Wednesday, July 04, 2018







த.மு.எ .க.சங்கத்தின் 

14வது  மாநாட்டில் ...!!!

1950ம் ஆண்டில் இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்தது. அன்றிலிருந்து 15 ஆண்டுகள் அதாவது 1965ம் ஆண்டு வரை ஆங்கிலம் ஆடசி மொழியாக இருக்கும். பின்னர் இந்தி ஆடசிமொழியாக இருக்கும் என்று அன்றைய சட்டம் குறிப்பிட்டது.  

1963 மா ஆண்டுகளி லேயே இது பற்றிய விவாதம் நடந்து வந்தது குறிப்பாக இந்து,இந்தியனெக்ச்பிரஸ், மெயில்போன்ற பத்திரிகைகள் கடுமையான நிலை எடுத்து எழுதின. மெயில் பத்திரிக்கை தன பிரசுரத்தை நிறுத்திக்கொண்டது.

அப்போது மதுரையில் இடதுசாரி மாணவர் இயக்கம் துளிர் விட்டுக் கொண்டிருந்தது.  பாலிடெக்னீக்,பொறியியல், மருத்து கல்லூரிகளில் மாணவர் இயக்கம் செயல்பட்டு வந்தது . அவர் கள் 1965ம் ஆண்டு ஜனவரி மாதம் ஊர்வலம் நடத்தி இந்த மொழிப் பிரசசினை பற்றி தீர்மானம்  நிறைவேற்ற விரும்பினார்கள்> இந்து பேசாதமக்கள்  விரும்பும்வரை ஆங்கிலம் நீடிக்கவேண்டும் என்பது அவர்களை கோரிக்கை.   

மதுரை மருத்துவக்கலாலுற்றி மாணவர்கள் டாக்டர் சேதுராமன் தலைமையில் செயல்பட்டார்கள் அவருக்குதொழிற்சங்கங்கள .குறிப்பாக எல் ஐ சி ஊழியர் சங்கம் சிறப்பாக ஆதரித்தது .

நான்கு மாசிவீதியில் ஊர்வலம்.பின்னர் தியாகிகள் சத்துக்கத்தில் ,தீர்மானம் நிறைவேற்ற முடிவாகியது.

நேரு ஆலால  விநாயகர் கோவிலிலிரு \ந்து வடக்கு மாசி வீதியில் ஊர்வலம் புறப்பட்டது. ராமாயணச்சாவடி அருகே வரும்போது வெள்ளையன் என்ற காங்கிரஸ் தொ(கு)ண்டர்  மாணவர்களை தாக்கினார் அன்று பிடித்த சனியன் காங்கிரசை இன்றும் எழ முடியாதபடி செய்து விட்டது.

கலைக்கல்லூரி மாணவர்கள் இவர்களுக்கு ஆதரவாக வந்தார்கள். நாராயணன் (இன்று தீக்கதிர் நாராயணன்),பா.செயப்பிரகாசம், சுருளிவேல் என்று பலர் வந்து போராட்டத்ததலைமை தாங்கி  நடத்தினர் .மதுரை,கோவை திருச்சி சென்னை என்று பல்கிப்பறந்தது>ஆந்திரா,ஒரிசா, மே .வங்கம் என்று அகிலஇந்திய மொழி ப்போராட்டமாக மாறியது.

தமுஎகசங்கத்தின் 14வந்து மாநாட்டின் கலை நிகழ்ச்சியின் பொது தோழர் எஸ் எ பி அவர்களை அருகில் அமர்ந்திருந்தேன் . 

"காஸ்யபன் ! இது செயப்பிரகாசம் " என்று அருகில் இருந்தவரை அறிமுகப்படுத்தினார்.

மொழிப்பவராட்டத்தின் போத முழுக்கால்ச்சட்டை,மேல் சைட்டை அணிந்து மாணவனாக பார்த்த செயப்பிரகாசம்,அவரதுக் "காடு" நூலை  மதுரையில் தெருத்தெருவாக விற்ற  நான் பார்த்தேன் .களமும் தூரமும் அவரை மாற்றி இருந்தது . பட்டறிவும், படிப்பறிவும் அவர் முகத்தில் கோடுகளாக மாறியிருந்தது. கட்டி அனைத்துக் கொண்டோம்.

ஐம்பது  ஆண்டுகளுக்கு பிறகு அந்த போர்விரனை பார்க்கிறேன்.

14வது மாநாடு என்ன ஏமாற்றவில்லை !!!


0 comments: