருச்சி சென்னை என்று பல்கிப்பறந்தது>ஆந்திரா,ஒரிசா, மே .வங்கம் என்று அகிலஇந்திய மொழி ப்போராட்டமாக மாறியது.

தமுஎகசங்கத்தின் 14வந்து மாநாட்டின் கலை நிகழ்ச்சியின் பொது தோழர் எஸ் எ பி அவர்களை அருகில் அமர்ந்திருந்தேன் . 

"காஸ்யபன் ! இது செயப்பிரகாசம் " என்று அருகில் இருந்தவரை அறிமுகப்படுத்தினார்.

மொழிப்பவராட்டத்தின் போத முழுக்கால்ச்சட்டை,மேல் சைட்டை அணிந்து மாணவனாக பார்த்த செயப்பிரகாசம்,அவரதுக் "காடு" நூலை  மதுரையில் தெருத்தெருவாக விற்ற  நான் பார்த்தேன் .களமும் தூரமும் அவரை மாற்றி இருந்தது . பட்டறிவும், படிப்பறிவும் அவர் முகத்தில் கோடுகளாக மாறியிருந்தது. கட்டி அனைத்துக் கொண்டோம்.

ஐம்பது  ஆண்டுகளுக்கு பிறகு அந்த போர்விரனை பார்க்கிறேன்.

14வது மாநாடு என்ன ஏமாற்றவில்லை !!!








த.மு.எ .க.சங்கத்தின் 

14வது  மாநாட்டில் ...!!!

1950ம் ஆண்டில் இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்தது. அன்றிலிருந்து 15 ஆண்டுகள் அதாவது 1965ம் ஆண்டு வரை ஆங்கிலம் ஆடசி மொழியாக இருக்கும். பின்னர் இந்தி ஆடசிமொழியாக இருக்கும் என்று அன்றைய சட்டம் குறிப்பிட்டது.  

1963 மா ஆண்டுகளி லேயே இது பற்றிய விவாதம் நடந்து வந்தது குறிப்பாக இந்து,இந்தியனெக்ச்பிரஸ், மெயில்போன்ற பத்திரிகைகள் கடுமையான நிலை எடுத்து எழுதின. மெயில் பத்திரிக்கை தன பிரசுரத்தை நிறுத்திக்கொண்டது.

அப்போது மதுரையில் இடதுசாரி மாணவர் இயக்கம் துளிர் விட்டுக் கொண்டிருந்தது.  பாலிடெக்னீக்,பொறியியல், மருத்து கல்லூரிகளில் மாணவர் இயக்கம் செயல்பட்டு வந்தது . அவர் கள் 1965ம் ஆண்டு ஜனவரி மாதம் ஊர்வலம் நடத்தி இந்த மொழிப் பிரசசினை பற்றி தீர்மானம்  நிறைவேற்ற விரும்பினார்கள்> இந்து பேசாதமக்கள்  விரும்பும்வரை ஆங்கிலம் நீடிக்கவேண்டும் என்பது அவர்களை கோரிக்கை.   

மதுரை மருத்துவக்கலாலுற்றி மாணவர்கள் டாக்டர் சேதுராமன் தலைமையில் செயல்பட்டார்கள் அவருக்குதொழிற்சங்கங்கள .குறிப்பாக எல் ஐ சி ஊழியர் சங்கம் சிறப்பாக ஆதரித்தது .

நான்கு மாசிவீதியில் ஊர்வலம்.பின்னர் தியாகிகள் சத்துக்கத்தில் ,தீர்மானம் நிறைவேற்ற முடிவாகியது.

நேரு ஆலால  விநாயகர் கோவிலிலிரு \ந்து வடக்கு மாசி வீதியில் ஊர்வலம் புறப்பட்டது. ராமாயணச்சாவடி அருகே வரும்போது வெள்ளையன் என்ற காங்கிரஸ் தொ(கு)ண்டர்  மாணவர்களை தாக்கினார் அன்று பிடித்த சனியன் காங்கிரசை இன்றும் எழ முடியாதபடி செய்து விட்டது.

