skip to main |
skip to sidebar
த.மு.எ.க. சங்கத்தின்
14வது மாநாட்டில் ...!!!
நான்கைந்து ஆண்டுகளாகியிருக்கும். அப்போது நான் தென் சென்னை அமைப்பில் உறுப்பினராயிருந்தேன். பாரதி பதிப்பகத்து மேலாளர் சிராஜுத்தீன் அவர்களை எங்களமைப்பின் செயலாளராக இருந்தார் . ஒருஜெராக்ஸ் செய்யப்பட புத்தகத்தை கொடுத்தார் .ராகுல்ஜி எழுத "வா ல்காவிலிருந்து கங்கை வரை" என்ற புத்தகத்தின் இந்தி மூலம். முத்து மீ னாட்ச்சியால் மொழிபெயர்க்க முடியுமானால் நாம் கொண்டு வரலாம். என்றார்.
ஆறுமாதம்பாடுபட்டு மொழிபெயர்த்தோம் . செய்நேர்த்திமிக்க பாரதி பதிப்பகம், அதனை அழகுமிளிர வெளியிட்டுள்ளது.
1917ம் ஆண்டுக்கான சிறந்தமொழிபெயர்ப்பாளராக தமிழக அரசு முத்து மீனாட்ச்சிக்கு ஒருலட்சம் ரொக்கமும் விருதும் அளித்துள்ளது. பஞ்சாபி மொழியில் வெளிவந்த "நரபட்சிணி " என்ற நாவலை இந்தி முலம் தமிழில் கொண்டுவந்ததற்காக இருக்கலாம்.
அல்லது,இந்தி,ஆங்கிலம்,சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கு தமிழ் எழுத்தாளர்களை கொண்டு சென்றதாகவும் இருக்கலாம்.
குறிப்பாக ராகுல்ஜியின் நூலை மிகச்சிறப்பாக "பாரதி" கொண்டுவந்துள்ளது பெருமைக்குரியது. குறிப்பாக பா.ஜீவசந்தரி,மற்றும்கமலாலயன் ஆகியோரின் பனி மகத்தானது. என்பது முத்துமினாடசியின் கருத்த்து. அவர்களை புதுசேரியில் சந்திக்க ஆவலாகஇருந்தோம்.
24ம்தேதி தான் சந்திக்கமுடிந்தது ஜீவசந்தரியை கட்டிப்பிடித்து தன வாழ்த்துக்களை முத்து மினாடசி தெரிவித்தார்.
அதோடு நாங்கள் "அப்ஸ் " என்று அழை க்கும் அப்பணசாமியையும் சந்தித்தோம். கோவில்பட்டியில் ஒரு ஜவுளிக்கடை முதலாளி யின் மகன்.அப்ஸ். சகலத்தையும் துறந்து பொது வாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணித்து கொண்டவர் .
ஜீவசவுந்தரி-அப்பண்ணசாமி ஆகிய இருவரையும் சந்தித்தது எங்கள் கொடுப்பினைதான்.
வாழ்த்துக்கள் தோழர்களே !!!
0 comments:
Post a Comment