நாம்
தீமானிப்போம்
சரவணா !!!
வயதாகிவிட்டதால் கால 4.30 மணிக்கு முழிப்பு தட்டிவிடும் . maorning obilations ஐ முடித்துகொகொண்டு மடி கணினியில் அமரரும் பொது 5மணி ஆகும். கணினியைத்திறந்தால் வெண்புறா சரவணனின் பதிவு இருக்கும். அடுத்து டாக்டர் .சரவணனின் பதிவு இருக்கும்.
முற்போக்காளர்க்காளையும் இடதுசாரிகளை விமரிசிப்பவர்களை ஒருபிடி பிடித்துவிடுவார்கள். ஒருநாளைக்கு குறைந்தது பத்துப்பதிவாவதுபோட்டு விடுவார்கள்.
முதல் தேர்தல் நடக்கும் பொது எனக்கு 13 வயது இருக்கலாம். நெல்லை டவுனில் முனிசிபல் தேர்தல். காப்டன் வெங்கடாசலம் என்பவர் எனக்கு சகோதரர் முறை டாக்டர் .பிரஜாசோஷலிஸ்ட் கடசியின் சார்பில் நின்றார். அவருக்காக வேலை செயதேன் வெற்றி பெறவில்லை.
அப்போதெல்லாம் கம்யூனிஸ்டுகள் தேர்தலில் பங்கு பெறுவார்கள். எதிர்க்கேட்ச்சிகள் கம்யுனிஸ்டுகளைப்புகழ் வார்கள் .
கம்யூனிஸ்டுகளை பொறுத்தவரை தேர்தல் என்பது ஒரு அரசியல் இயக்கம். தங்கள் தத்துவத்தையும்,அரசியலையும் மக்களிடையே கொண்டுசெல்ல கிடைத்த சந்தர்ப்பம்> அவர்களுக்கு தேர்தல் வெற்றி என்பது முக்கியமல்ல " என்று புகழ்வார்கள்.
வேட்பு மனு தாக்கல் செய்த கையோடு அப்பாவி கம்யூனிஸ்டு தொண்டன் "எங்களுக்கு தேர்தல் என்பது அரசியல் இயக்கம். வெற்றி தோல்வி பற்றி கவலையில்லை " என்று ஆரம்பித்து விடுவான் . அவனை அப்படி நினைக்க வைத்துவிடுவார்கள்.
"கம்யூனிஸ்டுகள் எளிமையானவர்கள் . அவர்கள் பிரசாரம் எளிமையாக இருக்கும் .இரவு போக்குவரத்து முடிந்தவுடன், தார் ரோட்டில் சுண்ணாம்பு கொண்டு சின்னத்தை வரைவார்கள்> என்பான்
அப்பாவி தொண்டன் இரவு கண்விழித்து தார் ரோட்டில் எழுதிவிட்டு காலையில் அதை தேடுவான்> லாரிடயரோடு அந்த சின்னம் பக்கத்து ஊருக்கு சென்றிருக்கும். எதிரிகளின் பதாகை விளக்கு கம் பங்களில் பறந்து கொண்டிருக்கும்.
மேற்கு வங்கத்திலும் கேராளாவிலும் இந்த பாசசா பலிக்கவில்லை .ஆகவே இப்போது வன்முறையை கையிலெடுத்து விட்டார்கள்.
எனக்கு உள்ளூர ஒருபயம் இருக்கிறது . அக்கறையும் ஆவேசமும் கொண்ட சரவணர் கள் ஆக்க பூர்வமான திசையில் பிரசாரம் எய்வதை மடைமாற்றுகிறார்களோ என்ற பயம் தான் .
சரவணா நாம் எப்படி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதை நாம் தீர்மானிப்போம் !
மதிகெட்ட "மாறன் "கள் தீர்மானிக்கவேண்டாமே !!!
0 comments:
Post a Comment