கலைக்கல்லூரி மாணவர்கள் இவர்களுக்கு ஆதரவாக வந்தார்கள். நாராயணன் (இன்று தீக்கதிர் நாராயணன்),பா.செயப்பிரகாசம், சுருளிவேல் என்று பலர் வந்து போராட்டத்ததலைமை தாங்கி  நடத்தினர் .மதுரை,கோவை திருச்சி சென்னை என்று பல்கிப்பறந்தது>ஆந்திரா,ஒரிசா, மே .வங்கம் என்று அகிலஇந்திய மொழி ப்போராட்டமாக மாறியது.

தமுஎகசங்கத்தின் 14வந்து மாநாட்டின் கலை நிகழ்ச்சியின் பொது தோழர் எஸ் எ பி அவர்களை அருகில் அமர்ந்திருந்தேன் . 

"காஸ்யபன் ! இது செயப்பிரகாசம் " என்று அருகில் இருந்தவரை அறிமுகப்படுத்தினார்.

மொழிப்பவராட்டத்தின் போத முழுக்கால்ச்சட்டை,மேல் சைட்டை அணிந்து மாணவனாக பார்த்த செயப்பிரகாசம்,அவரதுக் "காடு" நூலை  மதுரையில் தெருத்தெருவாக விற்ற  நான் பார்த்தேன் .களமும் தூரமும் அவரை மாற்றி இருந்தது . பட்டறிவும், படிப்பறிவும் அவர் முகத்தில் கோடுகளாக மாறியிருந்தது. கட்டி அனைத்துக் கொண்டோம்.

ஐம்பது  ஆண்டுகளுக்கு பிறகு அந்த போர்விரனை பார்க்கிறேன்.

14வது மாநாடு என்ன ஏமாற்றவில்லை !!!


Sunday, July 01, 2018

த .மு.எ .க சங்கத்தின்
14 வது  மாநாட்டில் ...!!!





தான் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தின் பௌதிக ஆளுமையை சித்தரிக்கும் நடிகர்கள் உண்டு ! அதன் உணர்சசிகளை வெளிப்படுத்தி நம்மை பிரமிக்க சேய்யும் நடிகர்களும் உண்டு.
அந்த பாத்திரத்தன் ஆத்மாவேதனையை சித்தரித்து வெற்றி கண்டவர் மறைந்த நடிகர் ரகுவரன் ஆவார்கள். பயணசிட்டு வாங்காமல் ரயிலில் வந்து தலைவருக்கு வரவேற்பு கொடுக்கும் கும்பலோடு சேர்ந்து வெளியேறுமவருடைய முதல் படமான " ஏழாவது மனிதனி"ல் பார்த்தபோது தமிழ் திரைக்கு ஒரு"வசமான கை " கிடைத்ததாக மகிழ் ந்தேன் .
"ஆஹா " என்றபடம் .இளம் வயதில் காதலித்த காதலி யோடு திருமணம் நடக்கவில்லை. வேறொரு திருமண ம் செய்து கொண்டு வாழும்போது நோய்வாயப்பட்டு ,காதலி  இறக்கும் தருவாயில்  வருகிறாள்.மனைவி-காதலி இருவரையும் கைவிட முடியாமல் தவிக்கும்மனிதனின் ஆத்ம வேதனையை ரகுவரன் அற்புதமாக சித்ததரித்திருப்பார்.
எழுத்தாளர் சங்க மாநிலக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது> அப்போது ஏ வி எம்  தயாரித்த படம்- பெயர் - நினவில் இல்லை - இளை ஞன் குடியால் கெட்டு திருந்தி  மிண்டும்குடித்து அழிந்து போவான். ரகுவரன் இளைஞனாக நடிப்பார்> அற்புதமாக இருக்கும் .
மிகசிறந்த அந்தநடிகர் பற்றி பல செய்திகள் உண்டு> அவரைப் புரிந்து கொண்டு அவரோடு தன வாழ்க்கையை இணைக்க தனித்த எண்ணம் வேண்டும். தோழர் ரோகினி அவர்களுக்கு அதற்கான "மனவளம் " இருந்ததால் அவர் வாழ்க்கை இனித்தது.
ரகுவரன் -ரோகிணி தாம்பத்தியருக்கு ரிஷி என்று மகன் இருக்கிறான். வாழ்க்கையில் சகல வெற்றிகளையும் அவன் பெற நானும் முத்து மீனாட் சியும் வாழ்த்துகிறோம்.
தோழர் ரோஹிணி அவர்களை மாநாட்டில் சநதித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
வாழ்த்துக்கள் ரோகினி அவர்களே !!!