Tuesday, July 17, 2018




புதுச்சேரி தான் 

ஒரு முதல்வர் கலந்தது கொண்ட 

முதல் மாநாடு !!! 




தமுஎகசங்க மாநாட்டில் அமைசர்கள்  பலர் கலந்து கொண்டுள்ளனர் . இடது சரி இலக்கிய அமைப்பு என்பதால் நடமாடும் பல்கலைக்கழகமான நெடுஞ்செழியனிலிருந்து தலை வெட்டி தம்பி கிருஷ்ணசாமிவரை  வந்துள்ளனர் /செயலாளர்கள் எழுதி கொடுத்த  பேச்சை பேசுவார்கள் . அதிகம் சோ வியத் எழுத்தாளர்கள்பற்றி இருக்கும்.

பலசந்தர்ப்பங்களில் தமாஷாக இருக்கும். ஆண்டன் செகோவ் அவர்களுக்கும்,அந்தோணி கிராம்ஸிற்கும் வித்தியாசம் தெரியாமல் பேசியவர்கள் உண்டு.கார்க்கி என்றாலே தெரியும். பாவம் ஒரு அமைச்சர் மாநாட்டில் "மாக்சிமம் கார்க்கி " என்று என்றே கடைசிவரை  சொல்லி சிரிப்பாணி  காட்டியதும் உண்டு . 

பாண்டிசேரி முதலவர் வந்திருந்தார்.ரத,கஜ துர  பதா திகளோடு மேடை ஏறி அங்கிருந்த பிரமுகர்களை விரட்டிவிட்டு தன சீடர்களை அமர்த்தவில்லை. 

பார்வையாளர்களை இருந்த அரங்கம் சென்று அவர்களை வரவேற்பையே ஏற்றும் வாழ்த்துக்களை சொல்லியும் பின்னர் மேடை ஏறினார்.(வைரமுத்து இது பற்றி கருத்து சொல்லி இருக்க வேண்டாமோ )

இன்றைய நிலைமையில் ஒன்று பட்டு இருக்க வேண்டியது ப்றறிக்குறி ப்பிட்டார்.நிகழ்ச்ச்சிகளை முடிவடையும் வரை  இருந்து (பாதியில் அம்பேல் என்று விட்டுவிட்டு ஓடிவிடா மல் ) கவுரவித்தார் .

முதல்வர் நாராயணசாமி அவர்கள்  மாநாட்டிற்கு வந்ததற்கு முக்கிய காரணமுண்டு.

ஒருவர் மாநிலங்கள் அவை உறுப்பினர்தோழர்  டி .கே ரங்கராஜன் அவர்கள். 

மற்றோருவர் அந்த சமுகப் போராளி தோழர்  முருகன் !

இருவருக்கும் தமு எ க சங்கம் கடமைப்பட்டிருக்கிறது. !!!








0 comments: