Sunday, July 22, 2018





"காந்திமதி " அம்மனுக்கு 

வளைகாப்பும் ,சீமந்தமும்

நடக்கும் பொது .....!!!



1936ம் ஆண்டு நெல்லை டவுனை அடுத்து இருக்கும் "பாட்டப்பத்து" கிராமத்தில் பிறந்தவன்  நான்  காட்சி மண்டபமும்,சந்திப்பிள்ளையார் மூக்கும், காந்திமதி அம்மான் சந்நிதி யும் எங்கள் விளையாட்டு மைதானம் ."கள்ளம்பிளே " விளையாடும் பொது அம்மன் கோவிலில் ஒளிந்து கொண்டால் ஸ்காட்லான்ட்டு போலீசாலும் பிடிக்க முடியாது

நெல்லையப்பர் -காந்திமதி அம்மன் கோவில் பிரம்மோத்சவம் ஆனி மாதம் நடக்கும் . பத்தாம் நாள் தேரோட்டம். திருவில்லி புத்தூரில் 7/8 தேர் நெல்லையில் 6/8 தேர். பிரம்மாண்டமாய் இருக்கும்> பத்து நாளும் அம்மான் காலையும் இரவும் நான்குவிதியிலும் பவனி வருவாள் .

ஒருநாள் காலையில் அம்மன் குளிக்கப்போகும் அலங்காரத்தில் வருவாள். ஓராடையில் "குறுக்குமார் " கட்டிக்கொண்டு மீதமிருக்கும் சேலையை கக்கத்தில் வைத்துக்கொண்டு வரும்  அழகை பரவசத்தையோடு பகதர்கள் பார்த்து மகிழ்வார்கள். 

ஆடிமாதம் அம்மன் கோவில் ஊஞ்சல்  மண்டபத்தில் அம்மன் அமர்ந்திருப்பாள்> ஏழுமாத த கர்ப்பிணியாக> பகதர்கள் வரகரிசி முறுக்கு,அதிரசம் என்று அம்மனுக்கு "மசக்கை " பட்சணம்" படையிலிட்டு கொடுப்பார்கள் .

ஐப்பசி கார்த்திகை மாதங்களில் அடைமழை  பெய்யும்.தாமிரவருணி மழைநீரோடு செங்காவி நிறத்தில் செல்லும். அப்பொது ஏதாவது ஒருநாளை தேர்ந்த்டுத்து ஆற்றில் குளிக்க செல்ல மாட்டார்கள்.அன்று அம்மன் மாதாந்திர குளியலுக்காக ஆற்றினுக்கு செல்வார் .  

சிறுவயதில் பார்த்த திருவிழாக்கள் இவை.1954 ல் நெல்லையைவிட்டு வந்து விட்டேன். இப்பதும் விழாக்கள் நடைபெறுகிறதா என்பது தெரியவில்லை .

தோழர் கிருஷி மூலம் விசாரித்தேன் அவர் நிர்வாகி யக்ஞராமனை தொடர்பு கொள்ள சொன்னார்.  அவர் உற்சவம் நடப்பதையும். வளைகாப்பு நடப்பதையும் உறுதி செய்தார்> மாதாந்திர குளியல்பற்றி விபரம் இல்லை> என்கிறார் . 

மேலும் முதிய சிவாசாரியார் அவர்களையும் கோவில் பேஷ காரையும் தொடர்பு கொள்ள செய்தார்>பேஷகாரும் யக்ஞராமன் சொன்னதைமட்டுமே உறுதிப்படுத்தினார்> சிவாச்சாரியார்  மகன் கணேசன் அவர்களை தொடர்பு கொண்டேன் அவரும் இவர்களை சொன்னதையே உறுதிப்படுத்தினார்.

நெல்லை மக்கள் தெய்வத்தையும் , கொண்டாடுகிறார்கள். அன்னை காந்திமதியை ஒரு பெண்ணாகவும் கொண்டாடுகிறார்கள்.

எத்தனை அற்புதமான AMALGAM !!!



0 comments: